நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக சூரியான்ஷ் ஷெட்கே டி20 இந்திய அணியில் இடம்பெற என்ன காரணம்? – விவரம் இதோ

Suryansh Shedge and Nitish Reddy
- Advertisement -

ஷ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய டி20 கிரிக்கெட் அணியானது அயர்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபெறவுள்ள இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்று விளையாட இருக்கிறது. எதிர்வரும் ஜூன் 26 மற்றும் ஜூன் 28-ஆம் தேதி ஆகிய நாட்களில் நடைபெறயிருக்கும் இந்த டி20 தொடரில் பங்கேற்பதற்காக இந்திய அணி தற்போது அயர்லாந்து நாட்டிற்கு சென்றடைந்துள்ளது. இந்த டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதீஷ் ரெட்டியும் இடம் பிடித்திருந்தார்.

இந்திய டி20 அணியில் சூர்யான்ஷ் ஷெட்கே இடம்பெற என்ன காரணம்? :

ஆனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்று முடிந்த ஒருநாள் தொடரின் போது காயமடைந்த நிதீஷ் ரெட்டி மீண்டும் அந்த காயத்தில் இருந்து குணமடைய நான்கு வாரங்கள் வரை ஆகும் என்பதனால் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து வெளியேறியுள்ளார். இப்படி நிதீஷ் ரெட்டி இந்திய அணியில் இருந்து வெளியேறியது மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்பட்டது.

- Advertisement -

ஏனெனில் ஏற்கனவே ஹார்டிக் பாண்டியா விளையாட முடியாத சூழலில் நிதீஷ் ரெட்டியும் வெளியேறியதால் இந்திய அணியில் அவரது இடத்தினை நிரப்ப வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அந்த நேரத்தில் 23 வயதான மும்பையை சேர்ந்த ஆல்ரவுண்டர் சூர்யான்ஷ் ஷெட்கே இந்திய டி20 அணியில் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டார். இதன்மூலம் முதன் முறையாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை அவர் பெற்றுள்ளார்.

இப்படி நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இடம்பெற என்ன காரணம்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அந்த வகையில் இந்தியாவில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஐ.பி.எல் தொடரின் போது பஞ்சாப் அணிக்காக 7 போட்டிகளில் விளையாடிய அவர் 175 என்கிற ஸ்ட்ரைக் ரேட்டுடன் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி 158 ரன்கள் குவித்தார்.

- Advertisement -

இதையும் படிங்க : ஹார்டிக் பாண்டியாவோடு சேர்ந்து வெளியேறும் மற்றொரு நட்சத்திர வீரர் – வெளியான தகவல்

அதுமட்டுமின்றி அண்மையில் இலங்கை நாட்டில் நடைபெற்ற முத்தரப்பு தொடரில் பங்கேற்ற அவர் இந்திய ஏ அணிக்காக 147 ரன்கள் குவித்ததோடு மட்டுமின்றி பந்து வீச்சிலும் 23 ஓவர்கள் வீசியிருந்தார். இப்படி பந்து வீச்சில் மட்டுமின்றி பேட்டிங்கிலும் பின்வரிசையில் களமிறங்கி அதிரடி காட்டும் திறன் அவரிடம் இருப்பதனாலே நிதீஷ் ரெட்டிக்கு பதிலாக சூர்யான்ஷ் ஷெட்கே இடம்பிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது.

Advertisement