இதுதான் டி20ல உங்ககிட்ட இருக்குற பெரிய மைனஸ்.. விராட் கோலி எதிர்கொள்ளவுள்ள மிகப்பெரிய சவால் – விவரம் இதோ

Kohli
- Advertisement -

இந்திய அணியின் முன்னணி நட்சத்திர வீரரான விராட் கோலி கடந்த 2022-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற டி20 உலக கோப்பையில் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் குவித்த வீரராக இருந்தார். ஆனாலும் அந்த தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி இங்கிலாந்து அணியிடம் மோசமான தோல்வியை சந்தித்து வெளியேறிய வேளையில் கடந்த ஓராண்டாக டி20 கிரிக்கெட் போட்டிகளில் விராட் கோலி விளையாடாமல் இருந்தார்.

ஆனால் இந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் விளையாட விராட் கோலி ஏற்கனவே விருப்பம் தெரிவித்திருந்த வேளையில் அவருக்கு ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக அவர் எதிர்வரும் டி20 உலக கோப்பை அணியிலும் இடம் பிடிப்பார் என்று தெரிகிறது.

- Advertisement -

இருந்தாலும் எதிர்வரும் இந்த இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் அவர் தனது திறனை நிரூபித்தால் மட்டுமே டி20 உலகக்கோப்பை அணியில் வாய்ப்பு கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. ஏனெனில் விராட் கோலியிடம் இருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையை தேர்வுக்குழு தலைவரான அஜித் அகார்கர் அவரிடமே கூறிவிட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் கடந்த 2020-ஆம் ஆண்டு முதலில் விராட் கோலியின் பேட்டிங்கில் சிறிய குறை ஒன்று தென்பட்டு வருகிறது. அதாவது சுழற்பந்து வீச்சுக்கு எதிராக விராட் கோலி தொடர்ச்சியாக தடுமாறி வருகிறார். கடந்த மூன்று ஆண்டுகளாகவே சுழற்பந்து வீச்சாளருக்கு எதிராக அவர் 116 ஸ்ட்ரைக் ரேட் மட்டுமே வைத்துள்ளார். அதுமட்டுமின்றி அடித்து விளையாட வேண்டிய 7 முதல் 16 ஓவர்களில் விராட் கோலி மிகவும் பொறுமையாக விளையாடுகிறார்.

- Advertisement -

குறிப்பாக மிடில் ஓவர்களில் அவர் 15 பந்துகளுக்கு ஒரு பவுண்டரி மட்டுமே அடிக்கிறார். இப்படி மிடில் ஓவர்களில் அவர் பொறுமையாக விளையாடுவதால் பின்னால் வரும் வீரர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கிறது. எனவே மிடில் ஓவர்களில் விராட் கோலி ஸ்ட்ரைக் ரேட்டை அதிகப்படுத்தி அதிரடியாக ரன் குவிக்க வேண்டும் என்று அணி நிர்வாகம் எதிர்பார்க்கிறது.

இதையும் படிங்க : 2 மாசத்துக்கு முன்கூட்டியே ஆட்டத்தை ஆரம்பித்த தல தோனி.. தெறிக்கவிடப்போகும் சீசன் – எகிறிய எதிர்பார்ப்பு

ஒருவேளை ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்த தொடரிலும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விராட் கோலி தடுமாறும் பட்சத்தில் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளரை எதிர்த்து அதிரடியாக விளையாடும் ஒரு வீரருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் அதன் காரணமாக கோலி டி20 உலக கோப்பையில் இடம் பெறாமல் கூட போகலாம் என்று கூறப்படுகிறது. ஆனால் விராட் கோலி போன்ற ஒரு மாபெரும் வீரர் எப்பேர்ப்பட்ட சவாலையும் சந்திக்க கூடியவர் என்பதால் அவர் இனிவரும் போட்டிகளில் அதிரடியாக மாறவும் வாய்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement