விராட் கோலியில் பாதி வருவதற்குள் பாபர் அசாமை கெடுத்துட்டீங்க – முன்னாள் பாக் வீரர் கவலை

Babar-Azam-and-Virat-Kohli
- Advertisement -

வரும் அக்டோபர் மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கோப்பைக்கு முன்னோட்டமாக சமீபத்தில் நடைபெற்று முடிந்த 2022 ஆசிய கோப்பையில் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்பட்ட பரம எதிரிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் முக்கிய நேரங்களில் சொதப்பி வெறும் கையுடன் நாடு திரும்பியது. குறிப்பாக பாபர் அசாம் தலைமையில் சூப்பர் 4 சுற்றில் தேவையான வெற்றிகளைப் பெற்று பைனலுக்கு சென்ற பாகிஸ்தான் தங்களை விட சற்று பலவீனமான இலங்கையிடம் துபாய் மைதானத்தில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் 58/5 என இலங்கையை மடக்கிப் பிடித்தும் அதன்பின் ரன்களை வாரி வழங்கி பேட்டிங்கில் மொத்தமாக சொதப்பி படுதோல்வியை சந்தித்தது.

SL vs PAK Babar Azam

- Advertisement -

இந்த தோல்விக்கு நம்பிக்கை நட்சத்திரம் மற்றும் கேப்டன் பாபர் அசாமின் மோசமான செயல்பாடுகள் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. முதலில் இந்த தொடருக்கு முன்பாக உலகின் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனாக நல்ல பார்மில் களமிறங்கிய அவர் தரமாக பந்துவீசிய இந்தியா, ஆப்கானிஸ்தான், இலங்கை போன்ற அணிகளின் தரமான பந்து வீச்சில் 10, 9, 14, 0, 30, 5 என சொற்ப ரன்களில் அவுட்டாகி 100 ரன்களைக் கூட தாண்டாமல் சுமாராக செயல்பட்டு பார்மை இழந்தார். அதனால் நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேன் என்ற அந்தஸ்தை இழந்த அவர் தொடர் முடிந்து தற்போது தரவரிசையில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.

கேப்டன்ஷிப் அழுத்தம்:
மேலும் அவருடைய கேப்டன்ஷிப் பேட்டிங்கை விட படு மோசமாக இருந்தது என்றே கூறலாம். ஏனெனில் முக்கியமான பைனலில் டாஸ் அதிர்ஷ்டம் கிடைத்தும் முதல் 8 ஓவர்களில் தங்களது பவுலர்கள் சிறப்பாக பந்துவீசி 58/5 என கட்டுப்படுத்தியும் கடைசி 10 ஓவர்களில் இலங்கை மேற்கொண்டு 100க்கும் மேற்பட்ட ரன்களை அடிக்கும் அளவுக்கு அவருடைய கேப்டன்ஷிப் சுமாராக இருந்தது. மொத்தத்தில் டி20 உலகக் கோப்பைக்கு முன்னதாக தங்களது அணியின் முதுகெலும்பாக கருதப்படும் பாபர் அசாம் பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப்பில் திணறுவது அந்நாட்டு ரசிகர்களையும் முன்னாள் வீரர்களையும் கவலையடைய வைத்துள்ளது.

Babar-Azam-and-Virat-Kohli

இந்நிலையில் சிறந்த வீரராக உருவாக துவங்கிய ஆரம்பத்திலேயே கேப்டன்ஷிப் பொறுப்பை பாபர் அசாமிடம் ஒப்படைத்து பாகிஸ்தான் வாரியம் தவறு செய்துவிட்டதாக முன்னாள் வீரர் கம்ரான் அக்மல் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். 2019இல் சிறப்பாக செயல்படத் துவங்கிய அவரிடம் 2020இல் உடனடியாக கேப்டன்ஷிப் பொறுப்பை கொடுத்தது தவறு என்று ஏற்கனவே தெரிவித்ததாக கூறும் அவர் இதனால் விராட் கோலியின் பாதியளவு உயரத்தை எட்டுவதற்கு முன்பாகவே பாபர் அசாம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக வேதனை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “பைசலாபாத் நகரில் நடந்த ஒரு போட்டியில் டாஸ் வீச வரும் போது தான் பாபர் அசாம் கேப்டனாக நியமிக்கப்பட்டதை நான் அறிந்தேன். அதனால் அப்போதே அது அவர் கேப்டனாவதற்கு சரியான தருணமில்லை என்று கூறியிருந்தேன். ஏனெனில் முதலில் நீங்கள் 2 – 3 வருடங்கள் உங்களது சிறந்த செயல்பாடுகளை கொடுக்க வேண்டும். காரணம் மொத்த பேட்டிங் வரிசையும் உங்களை நம்பி இருக்கிறது. மேலும் முதலில் நீங்கள் விராட் கோலி, ஸ்டீவ் ஸ்மித் போன்றவர்களின் உயரத்தை எட்டியிருக்க வேண்டும்”

Kamran

“அவ்வாறு செய்திருந்தால் 35 – 40 சதங்களை அடித்து கேப்டன்ஷிப் பொறுப்பையும் மகிழ்ச்சியுடன் செய்திருக்க முடியும். ஆனால் சர்பிராஸ் சென்றதும் நீங்கள் கேப்டனாக வந்து விட்டீர்கள். ஆனால் தற்போது அதில் விடுபட இதுவே சரியான தருணம். இதை நான் ஏற்கனவே அவரிடம் கூறியிருந்தாலும் இது அவருடைய முடிவாகும். மேலும் அவரிடம் கேப்டன்ஷிப் பொறுப்பை வழங்கியவர்கள் தற்போது அவரிடம் பேசி அதைத் திரும்பப் பெற்றுக் கொண்டு பேட்டிங்கில் மட்டும் கவனம் செலுத்துமாறு சொல்ல வேண்டும்”

இதையும் படிங்க: நாட்டை விட பணமே முக்கியம், கடைசி நேரத்தில் டி20 உ.கோ அணியில் வெளியேறிய ஸ்டார் நியூஸிலாந்து வீரர் – நடந்தது என்ன

“ஏனெனில் கேப்டன்ஷிப் அழுத்தத்தால் அவருடைய பேட்டிங் மற்றும் அணுகுமுறை பாதிக்கப்பட்டுள்ளது சில இடங்களில் தெளிவாக தெரிகிறது. அதே சமயம் தற்சமயத்தில் அவரை கேப்டன் பதவியிலிருந்து நீக்குவது சரியான முடிவாகவும் இருக்காது. அது பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு பின்னடைவை ஏற்படுத்தும்” என்று கூறினார். அதாவது கேப்டன்ஷிப் அழுத்தத்தால் பாபர் அசாம் தவிப்பதால் அவர் தாமாக முன்வந்து பதவி விலகுவது சரியாக இருக்கும் எனக்கூறும் கம்ரான் அக்மல் ஒருவேளை அவர் அந்த பதவியில் தொடர விரும்பினால் அவரை பதவியிலிருந்து நீக்கக் கூடாது என்று கூறியுள்ளார்.

Advertisement