இந்திய அணித்தேர்வில் உள்ள பெரிய தப்பு இதுதான்.. இதை மாத்தியே ஆகனும் – அஷ்வின் சாடல்

Ashwin
- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கெதிராக நடைபெற்று முடிந்த 5 போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரினை இழந்த இந்திய அணியானது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பையும் தவறவிட்டது. இந்த தொடரின் மூன்றாவது போட்டி முடிவடையும்போது நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் திடீரென சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு முடிவை அறிவித்து ரசிகர்களை வருத்தப்பட வைத்தார்.

இந்திய அணியின் நிர்வாகம் செய்யும் தவறு :

இந்திய அணிக்காக கடந்த 2011-ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 500-க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இப்படி அவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றாலும் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சிஎஸ்கே அணியில் தோனியுடன் இணைந்து விளையாட இருப்பது ரசிகர்களுக்கு ஓரளவு நிம்மதி வழங்கியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தனது ஓய்வுக்குப் பிறகு கிரிக்கெட்டில் நடைபெற்று வரும் பல்வேறு முக்கிய விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசிவரும் அவர் தற்போது இந்திய அணித்தேர்வில் நடக்கும் பாகுபாடு குறித்தும் வெளிப்படையான சில கருத்துக்களை பகிர்ந்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில் :

இந்திய அணியில் பேட்ஸ்மேன்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளைப் போன்று பந்துவீச்சாளர்களுக்கு போதிய வாய்ப்பு கிடைப்பதில்லை. பேட்ஸ்மேன்கள் நிர்வாகத்தினால் பாதுகாக்கப்படுகிறார்கள். ஆனால் பந்துவீச்சாளர்கள் பாதுகாக்கப்பட மறுக்கப்படுகிறார்கள். ஏனெனில் ஒரு பேட்ஸ்மேன் எத்தனை முறை ஆட்டமிழந்தாலும் அவர்களுக்கு வாய்ப்பு கிடைக்கிறது.

- Advertisement -

ஆனால் பந்துவீச்சாளர்களை பொருத்தவரை ஒரு தொடர் அவர்களுக்கு மோசமாக அமைந்தால் கூட உடனடியாக அவர்கள் வெளியேற்றப்படுகிறார்கள். ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான தொடரில் ஆகாஷ் தீப்பின் பந்துவீச்சு பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை. எனவே என்னை பொறுத்தவரை அவர் மீண்டும் டெஸ்ட்டுக்கு திரும்புவது கடினம் தான். ஆஸ்திரேலிய அணி ஜாம்பவான் அணியாக இருப்பதற்கு காரணம் அந்த அணி பந்து வீச்சாளர்களை அதிகம் பாதுகாக்கிறது.

இதையும் படிங்க : ரோஹித் நீங்க பாகிஸ்தான் வர வேணாம்.. கேன்சல் செய்யப்பட்ட துவக்க விழா – என்ன காரணம்?

அதனாலே அவர்களால் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி விளையாட முடிகிறது. அதேபோன்று நிச்சயம் இந்திய அணி நிர்வாகம் இந்த ஒரு மாற்றத்தை செய்தாக வேண்டும். பந்துவீச்சாளர்களை நிர்வாகம் பாதுகாத்தால் தான் இந்திய அணி அசைக்க முடியாத அணியாக உருவெடுக்கும் என ரவிச்சந்திரன் அஷ்வின் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement