ஐபிஎல் 2025: ஸ்ரேயாஸ்க்கு டாட்டா.. உழைப்பால் 55 லட்சம் டூ 13 கோடிக்கு உயர்ந்த ரிங்கு.. கொல்கத்தா ரிட்டன்சன் லிஸ்ட்

KK team
- Advertisement -

ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடருக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் நடைபெறும் உள்ளது. அதற்கு முன்பாக அனைத்து அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளன. அதில் நடப்பு சாம்பியனாக திகழும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தங்களுடைய கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை மொத்தமாக கழற்றி விட்டுள்ளது ரசிகர்களுக்கு ஆச்சரியமாக அமைந்துள்ளது.

ஏனெனில் அவருடைய தலைமையில் தான் 10 வருடங்கள் கழித்து கொல்கத்தா மூன்றாவது கோப்பையை வென்ற சாதனை படைத்தது. இருப்பினும் பேட்டிங்கில் பெரிய ரன்கள் எடுக்காத அவர் சமீபத்தில் உள்ளூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் கூட சுமாராகவே விளையாடினார். அதனால் அவரை கழற்றி விட்டுள்ள கொல்கத்தா ஏலத்தில் ஆர்டிஎம் பயன்படுத்தி வாங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

உழைப்பால் உயர்ந்த ரிங்கு:

அந்த அணி முதலாவதாக ரிங்கு சிங்கை தக்க வைத்துள்ளது. கடந்த 2018 முதல் பெஞ்சில் அமர்ந்து வந்த அவர் 2023 ஐபிஎல் தொடரில் குஜராத்துக்கு எதிராக 5 பந்துகளில் 5 சிக்சர்கள் வைத்து அற்புதமான வெற்றியை பெற்றுக் கொடுத்தார். அதனால் இந்தியாவுக்காகவும் அறிமுகமான அவர் தோனிக்கு பின் சிறந்த ஃபினிஷர் கிடைத்து விட்டார் என்று ரசிகர்கள் பாராட்டும் அளவுக்கு அசத்தி வருகிறார்.

அப்படி உழைப்பால் உயர்ந்த ரிங்கு சிங் 2024 ஐபிஎல் தொடரில் வெறும் 55 லட்சத்துக்கு விளையாடிய நிலையில் அடுத்த வருடம் 13 கோடி என்ற பிரம்மாண்ட தொகைக்கு தக்க வைக்கப்பட்டுள்ளது ரசிகர்களை மகிழ்ச்சியடைய வைத்துள்ளது. அடுத்ததாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சுனில் நரேன் ஆகியோரை தலா 12 கோடிகளுக்கு தக்க வைத்துள்ளது. இந்த இருவருமே சிறந்த ஸ்பின்னர்களாக செயல்பட்டு கொல்கத்தாவின் வெற்றிகளில் பங்காற்றி வருகிறார்கள்.

- Advertisement -

கொல்கத்தா வீரர்கள்:

குறிப்பாக தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சமீபத்தில் இந்தியாவுக்காக 3 வருடங்கள் கழித்து மீண்டும் விளையாடி நன்றாக செயல்பட்டார். அதனால் அவரை தக்க வைத்துள்ள கொல்கத்தா நம்பிக்கை நட்சத்திர ஆல் ரவுண்டர் ஆண்ட்ரே ரசலையும் 12 கோடிகளுக்கு தக்க வைத்துள்ளது. காட்டுத்தனமாக பேட்டிங் செய்து வெற்றியை பறிக்கும் திறமை கொண்ட அவரை கொல்கத்தா தக்க வைத்ததில் ஆச்சரியம் இல்லை என்று சொல்லலாம்.

இதையும் படிங்க: சுயநலமானவர்கள் தேவையில்ல.. கேஎல் ராகுலை சாடிய சஞ்சீவ்.. லக்னோ தக்க வைத்த வீரர்களின் பட்டியல்

இறுதியாக கடந்த சீசனில் அசத்திய ஹர்ஷித் ராணா, ரமந்தீப் சிங் ஆகிய இளம் இந்திய வீரர்களை சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாத வீரர்களாக தலா 4 கோடிக்கு கொல்கத்தா தக்க வைத்துள்ளது. இந்த 6 வீரர்களையும் தக்க வைக்க கொல்கத்தா 57 கோடிகளை செலவிட்டுள்ளது. எஞ்சிய வீரர்களை அந்த அணி ஏலத்தில் வாங்குவதற்கு தயாராகியுள்ளது.

Advertisement