ஆப்கானிஸ்தான் தொடரில் தல தோனி, கிங் கோலியின்.. ஆல் டைம் சாதனையை உடைக்கப் போகும் ரோஹித் சர்மா

Rohit Sharma MS Dhoni and Kohli
- Advertisement -

தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து தாயகம் திரும்பியுள்ள இந்தியா அடுத்ததாக ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் விளையாட உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் வரும் ஜூன் மாதம் நடைபெற உள்ள 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராவதற்காக நடைபெறும் இந்த தொடரில் ரோகித் சர்மா தலைமையில் அனுபவம் கலந்த இளம் இந்திய அணி விளையாட உள்ளது.

கடைசியாக 2022 டி20 உலகக் கோப்பையில் விளையாடிய ரோஹித் சர்மா அதன் பின் ஒன்றரை வருடங்களாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடி வந்தார். மேலும் அந்த உலகக் கோப்பையில் ரோகித் சர்மா போன்ற சீனியர்கள் சுமாராக விளையாடி தோல்விக்கு காரணமாக அமைந்ததால் அவர்களை கழற்றி விட்டு இம்முறை ஹர்டிக் பாண்டியா தலைமையில் புதிய அணி விளையாடும் என்ற செய்திகள் வெளி வந்தன.

- Advertisement -

சாதனை படைப்பாரா ரோஹித்:
ஆனால் தற்போது பாண்டியா காயத்தை சந்தித்துள்ளதால் மீண்டும் தேர்வாகியுள்ள ரோஹித் சர்மா கிட்டத்தட்ட 2024 டி20 உலகக் கோப்பையிலும் கேப்டனாக செயல்படுவது உறுதியாகியுள்ளது. அந்த வகையில் மீண்டும் கிடைத்த இந்த வாய்ப்பில் ரோகித் சர்மா கேப்டனாக படைக்க உள்ள சில சாதனைகளைப் பற்றி பார்ப்போம்.

1. இதுவரை டி20 கிரிக்கெட்டில் 51 போட்டிகளில் 39 வெற்றிகளை 76.74% என்ற அபாரமான விகிதத்தில் ரோகித் சர்மா பதிவு செய்துள்ளார். அந்த வரிசையில் இந்த தொடரில் 3 போட்டிகளிலும் வெற்றியை பதிவு செய்யும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற தோனியின் மாபெரும் சாதனையை ரோகித் சர்மா உடைத்து புதிய சாதனை படைக்க பிரகாச வாய்ப்புள்ளது. அந்த பட்டியல்:
1. எம்எஸ் தோனி : 41
2. ரோஹித் சர்மா : 39*

- Advertisement -

2. அத்துடன் இந்த தொடரில் 44 ரன்கள் எடுக்கும் பட்சத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த இந்திய கேப்டன் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை உடைத்து ரோகித் சர்மா புதிய சாதனை உடைப்பதற்கான வாய்ப்புகளும் பிரகாசமாக உள்ளது. அந்த பட்டியல்:
1. விராட் கோலி : 1570
2. ரோஹித் சர்மா : 1527*
3. எம்எஸ் தோனி : 1112
4. சூர்யகுமார் யாதவ் : 300
5. ஹர்திக் பாண்டியா : 295

இதையும் படிங்க: இதுதான் டி20ல உங்ககிட்ட இருக்குற பெரிய மைனஸ்.. விராட் கோலி எதிர்கொள்ளவுள்ள மிகப்பெரிய சவால் – விவரம் இதோ

சொந்த மண்ணில் நடைபெற்ற 2023 உலகக் கோப்பையில் அதிரடியாக விளையாடிய இந்தியாவின் வெற்றிக்கு போராடிய ரோஹித் சர்மா தற்போது நல்ல ஃபார்மில் இருக்கிறார். எனவே இந்த தொடரில் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடி விராட் கோலியின் சாதனையை தகர்த்து அவர் தோனியின் வரலாற்றுச் சாதனையையும் உடைப்பதற்கு அதிகமாக வாய்ப்புள்ளது என்றால் மிகையாகாது.

Advertisement