இந்திய அணியில் இவர் இல்லாம போனா டி20 உலககோப்பை கஷ்டம் தான் – ரிதீந்தர் சிங் எச்சரிக்கை

Reetinder
- Advertisement -

இன்னும் சில தினங்களில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஆசிய கோப்பை தொடரானது துவங்க உள்ளது. வருகிற ஆகஸ்ட் 27ஆம் தேதி துவங்கும் இந்த தொடரானது செப்டம்பர் 11-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆசியக் கோப்பைக்கான தொடரில் மொத்தம் ஆறு அணிகள் பங்கேற்கப்போவதால் எந்த அணி கோப்பையை வெல்லப் போகிறது என்பது குறித்து எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதோடு இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் 28-ஆம் தேதி மோதும் முதல் போட்டியும் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Asia-Cup

- Advertisement -

இந்நிலையில் இந்த தொடருக்கான இந்திய அணிகள் பும்ரா மற்றும் ஹர்ஷல் பட்டேல் ஆகியோர் காயம் காரணமாக இடம்பெறாத வேளையில் வேகப்பந்து வீச்சாளர்களாக ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகிய மூன்று பேர் மட்டுமே பங்கேற்க இருக்கின்றனர்.

அதேபோன்று பாகிஸ்தான் அணியில் ஷாகின் அப்ரிடி, இலங்கை அணியில் துஷ்மந்தா சமீரா ஆகியோர் விளையாடவில்லை. இந்நிலையில் பும்ரா இல்லாமல் இந்திய அணி ஆசிய கோப்பையில் விளையாட இருப்பதால் இந்திய அணிக்கு அது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என்று பலரும் தங்களது கருத்துக்களை கூறி வருகின்றனர்.

Harshal-and-Bumrah

இந்நிலையில் தற்போது ஆசிய கோப்பை தொடரில் விளையாடாத பும்ரா எதிர்வரும் டி20 உலக கோப்பையிலும் விளையாடுவாரா? மாட்டாரா? என்ற சந்தேகம் எழுந்துள்ள வேளையில் டி20 உலக கோப்பைக்குள் பும்ரா மட்டும் சரியாகவில்லை என்றால் நிச்சயம் இந்திய அணிக்கு அது உலகக் கோப்பை தொடரின் போது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் என இந்திய அணியின் முன்னாள் வீரரான ரிதீந்தர் சிங் சோதி தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் கூறுகையில் : பும்ரா இல்லாதது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக மாறும். ஏனெனில் தற்போதுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டாலும் யாராலும் பும்ராவின் இடத்தை நிரப்ப முடியாது.

இதையும் படிங்க : ஆசியக்கோப்பை : டிராவிட்டுக்கு கொரோனா. தற்காலிக பயிற்சியாளர் நியமனம் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

உலகக்கோப்பை தொடரானது நெருங்கி வரும் வேளையில் பும்ராவின் இடம் தற்போது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. ஒருவேளை அவர் டி20 உலகக் கோப்பை தொடருக்குள் உடற்தகுதி பெறவில்லை என்றால் இந்திய அணிக்கு அது பெரிய சிக்கலாக மாறும் என்று ரிதீந்தர் சிங் சோதி எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement