2023 உலக கோப்பை இந்திய அணியில் ஒரு ரிசர்வ் வீரர்கள் கூட தேர்வு செய்யாததற்கு காரணம் என்ன? இதை கவனச்சீங்களா

- Advertisement -

ஐசிசி 2023 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் களமிறங்கும் ரோகித் சர்மா தலைமையிலான 12 பேர் கொண்ட இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ள அந்த அணியில் பேட்டிங் துறையில் விராட் கோலி, சுப்மன் கில், காயத்திலிருந்து குணமடைந்த ஷ்ரேயஸ் ஐயர், கேஎல் ராகுல், இஷான் கிசான் ஆகியோரும் ஆல் ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், ஷார்துல் தாக்கூர் ஆகியோரும் தேர்வாகியுள்ளனர்.

அதே போல வேகப்பந்து வீச்சு துறையில் ஜஸ்ப்ரித் பும்ரா, முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் சமநிலை கொண்ட அணியாக பார்க்கப்படும் இந்த அணியில் ஒருநாள் போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக செயல்படாத சூரியகுமார் யாதவ் டி20 கிரிக்கெட்டில் நம்பர் ஒன் பேட்ஸ்மேனாக இருக்கிறார் என்பதற்காக மீண்டும் நம்பி தேர்வு செய்யப்பட்டுள்ளது சில ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

ரிசர்வ் வீரர்கள் இல்லை:
அதை விட மணிக்கட்டு ஸ்பின்னராக கருதப்படும் யுஸ்வேந்திர சஹால் சமீபத்திய வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சற்று ரன்களை வாரி வழங்கினார் என்பதற்காக அதிரடியாக நீக்கப்பட்டுள்ளதற்கு ஹர்பஜன் சிங் போன்ற சில முன்னாள் வீரர்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். மேலும் ரவிச்சந்திரன் அஸ்வின் வாஷிங்டன் சுந்தர் போன்ற தமிழக வீரர்கள் தேர்வு செய்யப்படாதது தமிழக ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை கொடுத்த நிலையில் சிகர் தவான், புவனேஸ்வர் குமார் போன்ற சீனியர்களும் கழற்றி விடப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொதுவாகவே பல அணிகள் பங்கேற்கும் பல தரப்பு தொடரில் எந்த வீரராவது காயத்தை சந்தித்து வெளியேறும் போது அந்த நிலைமையை சவாளிப்பதற்காக ரிசர்வ் அல்லது பேக்-அப் என்ற பெயரில் 1 முதல் 5 வீரர்கள் வரை தேர்வு செய்யப்படுவது வழக்கமாகும். எடுத்துக்காட்டாக நடைபெற்று வரும் 2023 ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் ரிசர்வ் வீரராக தேர்வு செய்யப்பட்டார். அப்படிப்பட்ட சூழ்நிலையில் இந்த மாபெரும் உலகக் கோப்பையில் விளையாடுவதற்கு மிகச்சரியாக 15 பேர் கொண்ட அணியை மட்டுமே வெளியிட்ட தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கர் ரிசர்வ் வீரர்கள் என்று எந்த வீரரையும் அறிவிக்காதது பெரிய ஆச்சரியமாக அமைந்தது.

- Advertisement -

ஏனெனில் ஸ்ரேயாஸ் ஐயர், ராகுல் போன்றவர்கள் மீண்டும் காயத்தை சந்தித்து வெளியேறுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும் இந்த உலகக் கோப்பை சொந்த மண்ணில் நடைபெறுவதால் ஒருவேளை எந்த வீரராவது காயத்தை சந்தித்து வெளியேறினால் அடுத்த நாளே உள்ளூரில் இருக்கும் தேவையான வீரரை இந்திய அணி நிர்வாகத்தால் மாற்ற முடியும். அதன் காரணத்தாலேயே இத்தொடருக்கு ரிசர்வ் வீரர்கள் தேவையில்லை என்று கருதிய தேர்வுக்குழு அந்த வீரர்களின் பட்டியலை பெயரிடவில்லை.

இதையும் படிங்க: என்னய்யா ஒரு டிக்கெட் கேட்டா ஊரோட விலை சொல்றிங்க – 2023 உ.கோ இந்தியா – பாக் டிக்கெட் விலை கேட்டு தெறிக்கும் ரசிகர்கள்

மேலும் ஒருவேளை யாராவது காயத்தை தவிர்த்து வெளியேறினால் அவர்களுக்கு பதிலாக தேர்வு செய்ய ஆசிய கோப்பையில் எக்ஸ்ட்ரா வீரர்களாக தேர்வான திலக் வர்மா மற்றும் பிரசித் கிருஷ்ணா ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக வைத்திருப்பதாக அஜித் அவர்கள் தெரிவித்துள்ளார். எனவே யாரும் காயமடையாம் உலகக்கோப்பை அணியில் எந்த மாற்றத்தையும் செய்யப்போவதில்லை என்று அகர்கர் 15 பேர் அணியை வெளியிடும் போது கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement