
இந்தியாவில் ஆண்டுதோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அடுத்த சீசனானது எதிர்வரும் 2026 மார்ச் மாதம் இறுதியில் துவங்க இருக்கிறது. கடந்த ஆண்டு நடைபெற்ற 2025 ஐ.பி.எல் தொடரின் போது மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியானது முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி சாதனை நிகழ்த்தியது.
இந்த வெற்றி ஆர்.சி.பி அணியின் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருந்த வேளையில் அந்த தொடர் முடிந்த கையோடு சின்னசாமி மைதானத்தில் வெற்றிக்கான கொண்டாட்ட நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டது. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரிய சோகத்தை ஏற்படுத்தியிருந்த வேளையில் ஆர்.சி.பி அணியின் நிர்வாகத்தின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு இனி அங்கு போட்டிகள் நடத்தக்கூடாது என்ற முடிவுகள் வெளியானது. இந்நிலையில் சின்னசாமி மைதானம் தங்களது சொந்த மைதானம் என்பதனால் அங்கு போட்டிகளை நடத்த வேண்டும் என கர்நாடகா அரசு முன்வந்து ஒரு புதிய வழக்கை பதிவு செய்தது.
அந்த வழக்கிற்கு முடிவுகள் வெளியாகி தற்போது சின்னசாமி மைதானத்தில் போட்டிகளை நடத்தலாம் என்ற செய்தி வெளியாகியுள்ளது. அதன்படி வெளியான தகவலில் இந்த ஆண்டு ஆர்.சி.பி அணி விளையாடும் லீக் சுற்று போட்டிகளில் ஐந்து ஆட்டங்களில் சின்னசாமி மைதானத்தில் விளையாடும் என்றும் இரண்டு ஆட்டங்கள் ராய்ப்பூர் நகரில் நடைபெறும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இறுதிப்போட்டியில் விளையாட மீண்டும் நாங்க இங்க வருவோம்.. அது உறுதி – தெ.ஆ கோச் அதிரடி
மேலும் போட்டி நடைபெறும் சின்னசாமி மைதானத்தில் 35 ஆயிரம் பேர் அமரும் வகையில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அதோடு இந்த ஐபிஎல் தொடரின் ஆரம்ப துவக்க விழாவும், இறுதி போட்டியும் இங்கே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த செய்தி ஆர்.சி.பி ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.