தந்தையைப் போல் இந்தியாவை காப்பாற்றிய மகன் ஜுரேல்.. சல்யூட் அடித்து கொண்டாடிய காரணம் என்ன?

Dhruv Jurel 3
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதி வரும் நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 23ஆம் தேதி தொடங்கிய அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து போராடி 353 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக ஜோ ரூட் சதமடித்து 122* ரன்கள் எடுக்க இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் சாய்த்தார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா, இந்த ஜடேஜா உள்ளிட்ட முக்கிய வீரர்கள் ஏமாற்றத்தை கொடுத்தனர். இருப்பினும் மறுபுறம் போராடிய இளம் வீரர் ஜெய்ஸ்வால் வழக்கம் போல இங்கிலாந்துக்கு சவால் கொடுத்து அரை சதமடித்து 73 குவித்து அவுட்டானார். ஆனாலும் மற்ற வீரர்கள் கை கொடுக்கத் தவறியதால் இரண்டாவது நாள் 219/7 என தடுமாறிய இந்தியா 300 ரன்கள் தாண்டாது என்று நம்பப்பட்டது.

- Advertisement -

தந்தை போல் மகன்:
ஆனால் அப்போது விக்கெட் கீப்பர் துருவ் ஜுரேல் – குல்தீப் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து நங்கூரமாக விளையாடி இந்தியாவை காப்பாற்ற போராடினர். அந்த வகையில் 8வது விக்கெட்டுக்கு முக்கியமான 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து ஓரளவு இந்தியாவை காப்பாற்றிய இந்த ஜோடியில் குல்தீப் யாதவ் 28 (131) ரன்களில் அவுட்டானார். இருப்பினும் மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய துருவ் ஜுரேல் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்து இந்தியா 300 ரன்கள் தாண்டுவதற்கு உதவினார்.

நேரம் செல்ல செல்ல அபாரமாக விளையாடிய அவர் சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துரதிஷ்டவசமாக 90 ரன்களில் ஆட்டமிழந்து மனமுடைந்து சென்றார். அதனால் இந்தியா தங்களுடைய முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்த நிலையில் இங்கிலாந்து சார்பில் அதிகபட்சமாக சோயப் பஷீர் 5 விக்கெட்களை எடுத்தார். முன்னதாக கடந்த போட்டியில் அறிமுகமாகி 46 ரன்கள் அடித்த துருவ் ஜுரேல் இந்த போட்டியில் 177/7 என தடுமாறிய இந்தியா 307 ரன்கள் குவிக்கும் அளவுக்கு அபாரமாக விளையாடி 90 ரன்கள் அடித்தார்.

- Advertisement -

குறிப்பாக இப்போட்டியில் தன்னுடைய முதல் அரை சதத்தை அடித்த அவர் அதை சல்யூட் அனைத்து வித்தியாசமாக கொண்டாடினார். இதற்கான காரணம் என்னவெனில் துருவ் ஜுரேல் தந்தை 1999ஆம் ஆண்டு நடைபெற்ற கார்கில் போரில் வெற்றி கண்ட இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அதனாலயே சிறுவயதிலேயே நாட்டுக்கு விளையாட வேண்டும் என்ற எண்ணத்தை கொண்ட துருவ் ஜுரேல் 13 வயதிலேயே ஆக்ராவிலிருந்து நொய்டாவுக்கு பயணித்து அகடமியில் இணைந்தார்.

அவருக்கு அம்மா தங்க நகைகளை விற்று கிரிக்கெட்டுக்கு தேவையான உபகரணங்களை வாங்குவதற்கு உதவி செய்தார். அதை பயன்படுத்தி கடினமாக உழைத்த துருவ் ஜுரேல் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற 2020 அண்டர்-19 உலகக் கோப்பையில் இந்தியா ஃபைனல் வரை செல்வதற்கு விக்கெட் கீப்பராக பங்காற்றினார்.

இதையும் படிங்க: 177/7 என வீழ்ந்த அணியை.. டெயில் எண்டருடன் சேர்ந்து காப்பாற்றி மனமுடைந்த துருவ் ஜுரேல்.. இந்தியா தப்பியதா?

அதன் காரணமாக ஐபிஎல் தொடரில் தேர்வாகி ராஜஸ்தான் அணியில் அசத்திய அவர் தற்போது சர்வதேச கிரிக்கெட்டிலும் 177/7 என தடுமாறிய போது தன்னுடைய தந்தையைப் போல் சிறப்பாக விளையாடி இந்தியாவை காப்பாற்றினார். அப்போது தன்னுடைய தந்தையை நினைவுக்கூறும் வகையிலேயே அவர் சல்யூட் அடித்து கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

Advertisement