ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியின் 4 ஓவர்களில் அதிக ரன்களை வாரி வழங்கிய டாப் 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Most Runs Conceded IN IPL
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26-ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 29-ம் தேதி வரை 2 மாதங்கள் ரசிகர்களுக்கு விருந்து படைக்க தயாராகி வருகிறது. இம்முறை புதிதாக சேர்க்கப்பட்டுள்ள லக்னோ மற்றும் குஜராத் ஆகிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்கு பெறுவதால் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த வருடம் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெற உள்ள இந்த தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்றன.

ipl trophy

- Advertisement -

வள்ளல் பரம்பரை:
ஐபிஎல் தொடர் என்றாலே அதில் பறக்கவிடப்படும் பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் ஆகியவை ரசிகர்களிடையே மிகவும் புகழ் பெற்றதாகும். ஒரு சில நேரங்களில் எதிரணி பந்துவீச்சாளர்களை கருணையே இல்லாமல் கதற கதற அடிக்கும் பேட்ஸ்மேன்கள் ரன்களைக் குவித்து தங்கள் அணிக்கு வெற்றியை தேடித் தருவார்கள். அதேசமயம் அவர்கள் அந்த அளவுக்கு அடிக்கிறார்கள் என்றால் அந்த பந்துகளை வீசும் பந்துவீச்சாளர்கள் மோசமாக செயல்படுகிறார்கள் என்று அர்த்தம். அந்த வகையில் ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிக ரன்களை வாரி வழங்கிய வள்ளல் பரம்பரை பந்துவீச்சாளர்களை பற்றி பார்ப்போம்.

1. பசில் தம்பி: கேரளாவைச் சேர்ந்த இளம் வீரர் பசில் தம்பி கடந்த 2018-ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்காக விளையாடினார். அப்போது பெங்களூருவில் நடந்த ஒரு லீக் போட்டியில் அந்த அணிக்கு எதிராக பந்துவீசிய அவரை வெளுத்து வாங்கிய ஏபி டிவில்லியர்ஸ் போன்ற வீரர்கள் கருணையே இல்லாமல் அடித்தனர். அந்தப் போட்டியில் 4 ஓவர்களை வீசிய அவர் 70 ரன்களை 17.50 என்ற படுமோசமான எக்கனாமியில் வாரி வழங்கினார். இதன் வாயிலாக ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை வழங்கிய பந்துவீச்சாளர் என்ற மோசமான சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

basil-thampi

2. முஜீப் உர் ரஹ்மான்: கடந்த 2019-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்காக விளையாடிய ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த சுழல் பந்துவீச்சாளர் முஜிப் உர் ரகுமான் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் 4 ஓவர்களில் 66 ரன்களை 16.50 என்ற மோசமான எக்கனாமியில் வீசினார். இதன் வாயிலாக ஐபிஎல் போட்டிகளில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்களை வாரி வழங்கிய வெளிநாட்டு பந்துவீச்சாளர் என்ற பரிதாப சாதனையை அவர் படைத்துள்ளார்.

- Advertisement -

3. இஷாந்த் சர்மா: கடந்த 2013-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணிக்காக இந்திய வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா விளையாடினார். அப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணிக்கு சுரேஷ் ரெய்னா விஸ்வரூபம் எடுத்து 99* ரன்கள் விளாசி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். சதத்தை நழுவ விட்ட அவரின் அந்த அதிரடி ஆட்டத்தில் சிக்கிய இந்திய வேக பந்து வீச்சாளர் இஷாந்த் ஷர்மா 4 ஓவர்களில் 66 ரன்களை வாரி வழங்கி இப்பட்டியலில் 3-வது பந்துவீச்சாளராக இடம் பிடித்துள்ளார்.

ishanth 2

4. உமேஷ் யாதவ்: கடந்த 2013-ஆம் ஆண்டு பெங்களூர் அணிக்கு எதிரான ஒரு லீக் போட்டியில் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்காக விளையாடிய உமேஷ் யாதவ் 4 ஓவர்களில் 65 ரன்களை 16.25 என்ற எகனாமியில் வாரி வழங்கினார். இருப்பினும் அவரை தவிர அந்தப் போட்டியில் விளையாடிய எஞ்சிய பந்து வீச்சாளர்கள் 40 ரன்களுக்கு மேல் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

5. சந்தீப் சர்மா: கடந்த 2014-ஆம் ஆண்டு ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணிக்காக பந்துவீசிய இந்திய வீரர் சந்தீப் ஷர்மா 4 ஓவர்களில் 1 விக்கெட் உட்பட 65 ரன்களை கொடுத்து இந்த பட்டியலில் 5-வது இடத்தை பிடிக்கிறார். இருப்பினும் அந்த போட்டியில் மிட்செல் ஜான்சன் உள்ளிட்ட இதர பந்துவீச்சாளர்கள் ஓரளவு சிறப்பாக பந்து வீசியதன் காரணமாகவும் சேசிங் செய்தபோது சிறப்பாக பேட்டிங் வெளிப்படுத்திதயன் காரணமாக பஞ்சாப் அணி வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement