கெளரவத்தை தக்க வைக்குமா இந்தியா? ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 செயல்பாடுகள்.. அதிக ரன்ஸ், விக்கெட்ஸ் பட்டியல்

IND vs AFG
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக இந்திய கிரிக்கெட் அணி தங்களுடைய சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட உள்ளது. இத்தொடரில் இந்தியாவுக்கு சவாலை கொடுக்கும் அளவுக்கு 2023 உலகக் கோப்பையில் இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற டாப் அணிகளை தோற்கடித்த ஆப்கானிஸ்தான் தற்போது நல்ல திறமையுடைய அணியாக வளர்ந்துள்ளது.

இருப்பினும் ரோகித் சர்மா தலைமையில் விராட் கோலி, ரிங்கு சிங் உள்ளிட்ட அனுபவம் கலந்த இளம் வீரர்களுடன் இத்தொடரில் களமிறங்கும் இந்தியா சொந்த மண்ணில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இத்தொடர் ஜனவரி 11ஆம் தேதி துவங்கும் நிலையில் அதற்கு முன்பாக சில புள்ளி விவரங்களை பார்ப்போம்.

- Advertisement -

தக்க வைக்குமா இந்தியா:
சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இதுவரை 5 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 4 போட்டிகளில் இந்தியா வென்றுள்ள நிலையில் 1 போட்டி மழையால் கைவிடப்பட்டது. சொல்லப்போனால் இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் ஒரு இருதரப்பு தொடரில் மோதுவது இதுவே முதல் முறையாகும்.

இதற்கு முன் டி20 உலகக் கோப்பை போன்ற பலதரப்பு தொடர்களில் மட்டுமே மோதி வந்த நிலையில் கடைசியாக 2022 ஆசிய கோப்பையில் சந்தித்த போது ஆப்கானிஸ்தானை 101 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து இந்தியா அபார வெற்றி பெற்றது. எனவே ஆப்கானிஸ்தானுக்கு எதிராக டி20 கிரிக்கெட்டில் தோற்காமல் இருந்து வரும் கௌரவத்தை இத்தொடரில் இந்தியா தக்க வைத்துக்கொள்ளும் முனைப்புடன் விளையாட உள்ளது.

- Advertisement -

1. சர்வதேச டி20 ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிக ரன்கள் (172) அடித்த இந்திய வீரராக விராட் கோலி சாதனை படைத்துள்ளார். குறிப்பாக 2019க்குப்பின் சதமடிக்காமல் இருந்து வந்த கதைக்கு கடந்த 2022 ஆசியக் கோப்பையில் முற்றுப்புள்ளி வைத்த அவர் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிகபட்ச ஸ்கோர் (122*) பதிவு செய்த இந்திய வீரராகவும் சாதனை படைத்துள்ளார்.

இதையும் படிங்க: ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – உத்தேச பட்டியல் இதோ

2. அதே போல டி20 கிரிக்கெட்டில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அதிக விக்கெட்டுகள் (தலா 5) எடுத்த இந்திய வீரர்களாக ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் புவனேஸ்வர் குமார் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர். கடந்த 2022 ஆசிய கோப்பையில் வெறும் 4 ரன்கள் மட்டும் கொடுத்து 5 விக்கெட்டுகள் எடுத்த புவனேஸ்வர் குமார் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக சிறந்த பவுலிங்கை பதிவு செய்த இந்திய வீரராக சாதனை படைத்துள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்தியா பதிவு செய்துள்ள அதிகபட்ச டி20 ஸ்கோர் : 212 ரன்களாகும்.

Advertisement