மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் தினேஷ் கார்த்திக் வித்தியாசமான ஹெல்மட் அணிந்திருக்க – என்ன காரணம் தெரியுமா?

Karthik
- Advertisement -

மும்பை வான்கடே மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக நடைபெற்ற 13-வது லீக் ஆட்டத்தில் கிட்டத்தட்ட வெற்றி வாய்ப்பை இழந்து விட்டது என்று நினைத்த வேளையில் பெங்களூர் அணிக்காக பினிஷர் ரோலில் களமிறங்கிய தினேஷ் கார்த்திக் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 4 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூரு அணிக்கு மிகப்பெரிய வெற்றியை தேடி தந்தார். இந்த போட்டியில் டாப் ஆர்டர் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை விடவே பெங்களூர் அணி 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தவித்தது.

shahbaz

- Advertisement -

பின்னர் பின்வரிசையில் விளையாடிய சபாஷ் அகமது 45 ரன்கள் அடிக்க தினேஷ் கார்த்திக் 23 பந்துகளில் 7 பவுண்டரி மற்றும் ஒரு சிக்சர் என ஆட்டமிழக்காமல் 44 ரன்களை அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். இதன் காரணமாக அவருக்கு ஆட்டநாயகன் விருதும் வழங்கப்பட்டது.

தினேஷ் கார்த்திக்கின் இந்த அதிரடியான ஆட்டத்தை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் தினேஷ் கார்த்திக் எவ்வளவு அபாயகரமான வீரர் என்பதையும் இந்த போட்டியின் மூலம் வெளிப்படுத்தியிருந்தார்.

karthik 1

இந்நிலையில் தினேஷ் கார்த்திக் அணிந்திருந்த ஹெல்மெட் வித்தியாசமாக இருந்ததால் அதனை ஏன் அவர் அணிந்து இருக்கிறார்? என்ற கேள்வி பலரது மத்தியிலும் இருந்தது. இந்நிலையில் அதற்கான விளக்கத்தை தான் நாங்கள் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம். அதன்படி மற்ற பேட்ஸ்மேன்களை காட்டிலும் தினேஷ் கார்த்திக் அணிந்திருக்கும் ஹெல்மட் சிறிது வித்தியாசமாகத்தான் இருக்கும்.

- Advertisement -

அதற்கு காரணம் யாதெனில் மற்ற ஹெல்மட்டை காட்டிலும் இந்த வடிவிலான ஹெல்மெட்டுகள் மிகவும் எடை குறைவு. இதன் காரணமாகவே அவர் அதனை பயன்படுத்துகிறார். மற்றபடி வேறு எந்த ஸ்பெஷல் காரணமும் இதில் கிடையாது. தனது சௌகரியத்திற்காக தினேஷ் கார்த்திக் இதுபோன்ற எடை குறைந்த ஹெல்மட்டை பயன்படுத்துகிறார்.

இதையும் படிங்க : நான் இன்னும் முடிந்துபோகவில்லை, போட்டு தாக்கிய டிகே – வாய்ப்பு கொடுப்பாரா கேப்டன் ரோஹித் சர்மா

தினேஷ் கார்த்திக் மட்டுமின்றி சன்ரைஸ் அணிக்காக விளையாடி வரும் ராகுல் திருப்பாதி, இலங்கை முன்னாள் வீரர் குமார் சங்ககாரா, இங்கிலாந்து வீரர் ஜேம்ஸ் டெய்லர் ஆகியோர் இந்த வகையான ஹெல்மட்டை பயன்படுத்தி விளையாடி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement