வங்கதேசம் 2024 டி20 உ.கோ ஜெயிக்கும்.. காரணம் இது தான்.. ஷாகிப் அல் ஹசன் உறுதியான பேட்டி

Shakib Al Hasan
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் 1ஆம் தேதி 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பை கோலாக்கலமாக துவங்க உள்ளது. சர்வதேச கிரிக்கெட்டின் புதிய சாம்பியனை தீர்மானிக்கப் போகும் இந்த தொடரில் இம்முறை 16 அணிகளுக்கு பதிலாக 20 அணிகள் மொத்தம் 55 போட்டிகளில் கோப்பையை வெல்வதற்காக மோத உள்ளதால் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பு அதிகமாக ஏற்பட்டுள்ளது.

அதில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி வரும் ஜூன் மாதம் 9ஆம் தேதி அமெரிக்காவில் நடைபெற உள்ளது. முன்னதாக ஆஸ்த்ரேலியாவில் நடைபெற்ற 2022 டி20 உலகக் கோப்பையில் வெஸ்ட் இண்டீஸ் அணியை நமீபியாவும் வலுவான தென்னாபிரிக்கா அணியை நெதர்லாந்தும் அசால்டாக தோற்கடித்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

- Advertisement -

வங்கதேசத்திற்கு வாய்ப்பிருக்கு:
அந்த வகையில் இம்முறை 4 எக்ஸ்ட்ரா கத்துக்குட்டி அணிகள் விளையாடுவதால் 2024 உலகக் கோப்பையில் இந்தியா, ஆஸ்திரேலியா போன்ற டாப் அணிகள் மிகுந்த கவனத்துடன் செயல்படுவது அவசியம் என்றே சொல்லலாம். இந்நிலையில் 2024 டி20 உலகக் கோப்பையை வெல்வதற்கு தங்களுக்கு பிரகாசமான வாய்ப்புகள் இருப்பதாக வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் இருக்கும் மைதானங்கள் தங்களுடைய நாட்டில் இருக்கும் சுழலுக்கு சாதகமான மைதானங்களை போலவே இருக்கும் என்பதால் வங்கதேசம் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அந்த தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் நடைபெறுகிறது. அங்குள்ள சூழ்நிலைகள் நாங்கள் விளையாடும் ஸ்டைலுக்கு பொருத்தமாக இருக்கும்”

- Advertisement -

“எனவே இம்முறை நாங்கள் கோப்பையை வெல்வதற்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. மேலும் கடந்த ஒரு வருடமாக நாங்கள் டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக விளையாடி வருகிறோம். எங்களுடைய அணி தற்போது நல்ல சமநிலையுடன் ஃபார்மில் இருக்கிறது. எங்கள் வீரர்கள் அனைவரும் நன்றாக விளையாடுகின்றனர் குறிப்பாக நடைபெற்று முடிந்த நியூசிலாந்து தொடரில் எங்களுடைய அணி சிறப்பாக செயல்பட்டது” என்று கூறினார்.

இதையும் படிங்க: புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி – 3 துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ள இந்திய வீரர்கள்

இதைத் தொடர்ந்து நடைபெறும் டி20 உலகக் கோப்பையில் வங்கதேசம் தங்களுடைய லீக் சுற்றில் இலங்கையை முதலாவதாக ஜூன் 7ஆம் தேதி எதிர்கொள்கிறது. அதன் பின் ஜூன் 10ஆம் தேதி வலுவான தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்ளும் வங்கதேசம் எஞ்சிய 2 போட்டிகளில் நேபாள் மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளையும் எதிர்கொள்வது குறிப்பிடத்தக்கது.

Advertisement