என்னய்யா ஒரு டிக்கெட் கேட்டா ஊரோட விலை சொல்றிங்க – 2023 உ.கோ இந்தியா – பாக் டிக்கெட் விலை கேட்டு தெறிக்கும் ரசிகர்கள்

- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐசிசி 2023 உலகக் கோப்பை வரும் அக்டோபர் 5 முதல் இந்தியாவில் கோலாகலமாக துவங்கி நவம்பர் 19 வரை பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற உள்ளது. வரலாற்றில் முதல் முறையாக முழுவதுமாக இந்திய மண்ணில் நடைபெறும் இந்த உலக கோப்பையை வெல்வதற்கு நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, நியூஸிலாந்து, பாகிஸ்தான் உள்ளிட்ட உலகில் டாப் பத்து அணிகள் மொத்தம் 48 போட்டிகளில் விளையாட உள்ளன.

அந்த எதிரணிகளுக்கு சவாலை கொடுத்து சொந்த மண்ணில் அணியாக திகழும் இந்தியா 2011 போல கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு காணப்படுகிறது. அதே போல பரம எதிரி பாகிஸ்தானுக்கு எதிராக கடந்த 30 வருடங்களாக உலகக் கோப்பையில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இம்முறை சொந்த மண்ணில் அக்டோபர் 14ஆம் தேதி அகமதாபாத் மைதானத்தில் நடைபெறும் போட்டியிலும் வென்று ரோகித் சர்மா தலைமையிலான இந்தியா வென்று காப்பாற்றுமா என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு இந்திய ரசிகர்களிடம் நிலவுகிறது.

- Advertisement -

ஊரோட விலை:
முன்னதாக பல வருடங்கள் கழித்து இந்திய மண்ணில் நடைபெறும் இத்தொடரை நேரில் சென்று பார்ப்பதற்காக ஆர்வத்துடன் இருக்கும் ரசிகர்கள் அதற்கான டிக்கெட்டுகளை பெறுவதற்கு திண்டாடி வருகிறார்கள் என்றே சொல்லலாம். குறிப்பாக முதலில் டிக்கெட்டுகளை கவுன்டர்களில் நேரில் சென்று அடித்துக்கொண்டு தான் ரசிகர்கள் வாங்க வேண்டும் என்று தெரிவித்த பிசிசிஐ அதற்கு எதிர்ப்பு உருவானதால் பின்னர் ஆன்லைனில் “புக்மைஷோ” இணையத்தில் வாங்கலாம் என்று தெரிவித்தது.

ஆனால் அந்த இணையத்தில் 2 மணி நேரங்கள் முதல் 24 மணி நேரம் வரை காத்திருந்தும் கடைசியில் டிக்கெட்டுகள் தீர்ந்து விட்டதாக 99% ரசிகர்களுக்கு காண்பிக்கப்பட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. குறிப்பாக ப்ளாக்க்கில் விற்பதற்காகவும் பணக்காரர்களுக்கு கொடுப்பதற்காகவும் பிசிசிஐ அறிவுறுத்தலின்படி “புக்மைஷோ” இணையத்தில் வேண்டுமென்றே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்ததாக காட்டுமாறு போலியான ப்ரோக்ராம் செய்யப்பட்டதாக ரசிகர்கள் ஆதரத்துடன் நிரூபித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் அக்டோபர் 14ஆம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் மோதும் போட்டிக்கு வியாகோகோ எனும் இணையத்தில் டிக்கெட் பதிவு செய்ய முயற்சித்த ரசிகர்கள் அதன் விலையை பார்த்து உறைந்து போயுள்ளதை சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். குறிப்பாக மிகச்சிறந்த காட்சியை கொடுக்கும் மேல் தளத்திற்கான ஒரு டிக்கெட்டின் விலை 57 லட்சம் (57,62,676 ரூபாய்) என்று அந்த இணையத்தில் காட்டப்பட்டது ரசிகர்களை வாயை பிளக்க வைத்து “என்னையா ஒரு டிக்கெட்டின் விலை கேட்டால் ஒரு ஊரின் விலையை சொல்கிறீர்கள்” என சொல்ல வைப்பதாக இருக்கிறது.

இதையும் படிங்க: ஆசிய கோப்பை 2023 : வெளியேறிய ஆப்கன், நேபாள் – பாகிஸ்தானுடன் மீண்டும் மோதல் எப்போது? இந்தியாவின் சூப்பர் 4 சுற்று அட்டவணை

அதே போல அந்த போட்டியின் சாதாரண வசதியை கொண்ட அடிப்படை டிக்கெட்டின் விலை 57,198 ரூபாயில் இருப்பதால் எப்படி தங்களால் நேரில் இந்தியா – பாகிஸ்தான் மோதுவதை பார்க்க முடியும் என்று ரசிகர்கள் வேதனையை வெளிப்படுத்துகின்றனர். அதுமட்டுமல்லாமல் அக்டோபர் 29இல் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் லக்னோ மைதானத்தில் மோதும் போட்டியின் அதிகபட்ச டிக்கெட் விலை 2.85 லட்சம் என்றும் அக்டோபர் 8ஆம் தேதி தமிழகத்தின் தலைநகர் சென்னையில் நடைபெறும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் அதிகபட்ச டிக்கெட் விலை 2,09,551 ரூபாய் என்றும் ஆன்லைன் இணையதளங்கள் கூறுவது ரசிகர்களை ஏமாற்றமடைய வைத்துள்ளது.

Advertisement