ஐபிஎல் வரலாறு : சவாலான கடைசி ஓவர்களில் அதிக சிக்ஸர்களை பறக்கவிட்ட – டாப் 5 மாஸ் பேட்ஸ்மேன்கள்

Dhoni-1
- Advertisement -

ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ள ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 29-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்குகிறது. இந்த வருடம் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 2 மாதங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க உள்ளது. வரும் மே 29-ஆம் தேதி வரை 65 நாட்கள் நடைபெறும் இந்த தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் சந்திக்கின்றன.

ipl

- Advertisement -

கடைசி ஒவரின் மாஸ் ஹீரோக்கள்:
பொதுவாக ஐபிஎல் தொடர் என்றாலே அதில் பறக்கவிடப்படும் சிக்ஸர்கள் மற்றும் பவுண்டரிகளை பார்ப்பதற்காகவே பெரும்பாலான ரசிகர்கள் மைதானத்திற்கு நேரடியாக செல்வார்கள். அப்படி நம்பிக்கையோடு வரும் ரசிகர்களுக்கு சிக்ஸர் மழை பொழிந்து விருந்து படைக்கும் பேட்ஸ்மேன்கள் அவர்களின் நெஞ்சங்களில் நீங்காத இடத்தை பிடிப்பார்கள்.

அதேபோல் இந்த ஐபிஎல் தொடரில் ஒரு இன்னிங்ஸ்சில் 20 ஓவர்கள் வீசப்படும் நிலையில் அதன் கடைசி ஓவரில் அடிக்கப்படும் சிக்ஸர்களுக்கு ரசிகர்களிடையே தனி மவுசு உள்ளது. ஏனெனில் எப்போதும் அந்த கடைசி ஓவரை ஒரு தரமான பந்துவீச்சாளர் தான் வீசுவார் என்ற நிலைமையில் அவர்களுக்கு எதிராக தைரியமாக நின்று சிக்சர்களை பறக்க விடுவதில் ஒரு சில வீரர்கள் மட்டுமே கை தேர்ந்தவர்களாக உள்ளனர். அந்த வகையில் ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் 20-வது ஓவரில் அதிக சிக்ஸர்களை தெறிக்கவிட்ட டாப் 5 மாஸ் பேட்ஸ்மேன்களை பற்றி பார்ப்போம்.

5. ரவீந்திர ஜடேஜா: சமீப காலங்களாக இந்திய அணியின் முதன்மையான ஆல்-ரவுண்டராக வலம் வரும் ரவீந்திர ஜடேஜா கடந்த பல வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடி வருகிறார். அந்த அணிக்கு பினிசராக இருந்த கேப்டன் எம்எஸ் தோனி கடந்த சில வருடங்களாக மோசமான பார்ம் காரணமாக ரன்கள் அடிக்க தடுமாறிய போது அந்த இடத்தை நிரப்பிய ரவீந்திர ஜடேஜா சென்னை அணியின் புதிய பினிஷராக உருவெடுத்துள்ளார்.

- Advertisement -

கடந்த பல வருடங்களாக அந்த அணியின் பல வெற்றிகளில் முக்கிய பங்காற்றி வரும் அவர் இதுநாள் வரை விளையாடிய 20-வது ஓவர்களில் 22 சிக்ஸர்களை அடித்து இந்த பட்டியலில் 5-வது இடம் பிடிக்கிறார்.

pandya 1

4. ஹர்டிக் பாண்டியா: எம்எஸ் தோனிக்கு பின் இந்திய அணியின் அடுத்த பினிஷராக வலம் வரும் நட்சத்திர ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா கடந்த காலங்களில் மும்பை அணிக்கு பினிசராக செயல்பட்டு பல வெற்றிகளை தேடிக்கொடுத்தார். இந்த வருடம் குஜராத் அணிக்கு கேப்டனாக செயல்பட உள்ள அவர் 23 சிக்ஸர்களை அடித்து இந்தப் பட்டியலில் 4-வது இடம் பிடித்துள்ளார்.

- Advertisement -

3. ரோஹித் சர்மா: மும்பை இந்தியன்ஸ் அணியின் முதுகெலும்பு மற்றும் கேப்டன் ரோகித் சர்மா ஒரு ஓபனிங் பேட்ஸ்மேன் என்பதால் இந்த பட்டியலில் இடம் பிடிப்பதே ஒரு ஆச்சரியமான ஒன்றாகும். ஏனெனில் பொதுவாக தொடக்க வீரராக ஆரம்ப கட்ட பவர்ப்ளே ஓவர்களில் விளையாடும் அவர் கடைசி ஓவர் வரை தாக்குப் பிடிப்பது கடினமான ஒன்றாகும். அந்த வகையில் இதுநாள் வரை அவர் விளையாடிய 20-வது ஓவரில் 23 சிக்சர்களை அடித்து இந்தப் பட்டியலில் 3-ம் இடம் பிடிக்கிறார்.

rohith

2. கிரண் பொல்லார்ட்: வெஸ்ட் இண்டீஸ் அணியின் முரட்டுத்தனமான அதிரடி வீரர் கிரண் பொல்லார்ட் கடந்த பல வருடங்களாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பினிஷராக செயல்பட்டு வருகிறார். பொதுவாக கடைசி கட்ட நேரத்தில் களமிறங்கும் அவர் மும்பை தோற்று விடும் என்று அந்த அணி ரசிகர்களே நினைத்த பல போட்டிகளில் தனி ஒருவனாக நின்று அதிரடியாக சிக்சர்களை பறக்கவிட்டு வெற்றியைத் தேடி கொடுத்துள்ளார்.

- Advertisement -

இதனால் இந்த வருடம் மீண்டும் அந்த அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள அவர் இதுநாள் வரை 20-வது ஓவர்களில் 30 சிக்ஸர்களை பறக்கவிட்டு இந்தப் பட்டியலில் 2-வது இடத்தை பிடிக்கிறார்.

dhoni 1

1. எம்எஸ் தோனி: இந்தியாவை போலவே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் கேப்டன்ஷிப் செய்து அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி வரும் எம்எஸ் தோனி கடைசி நேரத்தில் களமிறங்கி எதிரணி பவுலர்களை சிக்ஸர்களாக பறக்க விடுவதில் வல்லவர். அவர் களத்தில் இருக்கும் வரை கடைசி பந்து முடியும் வரை சென்னை அணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை அந்த அணி ரசிகர்களுக்கு எப்போதுமே இருக்கும்.

அந்த அளவுக்கு ஒரு போட்டியில் தனது கடைசி மூச்சு வரை வெற்றிக்காக போராடும் அவர் சென்னை அணி தோற்க இருந்த எத்தனையோ போட்டிகளில் கடைசி நேரத்தில் களமிறங்கி தனி ஒருவனாக அதிரடி சரவெடியாக பேட்டிங்கை செய்து வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார்.

இதையும் படிங்க : போன வருஷம் இருந்த குறையை நீக்கி செம ஸ்ட்ராங்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – இதை கவனிச்சீங்களா?

அந்த அளவுக்கு கடைசி நேர பரபரப்பான சூழ்நிலைகளில் கூலாக பேட்டிங் செய்யக்கூடிய அவர் இதுநாள் வரை விளையாடிய 20-வது ஓவர்களில் 50 சிக்ஸர்களை பறக்க விட்டு ஐபிஎல் வரலாற்றில் கடைசி ஓவரில் அதிக சிக்சர்களை அடித்த பேட்ஸ்மேன் என்ற மாஸ் சாதனையை படைத்துள்ளார். இப்பட்டியலில் 2-வது இடத்தில் இருப்பவருக்கும் முதலிடத்தில் இருக்கும் அவருக்கும் இடைப்பட்ட வித்தியாசத்தை பார்த்தாலே எம்எஸ் தோனி ஒரு மிகசிறந்த பினிசெர் என அழைப்பதற்கு தகுதியானவர் என்று புரிந்து கொள்ள முடியும்.

Advertisement