177/7 என வீழ்ந்த அணியை.. டெயில் எண்டருடன் சேர்ந்து காப்பாற்றி மனமுடைந்த துருவ் ஜுரேல்.. இந்தியா தப்பியதா?

Dhruv Jurel 2
- Advertisement -

ராஞ்சியில் பிப்ரவரி 23ஆம் தேதி துவங்கிய இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 353 ரன்கள் எடுத்தது அந்த அணிக்கு முக்கிய பேட்ஸ்மேன்கள் ஏமாற்றத்தை கொடுத்த போதிலும் அதிகபட்சமாக ஜோரூட் அபாரமாக விளையாடி சதமடித்து 122* ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

அதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணிக்கு கேப்டன் ரோஹித் சர்மா 2, சுப்மன் கில் 38, ரஜத் படிடார் 17, ரவீந்திர ஜடேஜா சர்பராஸ் கான் 14, ரவிச்சந்திரன் அஸ்வின் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தனர். அதனால் துவக்க வீரர் ஜெய்ஸ்வால் அரை சதமடித்து 73 குவித்து போராடியும் இரண்டாவது நாள் முடிவில் 219/7 என இந்தியா தடுமாறியது. அப்போது துருவ் ஜுரேல் மற்றும் குல்தீப் யாதவ் ஆகியோர் ஜோடி சேர்ந்து காப்பாற்ற முயற்சித்தனர்.

- Advertisement -

அசத்திய ஜுரேல்:
குறிப்பாக இரண்டாவது நாள் மாலை வேளையில் இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்து விக்கெட்டை விடாத இந்த ஜோடி இன்று துவங்கிய 3வது நாளிலும் சிறப்பாக விளையாடியது. அந்த வகையில் 8வது விக்கெட்டுக்கு முக்கியமான 76 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவுக்கு கை கொடுத்த இந்த ஜோடியில் குல்தீப் யாதவ் 131 பந்துகளை எதிர்கொண்டு முக்கியமான 28 ரன்கள் குவித்து போராடி அவுட்டானார்.

அவருடன் சேர்ந்து மறுபுறம் தொடர்ந்து அசத்தலாக விளையாடிய துருவ் ஜுரேல் தன்னுடைய முதல் அரை சதமடித்தார். அந்த நிலையில் வந்த ஆகாஷ் தீப் நிதானமாக விளையாட முயற்சித்து 9 ரன்களில் நடையை காட்டினார். ஆனால் மறுபுறம் தொடர்ந்து இங்கிலாந்துக்கு சவாலை கொடுத்த துருவ் ஜுரேல் நேரம் செல்ல செல்ல நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதத்தை நெருங்கினார்.

- Advertisement -

அந்த வகையில் 6 பவுண்டரின் 4 சிக்சருடன் 90 (149) ரன்கள் தொட்ட அவர் சதமடிப்பார் என்ற ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்தினர். ஆனால் அப்போது துரதிஷ்டவசமாக டாம் ஹார்ட்லி சுழலில் போல்ட்டான அவர் சதமடிக்க முடியாமல் மனமுடைந்து சென்றது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது. இருப்பினும் 177/7 என தடுமாறிய போது டெயில் எண்டர்களுடன் சேர்ந்த அவர் 90 ரன்கள் அடித்து காப்பாற்றியதால் தப்பிய இந்தியா முதல் இன்னிங்ஸில் 307 ரன்கள் எடுத்தது.

இதையும் படிங்க: வெறும் 2 ரன்ஸ்.. 5 பரிதாபத்துக்கு பின் சாதித்த மகளிர் ஆர்சிபி.. யூபி அணியை கடைசி ஓவரில் வீழ்த்தியது எப்படி?

அதனால் எப்படியும் 120 ரன்கள் பின்தங்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய இறுதியில் இங்கிலாந்தை விட முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் மட்டுமே குறைவாக எடுத்து ஓரளவு தப்பித்தது என்றே சொல்லலாம். மறுபுறம் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டு இந்தியாவை கட்டுப்படுத்திய இங்கிலாந்து சார்பில் சோயப் பஷீர் 5, டாம் ஹார்ட்லி 3 விக்கெட்டுகளை எடுத்தனர். இதைத்தொடர்ந்து இங்கிலாந்து தங்களுடைய இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்து வருகிறது.

Advertisement