ஆசியக்கோப்பை : டிராவிட்டுக்கு கொரோனா. தற்காலிக பயிற்சியாளர் நியமனம் – பி.சி.சி.ஐ அறிவிப்பு

Dravid
Advertisement

ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பைக்கு தயாராகும் வகையில் தற்போது ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை வீரர்களை கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. வரும் ஆகஸ்ட் 27-ஆம் தேதி துவங்கும் இந்த ஆசிய கோப்பை தொடரானது செப்டம்பர் இரண்டாம் வாரம் வரை நடைபெற உள்ளது. இந்த தொடருக்காக ஆசிய கண்டத்தினை சேர்ந்த ஆறு அணிகள் பல பரீட்சை நடத்த இருப்பதினால் இந்த ஆசிய கோப்பையை கைப்பற்ற போகும் அணி எது? என்பது குறித்த எதிர்பார்ப்பு தற்போது ரசிகர்கள் மத்தியில் உச்சத்தில் உள்ளது.

ஏற்கனவே ஆசிய கோப்பை தொடருக்கான அணிகள் அறிவிக்கப்பட்ட வேளையில் சில முக்கிய நட்சத்திர வீரர்கள் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறி வரும் வேளையில் தற்போது இந்திய அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிட் இந்த ஆசிய கோப்பை தொடருக்கான இந்திய அணியுடன் செல்ல மாட்டார் என்ற தகவல் வெளியாகி உள்ளது.

- Advertisement -

அதன்படி இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளரான ராகுல் டிராவிடுக்கு தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் அவர் ஐக்கிய அரபு அமீரகம் பயணிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் அடுத்த பத்து நாட்களுக்கு அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என்பதன் காரணமாக இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளர் நியமிக்கப்படுவார்களா? என்ற கேள்வியும் எழுந்தது.

இந்நிலையில் ஆசியக் கோப்பை தொடருக்கான இந்திய அணியின் தற்காலிக தலைமை பயிற்சியாளராக வி.வி.எஸ் லட்சுமணன் நியமிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ தங்களது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

- Advertisement -

அதன்படி ஜிம்பாப்வே சுற்றுப்பயணத்திற்கான இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக சென்றிருருந்த லட்சுமணன் மற்றும் அந்த தொடரில் இடம்பெற்று விளையாடிய கே.எல் ராகுல், தீபக் ஹூடா, ஆவேஷ் கான் ஆகியோரும் நேரடியாக ஜிம்பாப்வே-விலிருந்து ஐக்கிய அரபு அமீரகம் பயணம் மேற்கொள்கின்றனர் என்று தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : நான் டக் அவுட் ஆனாலும் சரி, செஞ்சுரி அடிச்சாலும் சரி. எதையும் பெருசா எடுத்துக்க மாட்டேன் – இளம்வீரர் கருத்து

ராகுல் டிராவிடிற்கு கொரோனா சரியானதும் ஆசிய கோப்பை தொடரின் பாதியில் இந்திய அணியுடன் இணைவார் என்றும் அதுவரை லக்ஷ்மனனே இந்திய அணியின் பயிற்சியாளராக செயல்படுவார் என்றும் பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement