இதெல்லாம் ஒரு டிசைனா? கிரிக்கெட் வரலாற்றில் பரிசளிக்கப்பட்ட 7 மோசமான வெற்றி கோப்பைகள் – ஸ்வாரஸ்ய பதிவு

Aus vs Pak Buiscuit Cup Trophy
Advertisement

விளையாட்டில் தங்களது நாட்டுக்காக வெற்றி பெற வேண்டும் என்ற லட்சியத்துடன் கடினமாக உழைத்து களத்தில் எதிரணி கொடுக்கும் சவால்களை கடந்து வெற்றி பெறும் வீரர்களுக்கு இறுதியாக வெற்றிக்கோப்பை பரிசளிப்பது காலம் காலமாக நடந்து வருகிறது. அந்த கோப்பையை முத்தமிட வேண்டும் என்ற லட்சியத்துடனையே அந்த குறிப்பிட்ட தொடரில் முழு திறமையை வெளிப்படுத்தி உயிரைக் கொடுத்து விளையாடும் வீரர்கள் இறுதியில் தங்களது கனவு வெற்றி கோப்பையை முத்தமிடும் போது கிடைக்கும் ஆத்ம திருப்திக்கு அளவிருக்காது என்றே சொல்லலாம்.

worldcup

அப்படி விளையாட்டில் வெற்றி கோப்பை என்பது மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படும் நிலையில் ஒவ்வொரு தொடருக்கும் அது வித்தியாசமாக வடிவமைக்கப்படும். குறிப்பாக கிரிக்கெட்டில் 50 ஓவர், 20 ஓவர் உலகக் கோப்பை, டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற ஐசிசி கோப்பைகளும் பிசிசிஐ நடத்தும் ஐபிஎல் கோப்பையும் யாராலும் மறக்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் மனம் கவர்ந்த டிசைன்களில் வடிவமைக்கப்பட்டு வரலாற்றில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

- Advertisement -

ஆனால் சாதாரண இரு தரப்பு தொடர்களில் சில சமயங்களில் வடிவமைக்கப்படும் கோப்பைகள் அத்தொடரை ஸ்பான்சர் செய்யும் நிறுவனத்தை அடையாளப்படுத்துவதற்காக வேடிக்கையான முறையில் சிரிப்பை உண்டாக்கும் வகையில் வடிவமைக்கப்படும். அந்த வகையில் சர்வதேச கிரிக்கெட்டில் ரசிகர்களை கலகலக்க வைத்த சில வேடிக்கையான கோப்பைகளை பற்றி பார்ப்போம்:

1. கொக்ககோலா கோப்பை: இப்போதும் பிரபல குளிர்பான நிறுவனமாக திகழும் கொக்ககோலா நிறுவனம் கடந்த 1998இல் சார்ஜாவில் நடைபெற்ற முத்தரப்பு தொடருக்கு ஸ்பான்சர்சிப் செய்தது. அத்தொடரில் யாராலும் மறக்க முடியாத சச்சின் டெண்டுல்கரின் அடுத்தடுத்த சதங்களால் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி இந்தியா வென்றது.

- Advertisement -

ஆனால் அந்த சரித்திர வெற்றிக்கு கொக்ககோலா சோடா பாட்டிலின் மேல் இருக்கும் மூடியை அப்படியே கோப்பை என்ற பெயரில் செய்து கேப்டன் முகமது அசாருதீனிடம் பரிசளிக்கப்பட்டது இந்திய ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

2. பிஸ்கட் கோப்பை: கடந்த 2018இல் துபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் – ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஒரு தொடருக்கு டியூசி எனும் பிஸ்கட் நிறுவனம் ஸ்பான்சர்ஷிப் செய்தது.

- Advertisement -

அதில் ஸ்டம்ப்களுக்கு உள்ள பெயில்ஸ்க்கு பதிலாக அந்நிறுவனத்தின் பெரிய பிஸ்கட் மேலே இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட கோப்பை வெற்றியாளருக்கு வழங்கப்பட்டதை பார்த்த ரசிகர்கள் வரலாற்றிலேயே இதுதான் மிகச்சிறந்த கோப்பை என்று கிண்டலடித்தார்கள்.

3. பாம்பு கோப்பை: கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் பங்கேற்ற 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3 – 0 என்ற கணக்கில் ஷிகர் தவான் தலைமையிலான இளம் இந்திய அணி கைப்பற்றியது.

- Advertisement -

அத்தொடருக்கு ஸ்பான்சர் செய்த நிறுவனத்தின் முதல் ஆங்கில “எஸ்” எழுத்தை பிரதிபலிப்பது போல் நடுவே ஒரு கண்ணாடி பந்தை வைத்து வெற்றி கோப்பை இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டது. ஆனால் பார்ப்பதற்கு பாம்பு போல் இருந்ததால் வெற்றியாளருக்கு பாம்பு பரிசாக கொடுத்தீர்களா என்று ரசிகர்கள் கிண்டலடித்தனர்.

4. மோசமான டிசைன்: வரலாற்று சிறப்புமிக்க பார்டர் – கவாஸ்கர் கோப்பை கடந்த 1996ஆம் ஆண்டு முதல் முறையாக நடைபெற்றது. சொந்த மண்ணில் நடைபெற்ற அத்தொடரில் சச்சின் டெண்டுல்கர் தலைமையிலான இந்தியா ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது.

அதற்கு சாதாரண மரப்பலகையின் மேல் ஒரு வெள்ளிப் பந்து இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட கோப்பை பரிசளித்தது நிறைய கிண்டல்களை உருவாக்கியதால் அதன் பின் சிறப்பான கோப்பை வடிவமைக்கப்பட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது.

Jayawardane Janasakthi Trophy

5. ஜன்சக்தி கோப்பை: கடந்த 2004இல் நடைபெற்ற ஒருநாள் தொடரில் தென் ஆப்பிரிக்காவை ஒயிட்வாஷ் செய்த இலங்கைக்கு தாறுமாறான டிசைன் கொண்ட ஒரு கோப்பை பரிசளிக்கப்பட்டது.

அதை கையில் வாங்கிய கேப்டன் ஜெயவர்த்தனே எப்படி இதை நிற்க வைக்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் சிரித்த முகத்துடன் போஸ் கொடுத்தார். ஏனெனில் அந்த கோப்பையின் நொடியில் மிகப்பெரிய பந்து இருந்தது.

INd vs Pak Rahul Dravid Inzamam

6. டிஎல்எப் கப்: கடந்த 2006இல் இந்தியா – பாகிஸ்தான் மோதிய ஒருநாள் கிரிக்கெட் தொடர் சமனில் முடிந்த நிலையில் அதற்காக கொடுக்கப்பட்ட கோப்பையை ராகுல் டிராவிட் – இன்சமாம் ஆகிய இருவரும் கஷ்டப்பட்டு தூக்கிக்கொண்டு போஸ் கொடுத்தார்கள்.

ஏனெனில் அவ்ளோ பெரிதாக இருந்த அந்த கோப்பை சம்பந்தமற்ற நாடுகளின் கொடிகள், உலகப் பந்து என நம்மால் கணிக்க முடியாத டிசைனில் வடிவமைக்கப்பட்டிருந்தது.

7. கவரிமான் கோப்பை: கடந்த 2021இல் இலங்கை மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து ஒயிட் வாஷ் வெற்றி பெற்றது. அதற்கு மூஸ் எனப்படும் ஸ்பான்சர்ஷிப் நிறுவனத்தை பிரதிபலிக்கும் வகையில் கோப்பையின் மேலே மானின் கொம்புகள் இருப்பது போல் வடிவமைக்கப்பட்ட கோப்பை கேப்டன் ஜோ ரூட்டுக்கு பரிசளிக்கப்பட்டது. அதை தனது தலையில் இருப்பது போல் பின்னே வைத்து அவர் ஜாலியாக கொடுத்த போஸ் மறக்க முடியாது.

Advertisement