தவறான காரணத்தை சொல்லி வசமாக சிக்கிய இஷான் கிசான்? ஆப்கானிஸ்தான் தொடரில் கழற்றி விடப்பட்ட பின்னணி

Ishan Kishan BCCI
- Advertisement -

தென் ஆப்பிரிக்கா சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொண்டு தாயகம் திரும்பிய இந்தியா 2024 புத்தாண்டில் தங்களுடைய சொந்த மண்ணில் முதல் முறையாக ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஜனவரி மாதம் 11ஆம் தேதி பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொகாலி நகரில் துவங்குகிறது.

அதில் ஹர்திக் பாண்டியா மற்றும் சூரியகுமார் யாதவ் காயத்தை சந்தித்து வெளியேறியுள்ள நிலையில் கேப்டனாக ரோகித் சர்மா செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல விராட் கோலி 14 மாதங்கள் கழித்து டி20 அணியில் மீண்டும் தேர்வாகியுள்ள இத்தொடரில் ரிங்கு சிங், ஜெய்ஸ்வால், திலக் வர்மா போன்ற இளம் வீரர்களும் தேர்வாகியுள்ளனர்.

- Advertisement -

செக் வைத்துள்ள பிசிசிஐ:
இருப்பினும் இந்த அணியில் விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் – ஜிதேஷ் சர்மா தேர்வாகியுள்ள நிலையில் இசான் கிசான் கழற்றி விடப்பட்டுள்ளார். டி20 கிரிக்கெட்டில் இன்னும் பெரிய அளவில் அசத்தாத போதிலும் சமீப காலங்களாகவே சஞ்சு சாம்சனை கழற்றி விட்ட தேர்வுக்குழு இவருக்கு தொடர்ச்சியான வாய்ப்புகள் வழங்கி வந்தது.

அந்த நிலைமையில் நிறைவு பெற்ற தென்னாபிரிக்க டெஸ்ட் தொடரில் அணியில் வாய்ப்பு கிடைத்தும் சொந்த காரணங்களுக்காக இசான் கிசான் தாமாக விலகினார். கடந்த வருடம் பெரும்பாலான போட்டிகளில் வாய்ப்பு பெறாவிட்டாலும் இந்தியா விளையாடிய அனைத்து தொடர்களிலும் இடம் பெற்றிருந்த அவர் தொடர்ச்சியாக அணியுடன் பயணித்தார்.

- Advertisement -

எனவே பணிச்சுமையை நிர்வகித்து குடும்பத்துடன் கொஞ்சம் நேரம் செலவிட அனுமதி கொடுங்கள் என்று கேட்டதால் இசான் கிசானுக்கு பிசிசிஐயும் பச்சை கொடி காட்டியது. ஆனால் தற்போது குடும்பத்தை பார்க்க செல்கிறேன் என்று சொல்லிவிட்டு துபாயில் புத்தாண்டு கொண்டாட்டத்தில் பார்ட்டியில் இசான் கிசான் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.

அந்த வகையில் தேர்வுக்கு தயாராக இல்லாததால் இத்தொடரில் அவரை பிசிசிஐ கழற்றி விட்டுள்ளதாக இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையத்தில் செய்தி வெளியாகியுள்ளது. இது பற்றி பெயர் வெளியிட விரும்பாத பிசிசிஐ நிர்வாகி பேசியது பின்வருமாறு. “தொடர்ந்து அணியுடன் பயணித்து விளையாடியதால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த இஷான் கிசான் தன்னுடைய குடும்பத்துடன் வீட்டில் சில நேரம் செலவிட விரும்புவதாக தெரிவித்தார்”

இதையும் படிங்க: வங்கதேசம் 2024 டி20 உ.கோ ஜெயிக்கும்.. காரணம் இது தான்.. ஷாகிப் அல் ஹசன் உறுதியான பேட்டி

“ஆனால் அதன் பின் அவர் துபாய்க்கு சென்று பார்ட்டியில் ஈடுபட்டார். விடுப்பு கொடுக்கப்பட்டுள்ள போது என்ன செய்தாலும் எந்த பிரச்சனையும் இல்லை. இருப்பினும் பெஞ்சில் இருப்பது மனதளவில் தாக்கத்தை ஏற்படுத்துவதாக கருதும் அவர் தற்காலிகமாக இடைவெளி எடுத்துள்ளார்” என்று கூறினார். இதனால் 2024 ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக சிறப்பாக விளையாடினால் தான் இசான் கிசான் டி20 உலகக் கோப்பையில் வாய்ப்பு பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement