போன வருஷம் இருந்த குறையை நீக்கி செம ஸ்ட்ராங்கான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி – இதை கவனிச்சீங்களா?

CSKvsSRH
- Advertisement -

ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோப்பையை வென்ற அணிகளாக மும்பை மற்றும் சென்னை அணிகள் திகழ்கின்றன. ஆனால் ஒரு சில அணிகள் நல்ல வீரர்களை வைத்து கொண்டும் ஒரு சில முறை மட்டுமே கோப்பையை கைப்பற்றி இருப்பார்கள். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு ஐபிஎல் கோப்பையை கைப்பற்றிய சன் ரைசர்ஸ் அணியானது தொடர்ந்து பல நல்ல வீரர்களை வைத்திருந்தாலும் கடந்த பல ஆண்டுகளாகவே கோப்பையைத் தவற விட்டு வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த சில சீசன்களாகவே டேவிட் வார்னரின் தலைமையில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

SRH

- Advertisement -

இதன்காரணமாக சன்ரைசர்ஸ் அணி அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்கியது மட்டுமின்றி அணியில் இருந்தும் அவரை கழற்றி விட்டது. இப்படி தொடர்ச்சியாக சன்ரைசர்ஸ் அணி அடைந்த தோல்விக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது யாதெனில் அந்த அணியின் துவக்க வீரர்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நல்ல துவக்கம் கொடுத்தாலும் மிடில் ஆர்டரில் ஏற்பட்ட வீக்னஸ் காரணமாகவே அவர்கள் தொடர்ச்சியாக தோல்வி அடைந்தனர்.

குறிப்பாக சன் ரைசர்ஸ் அணியின் மிடில் ஆர்டரில் எத்தனையோ வீரர்களை மாற்றி மாற்றி பார்த்தும் அந்த அணி சொதப்பியதால் தற்போது இந்த ஆண்டு முற்றிலுமான பலம் வாய்ந்த மிடில் ஆர்டரை அவர்கள் சரியான முறையில் ஏலத்தில் எடுத்துள்ளனர். குறிப்பாக மூன்றாவது இடத்தில் வில்லியம்சன், நான்காவது இடத்தில் எய்டன் மார்க்ரம், ஐந்தாவது இடத்தில் நிக்கலஸ் பூரன் ஆகியோர் விளையாடுவார்கள்.

Williamson

ஆறாவது இடத்தில் அப்துல் சமத் மற்றும் 7ஆம் இடத்தில் பேட்டிங் தெரிந்த வேகப்பந்து வீச்சாளரான வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரொமேரியோ ஷெப்பர்ட் ஆட இருப்பது அந்த அணியின் மிடில் ஆர்டரை மிகவும் பலப்படுத்தி உள்ளது. ஏற்கனவே சன்ரைஸ் அணிக்கு மிகப்பெரிய சிக்கலாக இருந்த இந்த மிடில் ஆர்டர் பிரச்சனையை போக்கும் வகையில் தற்போது அந்த அணி சரியான வீரர்களை ஏலத்தில் எடுத்து உள்ளது.

- Advertisement -

இதன்காரணமாக தற்போது அவர்களின் பேட்டிங் ஆர்டர் அதிரடியும், அனுபவமும் நிறைந்த ஒன்றாக நல்ல பலத்தினை கொண்டு வந்து சேர்த்துள்ளது என்றே கூறலாம். பவுலிங்கில் எப்போதுமே பிரச்சனை இல்லாமல் திகழும் அந்த அணி இம்முறையும் நடராஜன், புவனேஸ்வர் குமார், உம்ரான் மாலிக், வாஷிங்டன் சுந்தர் என அசத்தலான பந்து வீச்சாளர்களை வைத்துள்ளது.

இதையும் படிங்க : ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் 4 ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

அவர்கள் உற்று நோக்கும் ஒரே விஷயமாக இருந்த பேட்டிங் ஆர்டரை தற்போது இந்த ஆண்டு அந்த அணி நிர்வாகம் பலப்படுத்தியதால் நிச்சயம் இந்த புதிய சன்ரைசர்ஸ் அணி எதிரணிகளுக்கு ஆரம்பத்திலேயே பயத்தினை காட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Advertisement