தற்சமயத்தில் உலகின் டாப் 5 தரமான டி20 வீரர்கள் இவர்கள் தான் – ஷேன் வாட்சன் தேர்வு செய்த லிஸ்ட் இதோ

Watson 1
- Advertisement -

தற்போதைய நவீன கிரிக்கெட்டில் பவுலர்களை தங்களது அபார திறமையால் புரட்டி எடுக்கும் பேட்ஸ்மேன்களே ஆதிக்கம் செலுத்துபவர்களாக இருக்கின்றனர். குறிப்பாக நவீன கிரிக்கெட்டின் உச்சமாக விளங்கும் டி20 கிரிக்கெட்டில் களமிறங்கிய முதல் பந்திலிருந்தே அதிரடி சரவெடியாக பேட்டிங் செய்தால் தான் வெற்றி பெறமுடியும் என்பதே வெற்றியின் ரகசியமாகும். அதற்காக ஒரே ஓவரில் 6 சிக்சர்கள், 30+ ரன்கள் என எந்த எல்லையையும் தொடுவதற்கு பேட்ஸ்மேன்கள் தயங்குவது கிடையாது. அதேபோல் 110 – 130 போன்ற ஸ்டிரைக் ரேட்டில் விளையாடினால் கூட தோல்வி கிடைத்துவிடும் என்பதால் அதுபோல் விளையாடும் பேட்ஸ்மேன்களை டெஸ்ட் இன்னிங்ஸ் விளையாடுகிறார்கள் என்று ரசிகர்கள் கலாய்க்கும் அளவுக்கு வளர்ந்துவிட்ட டி20 கிரிக்கெட்டில் அனைத்து பேட்ஸ்மேன்களாலும் 150 – 180 போன்ற ஸ்டிரைக் ரேட்டில் ரன்கள் குவிக்க முடிவதில்லை.

Watson

- Advertisement -

அந்த வகையில் டி20 கிரிக்கெட்டில் அனைத்து நேரங்களிலும் களமிறங்கியதுமே அதிரடியாக விளையாடுவதற்கு தனித்துவமான பயிற்சியும் திறமையும் மன தைரியமும் தேவைப்படுகிறது. மேலும் டி20 கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற பெரிய பெயரை விட அன்றைய நாளில் யார் நல்ல பார்மில் இருந்து சிறப்பாக செயல்படுகிறார்கள் என்பதே வெற்றியைப் பெற்றுக் கொடுக்கும்.

வாட்சனின் டாப் 5:
அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் டி20 உலகக் கோப்பை நடைபெற உள்ள நிலையில் தற்சமயத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் டாப் 5 வீரர்களை ஆஸ்திரேலியாவின் முன்னாள் நட்சத்திர ஜாம்பவான் ஆல்-ரவுண்டர் ஷேன் வாட்சன் தேர்வு செய்துள்ளார். தங்களது நாட்டில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் இந்த 5 வீரர்களும்களும் முதல் தேர்வாக இருப்பார்கள் என்று தெரிவித்துள்ள அவர் இந்த பட்டியலை ஐசிசி இணையத்தில் குறிப்பிட்டுள்ளார்.

babar azam 1

1. பாபர் அசாம்: கடந்த சில வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக சாதனை படைத்துள்ள பாகிஸ்தானைச் சேர்ந்த இவரை ஷேன் வாட்சன் தனது முதல் தேர்வாக தேர்வு செய்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“பாபர் அசாம் என்னுடைய முதல் தேர்வாக இருப்பார். உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக இருக்கும் அவருக்கு எப்படி அதிரடி காட்ட வேண்டும் என்பது தெரியும். குறிப்பாக உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ரிஸ்க் எடுக்காமல் எளிதாக ரன்களை குவிக்கிறார். அவர் தனது டெக்னிக்கை ஆஸ்திரேலியா காலச் சூழ்நிலைகளுக்கு ஏற்றவாறு உருவாக்குபவராக உள்ளார்” என்று கூறினார்.

2. சூர்யாகுமார் யாதவ்: 30 வயதில் அறிமுகமானாலும் அடுத்த ஒரு வருடத்தில் தனது அபார செயல்பாடுகளால் நம்பிக்கை நட்சத்திரமாக உருவெடுத்து உலகின் நம்பர் 2 டி20 பேட்ஸ்மேனாக 360 டிகிரியிலும் சுழன்றடிப்பவராக இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் இவரை வாட்சன் 2வதாக தேர்வு செய்து பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“அற்புதமாக பேட்டிங் செய்யும் அவர் என்னுடைய 2வது தேர்வாகும். ஆனால் அவருடைய அணியின் சக வீரர் கேஎல் ராகுல் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அசத்தினால் நான் ஆச்சரியப்பட போவதில்லை. ஏனெனில் அவருக்கு ஆஸ்திரேலிய கால சூழ்நிலைகளில் அதிரடியாக விளையாடுவதற்கு தெரியும்” என்று கூறினார்.

warner 1

3. டேவிட் வார்னர்: தங்களுடன் நாட்டைச் சேர்ந்த டேவிட் வார்னரை அவர் 3வதாக தேர்வு செய்து பேசியது பின்வருமாறு. “அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் சிறப்பாக ரன்களை அடித்தார். எனவே சொந்த மண்ணில் நடைபெறும் டி20 உலக கோப்பையில் அதிரடியாக விளையாடும் திறமை அவரிடம் உள்ளது. அதனால் சொந்த மண்ணில் அசத்துவதற்கு அவர் தயாராக இருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -

4. ஜோஸ் பட்லர்: சமீபத்திய ஐபிஎல் தொடரில் ஆரஞ்சு தொப்பியை வென்று அட்டகாசமான பார்மில் இருக்கும் இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை 4வதாக தேர்வு செய்து வாட்சன் பேசியது பின்வருமாறு. “ஐபிஎல் மட்டுமல்லாது அனைத்து நேரங்களிலும் அவரை யாரும் எளிதில் அவுட் செய்ய முடியாது. அவர் அடித்த ஒரே சீசனில் 4 சதங்கள் என்பது இதற்கு முன் விராட் கோலி (2016இல்) மட்டுமே செய்துள்ளார். பார்மில் இருக்கும் போது டி20 கிரிக்கெட்டில் அவரை அவுட் செய்வது அசாத்தியமானது”

buttler

“உலகின் சிறந்த பவுலர்களையும் தாம் விரும்பும் இடத்தில் அடிக்கும் திறமை பெற்றுள்ள அவர் ஆஸ்திரேலிய சூழ்நிலைகளை நன்கு தெரிந்து வைத்துள்ளார். சிட்னி தண்டர்ஸ் அணிக்காக கடந்த சில வருடங்களுக்கு முன் பிக்பேஷ் தொடரில் அவருடன் விளையாடியபோது அதை நான் தெரிந்து கொண்டேன்” என கூறினார்.

5. ஷாஹீன் அப்ரிடி: 2021 ஐசிசி சர்வதேச சிறந்த கிரிக்கெட் வீரர் விருதை வென்ற பாகிஸ்தானின் நம்பிக்கை நட்சத்திரமான இவரை தேர்வு செய்து வாட்சன் பேசியது பின்வருமாறு. “அவருடைய திறமை ஸ்பெஷலானது. குறிப்பாக புதிய பந்தில் பேட்ஸ்மேன்களை அவர் எளிதாக அவுட் செய்வதை கடந்த டி20 உலக கோப்பையில் பார்த்தோம்”

shaheen afridi

“அதனால் வேகம், பவுன்ஸ் மற்றும் ஸ்விங் என அவருடைய திறமைகளுக்கு உகந்த ஆஸ்திரேலிய சூழ்நிலைகளில் அவர் அசத்தாமல் போனால் அது எனக்கு ஆச்சரியமாக இருக்கும். ஆரம்பத்தில் விக்கெட்டுகள் எடுக்க தவறினால் கடைசியில் அவர் தடுமாற வாய்ப்புள்ளது. எனவே அதில் முன்னேற்றமடைய வேண்டும்” என்று கூறினார்.

Advertisement