இஷான் கிஷன் அந்த ஒரு விஷயத்தை மறக்கலனா காணாமல் போயிடுவார் – எச்சரித்த பிரெட் லீ

Brett-Lee-and-Ishan-Kishan
- Advertisement -

இந்திய அணியின் இளம் துவக்க ஆட்டக்காரரான இஷான் கிஷன் அண்மையில் பங்களாதேஷ் நாட்டில் நடைபெற்ற முடிந்த ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் காயமடைந்த கேப்டன் ரோகித் சர்மாவிற்கு பதிலாக இடம் பிடித்திருந்தார். அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திய அவர் தனது அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்து அசத்தினார். அதுமட்டுமின்றி சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் 126 பந்துகளில் அதிவேகமாக இரட்டை சதம் அடித்த வீரர் என்ற உலக சாதனையும் அவர் நிகழ்த்தி இருந்தார்.

Ishan Kishan 1

- Advertisement -

அதோடு இந்திய அணி சார்பாக முன்னாள் வீரர்கள் சச்சின், சேவாக் ஆகியோரை தொடர்ந்து ரோகித் சர்மாவிற்கு அடுத்து இரட்டை சதம் அடித்த இந்திய வீரர் என்ற சாதனை பட்டியலிலும் அவர் இணைந்தார். இப்படி தனது சிறப்பான ஆட்டத்தை இஷான் கிஷன் வெளிப்படுத்தியதன் காரணமாக அவர் இனிவரும் ஒருநாள் போட்டிகளில் தொடர்ச்சியாக துவக்க வீரராக களமிறங்க வேண்டும் என்ற ஆதரவும் பெருகி வருகிறது.

இந்நிலையில் ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான பிரட் லீ-யும் இஷான் கிஷன் இந்திய அணியின் துவக்க வீரராக 2023 ஆம் ஆண்டு உலக கோப்பையில் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது என்றும் அதற்கு முன்னதாக அவருக்கு சில எச்சரிக்கைகளையும் வழங்கி உள்ளார். இது குறித்து அவர் கூறுகையில் :

Ishan-Kishan-2

இஷான் கிஷன் தொடர்ச்சியாக சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்த வேண்டும். அப்பொழுதுதான் ஒருநாள் போட்டிகளுக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் அவரால் சிறப்பாக விளையாட முடியும். இப்போது இரட்டை சதம் அடித்த பரவச நிலையில் மயங்கி கிடக்காமல் அதிலிருந்து சீக்கிரம் வெளிவந்து மிகத் தீவிரமாக அடுத்தடுத்து போட்டிகளில் விளையாட வேண்டும்.

- Advertisement -

அப்படி விளையாடினால் தான் அவரால் இன்னும் பல சாதனைகளை படைக்க முடியும். அதே போன்று நிச்சயம் அவர் தனது திறனை சரியாக பயன்படுத்தி கடினமாக உழைத்தால் ஒருநாள் கிரிக்கெட்டில் அவரால் முச்சதம் கூட அடிக்கும் திறமை உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய பிரெட் லீ கூறுகையில் :

இதையும் படிங்க : அவர் விளையாடும் விதத்துக்கு சீக்கிரம் ஒருநாள் கிரிக்கெட்டில் 300 ரன்கள் அடிப்பாரு பாருங்க – இந்திய வீரரை பாராட்டும் கவாஸ்கர்

அவர் வங்கதேச அணிக்கு எதிரான அந்த போட்டியில் அடித்த 24 பவுண்டரி மற்றும் 10 சிக்ஸர்கள் என்னை பிரமிப்பில் ஆழ்த்தியது. விராட் கோலி போன்ற ஒரு மாஸ்டர் எதிரில் நின்று அவரது ஆட்டத்திற்கு துணையாக இருந்து அவரின் வெற்றியையும் கொண்டாடியது பார்ப்பதற்கு அழகாக இருந்ததாக பிரெட் லீ கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement