நான் டக் அவுட் ஆனாலும் சரி, செஞ்சுரி அடிச்சாலும் சரி. எதையும் பெருசா எடுத்துக்க மாட்டேன் – இளம்வீரர் கருத்து

Indian Team
- Advertisement -

இந்திய அணியில் தற்போது ஏகப்பட்ட வீரர்கள் மிகச் சிறப்பாக விளையாடி வருவதால் பிளேயிங் லெவனில் வாய்ப்பு கிடைப்பது என்பது மிக கடினமான ஒரு விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் ரோகித் சர்மா தலைமையிலான தற்போதைய இந்திய அணியில் சுழற்சி முறையில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு வருவதால் முதன்மை வீரர்களுக்கே அணியில் இடம் பிடிக்க கடுமையான போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் ரோகித் சர்மா தலைமையிலான முதன்மை அணியை தவிர்த்து மற்றொரு அணியையும் பிரிக்கும் அளவிற்கு தற்போது இந்திய அணியில் ஏகப்பட்ட திறமை வாய்ந்த வீரர்கள் நிரம்பி வழிகின்றனர்.

India Dhawan

- Advertisement -

இந்நிலையில் கடந்த 2021-ஆம் ஆண்டு கொல்கத்தா அணிக்காக துவக்க வீரராக களம் இறங்கி அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆல்ரவுண்டர் வெங்கடேஷ் ஐயர் வெகுவிரைவிலேயே இந்திய அணியில் இடம் பிடித்தார். ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்திய அணியில் இருந்து தற்காலிக ஓய்வினை எடுத்தபோது ஆல் ரவுண்டராக அணியில் இடம் பிடித்த வெங்கடேஷ் ஐயர் ஐபிஎல் தொடரில் விளையாடிய அளவிற்கு சர்வதேச கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்படவில்லை.

அதற்கு அடுத்து பாண்டியா மீண்டும் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணியில் நுழைந்துள்ளதால் தற்போது வெங்கடேஷ் ஐயர் இந்திய அணியில் இருந்து கழற்றி விடப்பட்டுள்ளார். இந்நிலையில் தான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் விதம் குறித்தும் மீண்டும் இந்திய அணியில் கம்பேக் குடுப்பது குறித்தும் பேசியுள்ள வெங்கடேஷ் ஐயர் கூறுகையில் :

venky

நான் ஒரு விஷயத்தில் மட்டும் மிகத் தெளிவாக இருக்கிறேன். என்னுடைய ப்ராசஸில் மட்டும் நான் கவனம் செலுத்தி ஒவ்வொரு போட்டியிலும் விளையாடப்போகிறேன். அது பேட்டிங்காக இருந்தாலும் சரி, பவுலிங்காக இருந்தாலும் சரி என்னுடைய ப்ராசஸ் சரியாக இருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய எண்ணம்.

- Advertisement -

ஒரு போட்டியில் நான் டக்அவுட் ஆனாலோ அல்லது செஞ்சுரி அடித்தாலோ அல்லது எத்தனை ரன்கள் குவித்தாலோ சரி அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன். என்னுடைய உழைப்பை மட்டும் தொடர்ச்சியாக விடாமல் செய்ய நினைக்கிறேன். பந்துவீச்சிலும் சரி என்னால் முடிந்தவரை விக்கெட் எடுக்க முயற்சிப்பேன் அதோடு ரன்களை குறைவாக கொடுக்க முயற்சிப்பேன். தொடர்ச்சியாக பேட்டிங் மற்றும் பவுலிங்கில் என்னுடைய உழைப்பை மட்டும் நான் அளிக்க விரும்புகிறேன்.

இதையும் படிங்க : தற்சமயத்தில் உலகின் டாப் 5 தரமான டி20 வீரர்கள் இவர்கள் தான் – ஷேன் வாட்சன் தேர்வு செய்த லிஸ்ட் இதோ

ப்ராசஸ் மட்டுமே முக்கியம் ரிசல்ட்டை பற்றி கவலைப்பட போவதில்லை என வெங்கடேஷ் ஐயர் கூறியுள்ளார். மேலும் தற்போது இந்திய அணியில் இருந்து கழட்டி விடப்பட்டுள்ள தான் மீண்டும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணிக்குள் கம்பேக் கொடுப்பேன் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement