இறுதிப்போட்டியில் விளையாட மீண்டும் நாங்க இங்க வருவோம்.. அது உறுதி – தெ.ஆ கோச் அதிரடி

RSA Coach
- Advertisement -

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற்று வரும் நடப்பு 2026 ஆம் ஆண்டிற்கான ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதி சுற்று போட்டிகளானது நடைபெறவுள்ளது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாடி வந்த இந்த தொடரில் 8 அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்ற வேளையில் சூப்பர் 8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

இறுதிப்போட்டிக்கு கண்டிப்பா வருவோம் : தெ.ஆ பயிற்சியாளர்

அந்த வகையில் இந்த டி20 தொடரின் முதல் அரையிறுதி போட்டியில் தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகள் நாளை மார்ச் 4-ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பலப்பரீட்சை நடத்த உள்ளன. அதன்பிறகு மார்ச் 5-ஆம் தேதி இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மும்பை வான்கடே மைதானத்தில் மோதுகின்றன.

- Advertisement -

இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெறும் அணிகள் மார்ச் 8-ஆம் தேதி அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் இறுதி போட்டியில் விளையாடும். இந்நிலையில் இந்து தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி நாளை கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் நடைபெறவிருக்கும் வேளையில் அதற்கு முன்னதாக தென்னாப்பிரிக்கா அணியின் பயிற்சியாளர் இந்த தொடரின் இறுதிப்போட்டி குறித்து சில கருத்துக்களை வெளிப்படுத்தி உள்ளார்.

அந்த வகையில் அவர் கூறியதாவது : இந்த டி20 உலக கோப்பை தொடரில் பெரும்பாலும் நாங்கள் அகமதாபாத் நகரிலேயே விளையாடி உள்ளதால் இந்த மைதானம் எங்களுக்கு சொந்த மைதானம் போன்ற ஒரு உணர்வை தருகிறது. எனவே அரையிறுதி போட்டியில் வெற்றி பெற்று மீண்டும் இறுதிப் போட்டிக்காக இந்த மைதானத்திற்கு திரும்பி வருவோம்.

- Advertisement -

இதையும் படிங்க : இந்தியா இங்கிலாந்து அரையிறுதி போட்டி மழையால் ரத்தானால் என்ன ஆகும்? – ஐ.சி.சி சொல்வது என்ன?

இந்த நரேந்திர மோடி மைதானத்தின் ஒவ்வொரு அங்குலமும் எங்களுக்கு தெரியும். அகமதாபாத் மைதானத்தின் சூழல் எங்களுக்கு மிகவும் சாதகமாக இருப்பதனால் மீண்டும் இறுதி போட்டியில் இங்கு விளையாட வருவோம் என தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement