பெயரையும் நட்சத்திர அந்தஸ்தையும் பாக்காம அங்க அனுப்பி விடுங்க – சொதப்பல் கேப்டன்களை விளாசிய ரீதிண்டர் சோதி

- Advertisement -

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் தோல்வியை சந்தித்த இந்தியா அடுத்ததாக 2023ஆம் ஆண்டு சொந்த மண்ணில் நடைபெறும் 50 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் பயணத்தை தொடங்கியுள்ளது. அதற்கு முன்பாக 2023 ஜூன் மாதம் லண்டன் ஓவல் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெற வரும் பிப்ரவரியில் சொந்த மண்ணில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பார்டர் – கவாஸ்கர் கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ள இந்தியா 2023 புத்தாண்டில் சிறந்த செயல்பாடுகளை வெளிப்படுத்தினால் மட்டுமே வெற்றியை வசப்படுத்த முடியும் என்ற நிலைமையை சந்தித்துள்ளது.

Rohit Sharma IND vs NED

- Advertisement -

ஏனெனில் 2022இல் சாதாரண இருதரப்பு தொடர்களில் வென்ற இந்தியா வழக்கம் போல ஆசிய மற்றும் டி20 உலக கோப்பை ஆகிய பெரிய தொடர்களில் சொதப்பியது. அந்த 2 முக்கிய தோல்விகளுக்குமே பெரும்பாலான சீனியர் நட்சத்திரங்கள் சுமாராக செயல்பட்டது முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் அடித்து நொறுக்கி அதிரடியாக ரன்களைக் குவித்து நல்ல தொடக்கத்தை கொடுக்க வேண்டிய ஓப்பனிங் ஜோடியில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் தடவலாக செயல்பட்டு பெரும்பாலான போட்டிகளில் சொற்ப ரன்களில் அவுட்டாகி தோல்விகளுக்கு முதல் காரணமாக அமைந்தனர்.

வெளியே அனுப்புங்க:
அதனால் கடுப்பான ரசிகர்களைப் போலவே அதிருப்தியடைந்த பிசிசியை 2024 டி20 உலகக்கோப்பைக்கு முன்பாக ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் வீரர்களுடன் புதிய டி20 அணியை உருவாக்கும் வேலையை துவங்கியுள்ளது. இருப்பினும் 2023 டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் உலக கோப்பையில் மீண்டும் அவர்களே விளையாடுவார்களே என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ஒரு கட்டத்தில் ஹிட்மேன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் அளவுக்கு எதிரணிகளை தெறிக்க விட்ட ரோகித் சர்மா சமீப காலங்களில் குறிப்பாக கேப்டனாக பொறுப்பேற்ற பின் ரொம்பவே தடுமாறி வருகிறார்.

KL-Rahul

மறுபுறம் 2019இல் நல்ல செயல்பாடுகளை வெளிப்படுத்தி நிலையான இடத்தை பிடித்த ராகுல் 17 கோடி என்று உயர்ந்த தன்னுடைய ஐபிஎல் மார்க்கெட்டை தக்க வைத்துக்கொள்ள சமீப காலங்களில் தடவலாகவும் சுயநலமாகவும் செயல்பட்டு வருகிறார். ஆனாலும் கேப்டன் மற்றும் துணை கேப்டன் என்ற போர்வையில் தொடர்ந்து வாய்ப்புகளை பெற்று வரும் அவர்கள் மீது ரசிகர்கள் கடுமையான அதிருப்தியில் உள்ளார்கள். இந்நிலையில் கேப்டன், துணை கேப்டன் உட்பட யாராக இருந்தாலும் தொடர்ந்து சுமாராக செயல்படவில்லை என்றால் அணியிலிருந்து அதிரடியாக நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் ரீதிண்டர் சோதி வெளிப்படையாக விமர்சித்துள்ளார்.

- Advertisement -

மேலும் இது போன்ற வீரர்கள் ரஞ்சிக்கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மீண்டும் தேர்வு செய்ய வேண்டும் என்று தெரிவிக்கும் அவர் இது பற்றி சமீபத்தை பேட்டியில் பேசியது பின்வருமாறு. “நீங்கள் பெரிய புள்ளியாகவே இருந்தாலும் இந்திய அணியில் சிறப்பாக செயல்பட்டாக வேண்டும். ஒருவேளை நீங்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டால் அது அணிக்கு மிகவும் நல்லதாகும். மேலும் சர்வதேச கிரிக்கெட்டில் உணர்ச்சிகளுக்கு இடமில்லை. குறிப்பாக கடந்த 10 வருடங்களில் சிறப்பாக செயல்பட்ட நட்சத்திர பெரிய வீரர்களை பற்றி நாம் தினமும் பேசி கொண்டாடுகிறோம். ஆனால் அவர்களால் சமீப காலங்களில் இந்தியா எந்த ஒரு உலகக் கோப்பையும் வெல்லவில்லை”

Sodhi

“எனவே பெரிய வீரர்களை அதிரடியாக நீக்குவது ஒன்றும் மிகப்பெரிய முடிவு கிடையாது. ஏனெனில் சிறப்பாக செயல்படாத வீரர்களை தான் நீங்கள் அணியில் சேர்க்கப் போவதில்லை. அதே சமயம் அவர்கள் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டால் மீண்டும் இந்திய அணிக்குள் கொண்டு வாருங்கள். யாராக இருந்தாலும் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் தொடர்ந்து விளையாட வேண்டும். எனவே நமது அணியில் பெயரையும் நட்சத்திர அந்தஸ்தையும் வைத்து எந்த தேர்வையும் நடத்தக்கூடாது”

இதையும் படிங்கஇஷான் கிஷன் அந்த ஒரு விஷயத்தை மறக்கலனா காணாமல் போயிடுவார் – எச்சரித்த பிரெட் லீ

“மாறாக சிறந்த செயல்பாடுகள் ஃபார்ம் மற்றும் ஃபிட்னஸ் இருந்தால் மட்டுமே வாய்ப்பு கொடுக்க வேண்டும். அதை செய்தால் மட்டுமே உங்களால் உலக கோப்பையும் வெல்ல முடியும். எனவே ஒரு டாப் வீரர் தொடர்ந்து சுமாராக பேட்டிங், பவுலிங் ஆகிய 2 துறைகளிலும் செயல்படும் பட்சத்தில் அவர்களுக்கு அணியிலிருந்து வெளியே செல்வதற்கான கதவை காட்டுங்கள். அவர்களுக்கு பதில் புதிய வீரர்களை தேர்வு செய்யுங்கள்” என்று கூறினார்.

Advertisement