- Advertisement -
இந்திய கிரிக்கெட்

இந்திய அணியுடன் வைபவ் சூர்யவன்ஷி இருக்கக்கூடாது.. இங்கிலாந்து வாரியம் போட்ட கட்டுப்பாடு – விவரம் இதோ

இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய கிரிக்கெட் அணியானது அங்கு நடைபெறவுள்ள ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்திற்கான டி20 மற்றும் இந்திய ஒருநாள் அணிகளை தனித்தனியே பி.சி.சி.ஐ அறிவித்தது. அந்த வகையில் அறிவிக்கப்பட்ட டி20 போட்டிகளுக்கான இந்திய அணியில் 15 வயதான இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷிக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

வைபவ் சூர்யவன்ஷிக்கு கட்டுப்பாடு விதித்த இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் :

இந்தியாவில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரில் அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்திய அவருக்கு முதல் முறையாக இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்து தொடரில் அவர் எவ்வாறு செயல்படப்போகிறார்? என்பது குறித்த எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சென்றடைந்துள்ள வைபவ் சூர்யவன்ஷி அந்த தொடரிலேயே இந்திய அணியில் அறிமுகமாவார் என்றும் கூறப்படுகிறது.

- Advertisement -

இவ்வேளையில் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இன்னும் பெரிய அனுபவம் இல்லாதவர் என்பதனால் அவருடன் இந்த சுற்றுப்பயணங்களில் அவருடைய பெற்றோர்கள் உடன் செல்வார்கள் என்றும் அந்த செலவை இந்திய கிரிக்கெட் வாரியம் ஏற்கும் என்று ஏற்கனவே பி.சி.சி.ஐ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் இங்கிலாந்து மண்ணில் விளையாடும் வைபவ் சூர்யவன்ஷியை இந்திய அணியுடன் இருக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் அவருக்கு தனிப்பட்ட உடைமாற்றும் அறை வழங்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தற்போது ஒரு புதிய கட்டுப்பாட்டினை விதித்துள்ளது.

அதற்கு காரணம் யாதெனில் : தற்போது வைபவ் சூர்யவன்ஷிக்கு 15 வயது தான் ஆகிறது. 16 வயது பூர்த்தி அடையாத ஒரு வீரரை முதன்மை அணியுடன் தங்க வைக்கக்கூடாது என ஐ.சி.சி-யின் விதிமுறைகள் கூறுவதால் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அதற்கான முடிவை எடுத்து 15 வயதுடைய சூர்யவன்ஷியை சீனியர் வீரர்களுடன் ஓய்வறையை பயன்படுத்த அனுமதிக்காது என்று தெரிவித்துள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக சூரியான்ஷ் ஷெட்கே டி20 இந்திய அணியில் இடம்பெற என்ன காரணம்? – விவரம் இதோ

ஆனாலும் அவருக்காக தனி உடைமாற்றும் அறை வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. அதேவேளையில் சீனியர் வீரர்களுடன் ஓய்வறையில் ஏதாவது முக்கியமான டீம் மீட்டிங் மற்றும் ஆலோசனைகள் ஆகியவை இருந்தால் அவர் அங்கு இருக்கலாம் என்றும் மற்றபடி தனியாகவே தங்க வைக்கப்படுவார் என்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -