ஆசிய கோப்பை 2023 : வெளியேறிய ஆப்கன், நேபாள் – பாகிஸ்தானுடன் மீண்டும் மோதல் எப்போது? இந்தியாவின் சூப்பர் 4 சுற்று அட்டவணை

IND vs PAK Asia Cup
Advertisement

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த ஆகஸ்ட் 30 ஆம் தேதி துவங்கிய ஆசிய கோப்பை 2023 கிரிக்கெட் தொடரின் லீக் சுற்று நிறைவு பெற்றுள்ளது. அதில் குரூப் ஏ பிரிவில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் தலா 3 புள்ளிகள் பெற்று சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. குறிப்பாக நேருக்கு நேர் மோதிய போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலும் நேபாளுக்கு எதிராக பெரிய வெற்றிகளை சுவைத்த பாகிஸ்தான் மற்றும் இந்திய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்ற தங்களை வலுவான அணிகள் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளன.

மறுபுறம் குரூப் பி பிரிவில் இலங்கைக்கு எதிரான தன்னுடைய முதல் போட்டியில் தோல்வியை சந்தித்தாலும் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக பெரிய வெற்றியை சுவைத்த வங்கதேசம் வெறும் 2 புள்ளிகளுடன் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றது. அதனால் பின்னடைவை சந்தித்த ஆப்கானிஸ்தான் செப்டம்பர் 5ஆம் தேதியான நேற்று நடைபெற்ற வாழ்வா – சாவா போட்டியில் இலங்கையை பெரிய வித்தியாசத்தில் தோற்கடிக்க வேண்டிய நிலைமையில் சந்தித்தது.

- Advertisement -

சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை:
குறிப்பாக பாகிஸ்தானின் கடாஃபி நகரில் நடைபெற்ற அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இலங்கை நிர்ணயித்த 292 ரன்களை 37.1 ஓவரில் வெற்றிகரமாக எட்டிப் பிடித்தால் ரன் ரேட் அடிப்படையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெறலாம் என்ற நிலைமையில் சேசிங் செய்த ஆப்கானிஸ்தான் வெறித்தனமாக போராடியும் 289 ரன்கள் மட்டுமே எடுத்து 2 வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.

அதிலும் குறிப்பாக முகமது நபி சரவெடியாக 65 (32) ரன்களும் ரசித் கான் 27* (16) ரன்கள் எடுத்தும் ஆப்கானிஸ்தானின் அனலைஸ்ட் ரன்ரேட் கணக்கு போடுவதில் செய்த தவறால் லீக் சுற்றுடன் பரிதாபமாக வெளியேறியது. அதனால் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம் ஆகிய அணிகளுடன் நடப்பு சாம்பியன் இலங்கையும் கடைசி அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

- Advertisement -

இதைத்தொடர்ந்து இன்று துவங்கும் சூப்பர் 4 சுற்றில் இந்த 4 அணிகளும் மற்றொரு அணியுடன் தலா 1 முறை மோத உள்ளது. அதன் முடிவில் அதிக வெற்றிகளை பெற்று புள்ளி பட்டியலில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் வரும் செப்டம்பர் 17ஆம் தேதி கொழும்புவில் நடைபெறும் மாபெரும் இறுதிப் போட்டியில் 2023 ஆசிய கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளன. இந்த சூப்பர் 4 சுற்றில் மீண்டும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி மோத உள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்த உள்ளது.

இதையும் படிங்க: நாங்க தோத்தது வருத்தமா தான் இருக்கு. ஆனாலும் இதை நெனச்சா பெருமையா இருக்கு – ஆப்கானிஸ்தான் கேப்டன் பேட்டி

2023 ஆசிய கோப்பை சூப்பர் 4 சுற்றுக்கான அட்டவணை:
செப்டம்பர் 6 : பாகிஸ்தான் – வங்கதேசம், லாகூர்
செப்டம்பர் 9 : இலங்கை – வங்கதேசம், கொழும்பு
செப்டம்பர் 10 : பாகிஸ்தான் – இந்தியா, கொழும்பு
செப்டம்பர் 12 : இந்தியா – இலங்கை, கொழும்பு
செப்டம்பர் 14 : பாகிஸ்தான் – இலங்கை, கொழும்பு
செப்டம்பர் 15 : இந்தியா – வங்கதேசம், கொழும்பு

Advertisement