அந்த 2 இந்திய வீரர்களை டார்கெட் செய்தோம்.. ஆனா மிஸ் ஆயிடுச்சி – ஆர்.சி.பி அணியின் இயக்குனர் தகவல்

RCB
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது ஆண்டுதோறும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. இதன் காரணமாக அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் ஐபிஎல் தொடரானது மிகப் பெரிய சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் முதற்கட்டமாக தற்போது அடுத்த ஐபிஎல் தொடருக்கான வீரர்களின் மிக ஏலமும் சவுதி அரேபியாவில் நடைபெற்று முடிந்தது.

நாங்க குறிவச்சதே அந்த 2 வீரர்களுக்கு தான் :

இந்த மெகா ஏலத்தில் பங்கேற்ற பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது நிச்சயம் அடுத்தமுறை கோப்பையை கைப்பற்ற வேண்டும் என்று முனைப்புடன் மிகச் சிறப்பான வீரர்களை தேர்வு செய்து தற்போது அணியில் இணைத்துள்ளது. சில நட்சத்திர வீரர்களை அந்த அணி இழந்து இருந்தாலும் சரியான இந்திய வீரர்கள் மற்றும் வெளிநாட்டு ஹிட்டர்கள் என இம்முறை ஆர்சிபி அணி பலமான அணியாக மாறியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் ஆர்சிபி அணி முக்கியமான இரண்டு இந்திய வீரர்களை வாங்க நினைத்ததாகவும் ஆனால் மெகா ஏலத்தின் போது அவர்கள் பெரிய தொகைக்கு சென்றதால் அவர்களை வாங்க முடியவில்லை என்றும் அந்த அணியின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

எங்களது அணியில் இம்முறை இந்திய வீரர்களை அதிகமாக வாங்க நினைத்தோம். அதன்படியே ஏலத்தில் எங்களுடைய கேள்விகளும் இருந்தது. இந்திய வீரர்களான வெங்கடேஷ் ஐயர் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர்களை நாங்கள் வாங்க நினைத்தோம். ஆனால் யுஸ்வேந்திர சாஹல் நாங்கள் நினைத்ததை விட இருமடங்கு தொகை அதிகமாக சென்றுவிட்டார். அதனால் எங்களால் அவரை வாங்க முடியவில்லை.

- Advertisement -

அதேபோன்று அவரை வாங்க வைத்திருந்த தொகையை வைத்து வெங்கடேஷ் ஐயரை வாங்கிவிடலாம் என்று நினைத்தோம். ஏனெனில் வெங்கடேஷ் ஐயர் எங்களது ஸ்டைலில் விளையாடக்கூடிய ஒரு வீரர். டாப் ஆர்டரில் ஒரு இந்திய இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதால் அவரை வாங்க நினைத்தோம். ஆனாலும் அவரும் நாங்கள் நினைத்ததை விட அதிக தொகைக்கு 22.25 கோடி வரை சென்று விட்டார்.

இதையும் படிங்க : விராட் கோலியும் தொடர்பில் தான் இருந்தார்.. மெகா ஏலத்தில் நடைபெற்ற சுவாரசியத்தை பகிர்ந்த – ஆர்.சி.பி இயக்குனர்

எனவே அவரையும் எங்களால் வாங்க முடியாமல் போனது. அதேபோன்று ஷ்ரேயாஸ் ஐயரையும் நாங்கள் வாங்கலாம் என்று நினைத்தோம். ஆனால் அவரும் எங்களது பட்ஜெட்டில் அடங்கவில்லை என்று ஆர்.சி.பி அணியின் நிர்வாக இயக்குனர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement