- Advertisement -
ஐ.பி.எல்

எங்க டீமுக்கு வரதுக்கு முன்னாடியே இப்படியா? பில் சால்ட்டால் வருத்தத்தில் ஆர்.சி.பி நிர்வாகம் – என்ன ஆனது?

இந்தியாவில் கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரானது இதுவரை 17 சீசன்களை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ள வேளையில் வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் 18-ஆவது சீசன் துவங்கி நடைபெற இருக்கிறது. இந்த தொடருக்கு முன்னதாக சவுதி அரேபியாவில் நடைபெற்ற மெகா ஏலத்தில் கலந்து கொண்ட அனைத்து அணிகளும் தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு விலைக்கு வாங்கியிருந்தனர்.

பில் சால்ட்டால் வருத்தத்தில் இருக்கும் ரசிகர்கள் :

அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாமல் இருக்கும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியானது தங்களது கேப்டன் டூபிளெஸ்ஸிஸ்ஸை வெளியேற்றிவிட்டு பல்வேறு நட்சத்திர வெளிநாட்டு வீரர்களை தங்களது அணிக்குள் சேர்த்து பலப்படுத்தி உள்ளது. ஆனாலும் அந்த அணியின் நிர்வாகம் தற்போது இங்கிலாந்து வீரர் பில் சால்ட்டால் கவலை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

- Advertisement -

ஏனெனில் கடந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற்று முடிந்த ஐபிஎல் கோப்பையை கொல்கத்தா அணி கைப்பற்ற முக்கிய பங்கு வகித்த பில் சால்ட் 12 போட்டிகளில் விளையாடி 435 ரன்கள் குவித்து அசத்தியிருந்தார். அவரது இந்த சிறப்பான ஆட்டம் காரணமாக இந்த ஆண்டு அவரை பெங்களூரு அணி 11 கோடி 50 லட்சம் ரூபாய்க்கு விலைக்கு வாங்கியது.

ஆனால் இன்னும் ஐபிஎல் தொடர் துவங்க ஒரு சில மாதங்களே எஞ்சியிருக்கும் வேளையில் தற்போது இந்திய அணிக்கு எதிராக அவர் விளையாடி வரும் விதம் மிகவும் மோசமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுள்ள மூன்று போட்டிகளின் முடிவில் அவர் வெறும் 9 ரன்கள் மட்டுமே குவித்துள்ளார்.

- Advertisement -

இதன் காரணமாக அவரது பேட்டிங் ஃபார்ம் சரிவை சந்தித்துள்ளது. இந்திய மைதானங்களில் அட்டகாசமாக விளையாடுவார் என்று பார்க்கப்பட்ட வேளையில் அவர் இப்படி சொற்ப ரன்களில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக ஆட்டமிழந்து வருவது ஆர்.சி.பி அணி நிர்வாகத்தை கவலை அடைய வைத்துள்ளது.

இதையும் படிங்க : இந்திய அணித்தேர்வில் உள்ள பெரிய தப்பு இதுதான்.. இதை மாத்தியே ஆகனும் – அஷ்வின் சாடல்

இப்படி மோசமான பார்மில் இருக்கும் அவர் இந்த ஆண்டு எவ்வாறு அந்த அணிக்கு உதவப்போகிறார் என்பதே அவர்களது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இருந்தாலும் விராட் கோலியுடன் துவக்க வீரராக அவரே களமிறங்குவார் என்று தெரிகிறது. மேலும் பில் சால்ட்டின் இந்த நிலைமையை பார்த்து வரும் ரசிகர்களும் ஆர்.சி.பி அணிக்கு வந்தாலே இதுதான் நடக்குமா என்பது போன்று சில வேடிக்கையான கருத்துக்களையும் பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -