- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2025: கேப்டனாக விராட் கோலி? ஆண்டி ப்ளவர் சூசகம்.. ஆர்சிபி தக்க வைத்த வீரர்கள் லிஸ்ட் இதோ

ஐபிஎல் 2024 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெற உள்ளது. அதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்க வைத்த வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இம்முறையும் அதிரடியான சில மாற்றங்களை செய்துள்ளது. குறிப்பாக கடந்த சீசனில் சுமாராக விளையாடிய கிளன் மேக்ஸ்வெல், கேமரூன் கிரீன் ஆகிய நட்சத்திர வீரர்களை ஆர்சிபி கழற்றி விட்டுள்ளது.

அதை விட முதன்மை வேகப்பந்து வீச்சாளராக செயல்பட்டு வந்த முகமது சிராஜையும் பெங்களூரு அணி நிர்வாகம் அதிரடியாக கழற்றி விட்டுள்ளது. தற்சமயத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே சுமாராக பந்து வீசும் அவர் சமீபத்திய ஐபிஎல் தொடர்களிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. அதன் காரணமாக பெங்களூரு நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது.

- Advertisement -

கேப்டனாக விராட் கோலி:

அதே சமயம் சந்தேகமின்றி நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலியை பெங்களூரு நிர்வாகம் 21 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு தக்க வைத்துள்ளது. 2008 முதல் தொடர்ந்து அந்த அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரராக சாதனை படைத்துள்ளார். அந்த வகையில் முடிந்தளவுக்கு வெற்றிகளில் பங்காற்றும் அவர் எதிர்பார்க்கப்பட்டது போலவே தக்க வைக்கப்பட்டுள்ளார்.

சொல்லப்போனால் டு பிளேஸிஸ் மீண்டும் தக்க வைக்கப்படாததால் அந்த அணியில் கேப்டன்ஷிப் பதவி காலியாக உள்ளது. அந்த இடத்திற்கு மீண்டும் விராட் கோலி வருவார் என்று செய்திகள் காணப்படுகின்றன. அதை ஆர்சிபி அணியின் பயிற்சியாளர் ஆன்டி பிளவர் சூசகமாக தெரிவித்துள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

பெங்களூரு வீரர்கள்:

“விராட் கோலி ரோல் மாடலாக திகழ்பவர் தொழில்முறை. விளையாட்டு வீரராக அற்புதமாக செயல்படக் கூடியவர். 2024 சீசனில் நாங்கள் பிளே ஆஃப் செல்வதற்கு அவர் முக்கிய பங்காற்றினார். அவருடைய தலைமை பண்பை மீண்டும் நாங்கள் 2025 தொடரில் எதிர்பார்க்க உள்ளோம்” என்று கூறினார். அவருக்கு அடுத்தபடியாக 2023 ஐபிஎல் எலிமினேட்டரில் சதமடித்து மிரட்டிய ரஜத் படிடார் 11 கோடிக்கு பெங்களூரு அணி தக்க வைத்துள்ளது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ்க்கு டாட்டா.. உழைப்பால் 55 லட்சம் டூ 13 கோடிக்கு உயர்ந்த ரிங்கு.. கொல்கத்தா ரிட்டன்சன் லிஸ்ட்

3வதாக யாஷ் தயாள் 5 கோடிக்கு தக்க வைக்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு எதிராக தோனியை அவுட்டாக்கி பிளே ஆஃப் செல்ல முக்கிய பங்காற்றிய அவரை ஆர்சிபி மீண்டும் தக்க வைத்துள்ளது. இந்த மூவரையும் தக்க வைக்க ஆர்சிபி அணி நிர்வாகம் 37 கோடிகளை செலவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -