ஆப்கானிஸ்தான் அணிக்கெதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவன் – உத்தேச பட்டியல் இதோ

IND-vs-AFG
- Advertisement -

இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரானது ஜனவரி 11-ஆம் தேதி நாளை துவங்கி ஜனவரி 17-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கான இந்திய அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வேளையில் தற்போது இந்த தொடரில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வீரர்கள் தீவிர வலைப்பயிற்சியினை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் நாளை ஜனவரி 11-ஆம் தேதி மொஹாலியில் துவங்க இருக்கும் இந்த முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனில் எந்தெந்த வீரர்கள் இடம் பிடிப்பார்கள்? என்பது குறித்த எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

அந்த வகையில் நாளைய முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை நாங்கள் இங்கே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி 16 பேர் கொண்ட இந்த இந்திய அணியில் இருந்து : ரோஹித் சர்மா மற்றும் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆகியோர் துவக்க வீரர்களாக களமிறங்குவார்கள் என்பது உறுதி. ஏனெனில் அவர்கள் இருவருமே இடதுகை, வலதுகை துவக்க வீரர்கள் என்பதினால் துவக்க வீரர்களாக இவர்கள் இருவருமே களமிறங்குவார்கள்.

அதேபோன்று மூன்றாவது இடத்தில் அனுபவ வீரரான விராட் கோலியும், நான்காவது இடத்தில் இடது கை ஆட்டக்காரரான திலக் வர்மாவும் விளையாடுவார்கள். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக சஞ்சு சாம்சங் முன்னுரிமை அளிக்கப்படும். அதேபோன்று பினிஷர் ரோலில் ஆறாவது இடத்தில் ரிங்கு சிங் களமிறங்குவார். அதனை தொடர்ந்து ஏழாவது இடத்தில் ஆல்ரவுண்டான அக்சர் பட்டேலும், எட்டாவது இடத்தில் மற்றொரு சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னாயும் விளையாடுவார்கள்.

- Advertisement -

அவர்களை தொடர்ந்து மூன்று வேகப்பந்து வீச்சாளர்களாக 9,10 மற்றும் 11 ஆகிய இடங்களில் ஆவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் இடம் பிடிக்க வாய்ப்புள்ளது. அந்த வகையில் நாளைய ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான முதலாவது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன் இதோ :

இதையும் படிங்க : ஆப்கானிஸ்தான் தொடரில் தோனியை சமன் செய்து.. கோலியின் சாதனையை உடைக்கப் போகும் ரோஹித் சர்மா

1) ரோஹித் சர்மா, 2) யாஷஸ்வி ஜெய்ஸ்வால், 3) விராட் கோலி, 4) திலக் வர்மா, 5) சஞ்சு சாம்சன், 6) ரிங்கு சிங், 7) அக்சர் படேல், 8) ரவி பிஷ்னாய், 9) அர்ஷ்தீப் சிங், 10) ஆவேஷ் கான், 11) முகேஷ் குமார்.

Advertisement