இந்தியா – ஆப்கானிஸ்தான் முதல் டி20 நடைபெறும் மொஹாலி மைதானம் எப்படி? புள்ளிவிவரம்.. பிட்ச் – வெதர் ரிப்போர்

Mohali Stadium
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிங்கு சிங் போன்ற அனுபவம் கலந்த இளம் இந்திய அணி களமிறங்குவதால் ஆப்கானிஸ்தானை தோற்கடித்து கோப்பையை வெல்லும் என்று நம்பப்படுகிறது.

மறுபுறம் 2023 உலகக் கோப்பையில் பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்து சமீபத்தில் அமீரகத்தை அதனுடைய சொந்த மண்ணில் 2 – 1 (3) என்ற கணக்கில் வீழ்த்திய ஆப்கானிஸ்தான் இத்தொடரில் இந்தியாவுக்கு சவாலை கொடுத்து கோப்பையை வெல்லும் முனைப்புடன் விளையாட உள்ளது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடரின் முதல் போட்டி ஜனவரி 11ஆம் தேதி இரவு 7 மணிக்கு பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மொஹாலி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது.

- Advertisement -

மொஹாலி மைதானம்:
கடந்த 1993ஆம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்டு 27000 ரசிகர்கள் அமரும் வகையில் நவீன வசதிகளை கொண்ட இந்த மைதானத்தில் 2009 முதல் டி20 போட்டிகள் நடைபெற்று வருகிறது. அதில் இதுவரை நடைபெற்ற 6 போட்டிகளில் 4 முறை விளையாடி 3 வெற்றிகளையும் 1 தோல்வியும் பதிவு செய்துள்ள இந்தியா முதல் முறையாக தற்போது ஆப்கானிஸ்தானை எதிர்கொள்கிறது.

இந்த மைதானத்தில் நடைபெற்ற டி20 போட்டிகளில் அதிக ரன்கள் (156), அதிக சதங்கள் (2) மற்றும் அதிகபட்ச ஸ்கோர் (82* ஆஸ்திரேலியாவுக்கு எதிராக, 2016) பதிவு செய்த வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். அதே போல இங்கு அதிக விக்கெட்டுகள் (11) எடுத்த பவுலராக ஹர்பஜன் சிங் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த ஜேம்ஸ் பல்க்னர் (5/27, பாகிஸ்தானுக்கு எதிராக, 2016) சாதனை படைத்துள்ளார்கள். இந்த மைதானத்தில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணி : இந்தியா 211/4 – இலங்கைக்கு எதிராக, 2009 மற்றும் ஆஸ்திரேலியா 211/6 – இந்தியாவுக்கு எதிராக, 2022

- Advertisement -

வெதர் ரிப்போர்ட்:
ஜனவரி 11ஆம் தேதி மொஹாலி நகரை சுற்றிய பகுதிகளில் மழைக்கான வாய்ப்பில்லை என்று இந்திய மாநிலம் மையம் தெரிவிப்பதால் இப்போட்டி முழுமையாக நடைபெறும் என்று நம்பலாம்.

பிட்ச் ரிப்போர்ட்:
மொஹாலி மைதானம் வரலாற்றில் பேட்டிங்கு சாதகமாக இருந்து வருகிறது. எனவே சூழ்நிலைகளைப் புரிந்து நங்கூரமாக விளையாடும் பேட்ஸ்மேன்கள் கண்டிப்பாக பெரிய ரன்கள் குவிக்க முடியும். அதனாலேயே இந்த மைதானத்தில் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 183 ரன்களாக இருக்கிறது. அதே சமயம் போட்டி நடைபெற நடைபெற வேகப்பந்து வீச்சாளர்களும் ஸ்பின்னர்களும் இங்கே ஆதிக்கத்தை செலுத்துவார்கள்.

இதையும் படிங்க: கெளரவத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 செயல்பாடுகள்.. அதிக ரன்ஸ், விக்கெட்ஸ் பட்டியல்

வரலாற்றில் இங்கு நடைபெற்ற 6 டி20 போட்டிகளில் 4 முறை சேசிங் செய்த அணிகள் வென்றுள்ளன. மேலும் இரவு நேரத்தில் இங்கு கண்டிப்பாக பனியின் தாக்கம் இருக்கும். அதனால் இம்முறை டாஸ் வெல்லும் கேப்டன் முதலில் பந்து வீசத் தீர்மானிப்பது வெற்றிக்கு வித்திடலாம்.

Advertisement