ரோஹித் சர்மாவால் தூங்காமல் தவித்த கெளதம் கம்பீர் – அப்படி என்ன நடந்தது, அவரே கூறும் பின்னணி

Gambhir
- Advertisement -

ஐபிஎல் 2022 தொடர் வரும் மார்ச் 26ஆம் தேதி முதல் கோலாகலமாக துவங்கி மே 9ம் தேதி வரை 2 மாதங்களுக்கு மேல் ரசிகர்களை மகிழ்விக்க தயாராகி வருகிறது. இந்த வருடம் லக்னோ மற்றும் குஜராத் ஆகிய 2 புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் பங்குபெறும் 74 போட்டிகள் கொண்ட பிரம்மாண்ட ஐபிஎல் தொடர் 65 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் வரும் மார்ச் 26 – மே 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ள 70 போட்டிகள் கொண்ட லீக் சுற்றுப் போட்டிகளுக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

Ganguly-ipl
IPL MI

அந்த அட்டவணையின்படி முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் எம்எஸ் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இந்த லீக் சுற்றுப் போட்டிகள் மும்பை மற்றும் புனே ஆகிய நகரங்களில் உள்ள 4 மைதானங்களில் மட்டும் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

- Advertisement -

வெற்றிகரமான மும்பை இந்தியன்ஸ்:
முன்னதாக இம்முறை 10 அணிகள் பங்கு பெறுவதால் வழக்கத்திற்கு மாறாக அனைத்து அணிகளும் தலா 5 அணிகள் கொண்ட குரூப் ஏ மற்றும் பி ஆகிய 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன் ஒரு அணி எத்தனை கோப்பைகளை வென்றுள்ளது மற்றும் எத்தனை பைனல்களில் விளையாடியுள்ளது என்பதன் அடிப்படையில் இந்த பிரிவு பிடிக்கப்பட்டுள்ளது.

mumbai

அந்த வகையில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்று ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான அணியாக சாதனை படைத்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி குரூப் ஏ பிரிவில் முதல் அணியாக இடம் பிடித்துள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் இதர அணிகளை காட்டிலும் மும்பை அணிக்கு அதிக ரசிகர்கள் காணப்படுவதால் 6வது முறையாக அந்த அணி கோப்பையை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு பலரிடம் ஏற்பட்டுள்ளது.

- Advertisement -

தூங்காத இரவை கொடுத்த ரோஹித்:
மும்பை இந்தியன்ஸ் அணி இன்று இந்த அளவுக்கு வெற்றிகரமாக திகழ்கிறது என்றால் அதற்கு மிக மிக முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற வழிநடத்தி வரும் ரோகித் சர்மா ஆவார். கடந்த 2013ஆம் ஆண்டு வரை சச்சின் டெண்டுல்கர், ரிக்கி பாண்டிங் என ஜாம்பவான்கள் கேப்டன்ஷிப் செய்த போதிலும் மும்பை அணிக்கு கோப்பையை யாரும் வென்று கொடுக்க முடியவில்லை. ஆனால் கேப்டனாக பொறுப்பேற்ற முதல் வருடத்திலேயே அந்த அணிக்கு கோப்பை வென்று கொடுத்த ரோகித் சர்மா இன்று தோனியையே மிஞ்சும் அளவுக்கு ஐபிஎல் வரலாற்றில் வெற்றிகரமான கேப்டனாக சரித்திரம் படைத்துள்ளார்.

Rohit Sharma Gautam Gambhir

இந்நிலையில் ஐபிஎல் தொடரின்போது ரோகித் சர்மா பல தூங்காத இரவுகளை கொடுத்ததாக முன்னாள் இந்திய வீரர் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு. “ஒரு கேப்டனாக எனக்கு ரோகித் சர்மா பல தூங்காத இரவுகளை கொடுத்தவர். கிறிஸ் கெயில் அல்லது ஏபி டிவில்லியர்ஸ் போன்றவர்கள் கூட கொடுக்காத பயத்தை ரோகித் சர்மா எனக்கு கொடுத்தார். அவர் எப்போதுமே ஒரு கேப்டனாக எனக்கு பல தூங்காத இரவுகள் கொடுத்த வீரர். ஏனெனில் ஐபிஎல் வரலாற்றில் அவரை விட வேறு எந்த ஒரு வீரரும் வெற்றிகரமான கேப்டனாக இருந்ததில்லை” என கூறினார்.

ரோஹித் சர்மா கேப்டனாக பொறுப்பேற்க துவங்கிய 2013ஆம் ஆண்டு வாக்கில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு கேப்டனாக செயற்பட்ட கௌதம் கம்பீர் 2 முறை கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார் . அந்த சமயத்தில் ஒரு எதிரணி கேப்டனாக எப்படி ரோகித் சர்மாவை சமாளிக்கப் போகிறோம் என்ற யோசனையிலும் அச்சத்திலும் பல நாட்கள் தூங்காமல் இருந்ததாக அவரின் கேப்டன்சிப் பற்றி கௌதம் கம்பீர் வித்தியாசமான முறையில் பாராட்டினார்.mumbai

ரோஹித் இல்லையேல் மும்பை இல்லை:
என்னதான் அம்பானி குடும்பம் பல கோடி ரூபாய்களை செலவழித்து நட்சத்திர வீரர்களை வாங்கினாலும் அவர்களை சரியான வழியில் நடத்தி கோப்பையை வென்று கொடுத்த பெருமை ரோகித் சர்மாவை சேரும். சொல்லப்போனால் ரோகித் சர்மா இல்லை என்றால் மும்பை இல்லை என்ற நிலைமை உருவாகியுள்ளது. அப்படிப்பட்ட தரமான வீரராக காணப்படும் ரோகித் சர்மா பற்றி அதே நிகழ்ச்சியில் மற்றொரு முன்னாள் இந்திய வீரர் இர்பான் பதான் கூறியது பின்வருமாறு. “ஐபிஎல் மற்றும் மும்பை இந்தியன்ஸ் வரலாற்றில் ரோகித் சர்மா என்றுமே காலத்தால் அழிக்க முடியாதவர். மும்பை இந்தியன்ஸ் என்று கூறினாலே அதன் மேல் ரோஹித் சர்மாவின் பெயர் தான் இருக்கும்” என பாராட்டினார்.

Advertisement