அவருக்கு இன்னும் எவ்ளோ சேன்ஸ் குடுத்தாலும் வேஸ்ட் தான். அவரை முதல்ல தூக்குங்க – ரித்தீந்தர் சிங் கருத்து

Reetinder
- Advertisement -

ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணியானது தற்போது நியூசிலாந்தில் நடைபெற்று வரும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 306 ரன்களை குவித்தும் தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றுள்ள விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட் குறித்து ஏகப்பட்ட விமர்சனங்கள் சமூக வலைதளத்தில் நிலவி வருகின்றன.

- Advertisement -

கடந்த பல தொடர்களாகவே மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் அவரை அணியிலிருந்து நீக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெளுத்து வருகின்றன. நடைபெற்று முடிந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் துவக்க வீரராக களம் இறங்கிய அவர் மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி இருந்தார். அதோடு தொடர்ச்சியாக அவர் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தாலும் அணி நிர்வாகம் அவருக்கு ஆதரவு கொடுத்து வாய்ப்புகளை வழங்குவது தவறு என்ற பேச்சும் தற்போது எழுந்துள்ளது.

இந்நிலையில் ரிஷப் பண்டின் இந்த மோசமான ஆட்டம் குறித்தும் அவரை நீக்கிவிட்டு சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்பது குறித்தும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான ரீதீந்தர் சிங் சோதி வெளிப்படையாக தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் : ரிஷப் பண்ட்டிற்கு இந்திய அணியின் நிர்வாகம் ஏகப்பட்ட வாய்ப்புகளை வழங்கி விட்டது. ஆனால் அவை எதையுமே அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

samson

என்னை பொறுத்தவரை சஞ்சு சாம்சனை அணிக்குள் கொண்டு வருவதற்கான நேரம் வந்துவிட்டது. ஏனெனில் இனியும் சஞ்சு சாம்சனை சேர்க்க தாமதித்தால் இனிவரும் ஐசிசி தொடர்களை நாம் இழக்க வேண்டி வரும். ரிஷப் பண்டிற்கு ஏகப்பட்ட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டுள்ளது அதை அனைத்துமே அவர் வீணடித்துள்ளார். இப்பொழுது அணியில் புதிய வீரர்களை சேர்ப்பதற்கான நேரம் வந்துள்ளது என்று நினைக்கிறேன்.

- Advertisement -

அந்த வகையில் ஒருவருக்கு எவ்வளவு வாய்ப்பு தான் வழங்க முடியும். ரிஷப் பண்ட்டை அணியிலிருந்து நீக்குங்கள் அவருக்கு பதிலாக சஞ்சு சாம்சனை கொண்டு வாருங்கள் என ரிதீந்தர் சோதி வெளிப்படையாகவே தனது கருத்தினை அழுத்தமாக குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியது போலவே : ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடினாலும் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை பொறுத்த வரை தேவையற்ற ஷாட்டுகளை விளையாடி ஆட்டமிழப்பதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.

இதையும் படிங்க : இதெல்லாம் ஒரு டிசைனா? கிரிக்கெட் வரலாற்றில் பரிசளிக்கப்பட்ட 7 மோசமான வெற்றி கோப்பைகள் – ஸ்வாரஸ்ய பதிவு

அதே வேளையில் சஞ்சு சாம்சன் தனக்கு கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சிறப்பாக விளையாடி தனது முதிர்ச்சியை வெளிப்படுத்துகிறார். எனவே சஞ்சு சாம்சனை அணியில் சேர்க்க வேண்டும் என்ற இவரது கருத்து ரசிகர்கள் மத்தியிலும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement