
இந்தியாவில் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் அட்டகாசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கு அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடர்களுக்கான இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சச்சின் டெண்டுல்கரை தாண்டி மிக இளம் வயதில் இந்திய அணிக்காக அறிமுகமாகும் வீரர் என்ற சாதனையையும் அவர் நிகழ்த்த காத்திருக்கிறார்.
இவ்வேளையில் இந்த அயர்லாந்து அணிக்கு எதிரான தொடருக்கான இந்திய அணியின் ஜெர்சி கடந்த தினங்களுக்கு முன்னர் அவருக்கு வழங்கப்பட்டது. அதனை பெற்றுக் கொண்ட வைபவ் சூரியவன்ஷி தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி இருந்தார். முதல் முறையாக இந்திய அணிக்காக விளையாடப்போகும் அவருக்கு வாழ்த்துக்களும் குவிந்து வருகிறது.
இவ்வேளையில் இந்திய அணியின் ஜெர்சியில் அவர் தனது நம்பராக 03 என்கிற எண்ணை தேர்வு செய்துள்ளார். அப்படி அவர் இந்த மூன்றாம் நம்பரை தேர்வு செய்ய என்ன காரணம்? என்ன என்பது குறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது.
அந்த வகையில் அவர் மூன்று என்கிற ஜெர்சி நம்பரை தேர்வு செய்ய காரணம் யாதெனில் : வைபவ் சூர்யவன்சியின் தாயார் 1+2 ஆகிய எண்களை கூட்டினால் 3 என்கிற எண் வருகிறது அதனால் 12 என்ற இரட்டை இலக்க எண்ணுக்கு பதிலாக நேரடியாக மூன்றாம் நம்பர் எண்ணை பயன்படுத்தலாம் என்று அவருக்கு ஆலோசனை கூறியுள்ளார்.
இதையும் படிங்க : அயர்லாந்து தொடரில் ரோஹித் சர்மாவின் சாதனையை முறியடிக்க காத்திருக்கும் சஞ்சு சாம்சன் – விவரம் இதோ
அதனை ஏற்றுக் கொண்ட வைபவ் சூரியவன்ஷியும் தன் தாய் ஆசைப்பட்ட மூன்றாம் நம்பரையே தேர்வு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்திய கிரிக்கெட்டில் மூன்றாம் நம்பர் ஜெர்சி எண்ணை முன்னாள் வீரர்களான ஹர்பஜன் சிங், சுரேஷ் ரெய்னா மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் பயன்படுத்தியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.