விராட் கோலியால் எழுந்த பிரச்சனை. ஆர்.சி.பி நிர்வாகம் அடித்த யு டர்ன் – லேட்டாக இதுதான் காரணமாம்

RCB
- Advertisement -

இந்தியாவில் வரும் மார்ச் மாதம் 26-ஆம் தேதி துவங்கும் பதினைந்தாவது ஐபிஎல் தொடருக்கான அனைத்து அணிகளின் கேப்டன்களும் அறிவிக்கப்பட்ட வேளையில் இன்னும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி மட்டும் தங்களது புதிய கேப்டன் யார்? என்பதை இன்னும் அறிவிக்கவில்லை. கடந்த சீசனில் கேப்டனாக செயல்பட்ட விராட் கோலி அந்த தொடர் முடிந்த கையோடு கேப்டன் பதவியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். அதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு முதல் பெங்களூர் அணிக்கு புதிய கேப்டன் செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டது.

RCB

- Advertisement -

இந்நிலையில் ஏற்கனவே அந்த அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மேக்ஸ்வெல் இம்முறை தக்க வைக்கப்பட்டதால் அவரே கேப்டனாக செயல்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடர் தொடங்கும் வேளையில் தனது திருமணத்திற்காக அவர் ஆரம்பத்தில் சில போட்டிகளில் விடுப்பு எடுத்துள்ளதால் அவர் கேப்டன் பதவியில் நியமிக்க வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டது.

இதன் காரணமாக நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் மெகா ஏலத்தில் பெங்களூர் அணிக்காக தேர்வு செய்யப்பட்ட தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் மற்றும் தென் ஆபிரிக்க முன்னாள் கேப்டன் டு பிளிசிஸ் ஆகிய இருவரில் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்படுவார்கள் என்று கூறப்பட்டது. இப்படி ஆர்சிபி அணியின் புதிய கேப்டனாக 3 வீரர்கள் பரிசீலிக்கப்பட்ட வேளையில் தற்போது ஆர்சிபி அணி கேப்டன் பொறுப்பிற்கான வீரரை தேர்வு செய்வதில் இறுதி முடிவை எடுத்துள்ளதாக ஒரு தகவலை வெளியிட்டுள்ளது.

rcb 1

மேலும் பெங்களூரு அணியின் புதிய கேப்டன் யார்? என்பதை வரும் 12ஆம் தேதி மாலை 4 மணிக்கு அதிகாரப்பூர்வமாக தங்களது ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்படும் என்றும் அந்த அணியின் நிர்வாகம் சார்பில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிய கேப்டன் அறிவிக்கப்படும் போது அணியின் ஜெர்சியும் அறிவிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் இந்த விடயத்தில் ஒரு திடீர் ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரில் இருந்து விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து விலகுவதாக தனது கடிதத்தை அளித்து இருந்தாலும் அதனை ஆர்.சி.பி நிர்வாகம் இன்னமும் ஏற்கவில்லை என்கிற தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் கோலி இந்த முறையும் கேப்டனாக தொடர வேண்டும் என்று ஆர்சிபி நிர்வாகம் உறுதியாக இருப்பதாக தெரிகிறது.

இதையும் படிங்க : ரோஹித் சர்மாவால் தூங்காமல் தவித்த கெளதம் கம்பீர் – அப்படி என்ன நடந்தது, அவரே கூறும் பின்னணி

இதன் காரணமாக இந்த ஆண்டுக்கு மட்டும் அவரை கேப்டனாக நீடிக்குமாறும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதால் இதுவரை அவர்கள் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை என்றும் கோலிக்கும் இந்த ஆண்டிற்கான கேப்டன் பதவியில் நீடிக்க ஒரு வாய்ப்பு உள்ளதால் புதிய கேப்டன் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது ரசிகர்கள் மத்தியில் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

Advertisement