- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன் தரவரிசையில் ரோஹித், கோலியை பின்னுக்கு தள்ளிய – சுப்மன் கில்

இந்திய ஒருநாள் அணியின் கேப்டனான சுப்மன் கில் அண்மையில் நடைபெற்ற ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். குறிப்பாக அந்த தொடரின் முதல் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 84 ரன்கள் அடித்த அவர் இரண்டாவது ஒருநாள் போட்டியின் போது 154 ரன்கள் குவித்து அசத்தினார். இப்படி இந்த தொடரின் இரண்டு ஆட்டங்களில் 238 ரன்கள் குவித்த அவர் தொடர் நாயகன் விருதினையும் வென்றிருந்தார்.

தரவரிசையில் முன்னேற்றம் கண்ட சுப்மன் கில் :

இவ்வேளையில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐ.சி.சி வெளியிட்டுள்ள ஒருநாள் போட்டிகளுக்கான பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் புதிய உச்சத்தை தற்போது சுப்மன் கில் எட்டியுள்ளார். அந்த வகையில் அவ்வப்போது நடைபெற்று முடியும் தொடர்களுக்கு மத்தியில் மூன்று வகையான கிரிக்கெட் போட்டிகளுக்குமான தரவரிசை பட்டியலை வெளியிடுவது வழக்கம்.

- Advertisement -

அந்த வகையில் தற்போது வெளியாகியுள்ள ஐ.சி.சி பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலில் ஒருநாள் போட்டிகளை பொருத்தவரை இந்திய அணியின் கேப்டனான சுப்மன் கில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான சிறப்பான செயல்பாட்டின் மூலம் இரண்டாவது இடத்திற்கு சென்றுள்ளார். சுப்மன் கில் 791 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கும் வேளையில் முதல் இடத்தில் நியூசிலாந்து வீரர் டேரல் மிட்சல் உள்ளார்.

இவர்களை தவிர்த்து முதல் தர வரிசையில் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய வீரர்கள் இடம் பிடித்துள்ளார்கள். சுப்மன் கில் இரண்டாவது இடத்திலும், விராட் கோலி மூன்றாவது இடத்திலும், ரோஹித் சர்மா நான்காவது இடத்திலும் இருக்கின்றனர்.

- Advertisement -

இதையும் படிங்க : வைபவ் சூர்யவன்ஷியின் ஜெர்சி எண் 03-க்கு பின்னால் இருக்கும் காரணம்? அந்த எண்ணை – தேர்வு செய்தது ஏன்?

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை வெற்றிகரமாக முடித்துள்ள இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற இருக்கும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் அடுத்த மாதம் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -