புதிய டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்ட ஐ.சி.சி – 3 துறையிலும் முன்னேற்றம் கண்டுள்ள இந்திய வீரர்கள்

IND
- Advertisement -

அண்மையில் தென்னாப்பிரிக்க நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெற்ற இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை ஒன்றுக்கு ஒன்று (1-1) என்ற கணக்கில் சமன் செய்தது. அந்த தொடரின் முதல் போட்டியில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த இந்திய அணியானது மீண்டும் இரண்டாவது போட்டியில் மிகச் சிறப்பான ஆடடத்தை வெளிப்படுத்தி 7 விக்கெட் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்க அணியை வீழ்த்தி அசத்தியது.

அதோடு இந்த தொடர் ஒருபுறம் இருக்க மற்றொருபுறம் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரானது நடைபெற்றது. அந்த தொடரை ஆஸ்திரேலிய அணி மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

- Advertisement -

இந்நிலையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி இந்த இரு தொடர்களின் முடிவில் புதிய ஐசிசி டெஸ்ட் தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் வீரர்கள் பலரும் முன்னேற்றத்தை கண்டுள்ளனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னணி வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் முன்னேற்றத்தை கண்டுள்ளது அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வகையில் ஐசிசி வெளியிட்ட தரவரிசை பட்டியலில் விராட் கோலி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஆறாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

- Advertisement -

அதேபோன்று கேப்டன் ரோகித் சர்மா பத்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். அவர்கள் இருவரை தவிர்த்து வேறு எந்த இந்திய பேட்ஸ்மேனும் டாப் 10-ல் இடம்பெறவில்லை. அதேபோன்று பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலில் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்ப்ரீத் பும்ரா நான்காவது இடத்தினை பிடித்துள்ளார்.

இதையும் படிங்க : இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டி20 நடைபெறும் மொஹாலி மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்

பந்துவீச்சாளர்கள் தரவரிசை பட்டியலை பொறுத்தவரை தமிழக சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார். அதேபோன்று ஜடேஜா 5 ஆவது இடத்தில் உள்ளார். அதனைத்தவிர்த்து டெஸ்ட் போட்டிகளுக்கான ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் முதல் இரண்டு இடங்களிலும், வங்கதேச வீரர் ஷாகிப் அல் ஹசன் மூன்றாவது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement