தயவு செஞ்சு இனி 205 ரன்களை மட்டும் அடிக்காதிங்க ப்ளீஸ், பெங்களூருவிடம் கெஞ்சும் ஆர்சிபி ரசிகர்கள் – ஏன் தெரியுமா?

RCB
Advertisement

ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் 2022 கிரிக்கெட் தொடர் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக துவங்கியது. வரும் 29-ஆம் தேதிவரை மும்பை, புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் மட்டும் நடைபெறும் இந்த தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்க பைனல் உட்பட 74 போட்டிகள் நடைபெற உள்ளது. பொதுவாகவே திரில் போட்டிகளுக்கு பெயர் போன ஐபிஎல் தொடரில் இந்த சீசனின் 2-வது நாளில் நடைபெற்ற 2 போட்டிகளும் மிகவும் பரபரப்பாகவும் விறுவிறுப்பாகவும் நடைபெற்றது.

Virat Faf Du Plessis

அதிலும் நேற்று இரவு மும்பையில் நடைபெற்ற 3-வது லீக் போட்டியில் கடுமையான போராட்டதிற்க்கு பின் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்த பஞ்சாப் கிங்ஸ் த்ரில் வெற்றியை ருசித்தது. இதனால் புதிய கேப்டனாக அறிவிக்கப்பட்ட டு பிளேஸிஸ் தலைமையில் களமிறங்கிய பெங்களூரு முதல் போட்டியிலேயே பரிதாப தோல்வியடைந்து இந்த ஐபிஎல் தொடரை தோல்வியுடன் துவக்கியது.

- Advertisement -

பரிதாப பெங்களூரு:
முன்னதாக மும்பையின் டிஒய் பாட்டில் மைதானத்தில் துவங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை அடுத்து களமிறங்கிய பெங்களூர் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 205/2 ரன்கள் எடுத்தது. அந்த அணிக்கு அதிகபட்சமாக முதல் முறையாக விளையாடிய கேப்டன் டு பிளேஸிஸ் 57 பந்துகளில் 7 இமாலய சிக்ஸர்கள் உட்பட 88 ரன்களை விளாசினார். அவருடன் அதிரடியாக விளையாடிய விராட் கோலி 41* (29) ரன்களும் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக் 32* (14) ரன்களும் எடுத்தனர்.

PBKS vs RCB2 Odean Smith Shahrukan

அதை தொடர்ந்து 206 என்ற கடினமான இலக்கை துரத்திய பஞ்சாப் அணியும் ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி ஒவ்வொரு ஓவருக்கும் குறைந்தது 10 ரன்கள் எடுத்து கொண்டே வந்தது. அந்த அணிக்கு கேப்டன் மயங்க் அகர்வால் 32 ரன்கள், ஷிகர் தவான் மற்றும் ராஜபக்சே ஆகியோர் தலா 43 ரன்கள் என டாப் 3 வீரர்கள் அதிரடியாக பேட்டிங் செய்து அபார தொடக்கம் கொடுத்தனர். இடையில் லிவிங்ஸ்டன் 19 ரன்களில் ஆட்டமிழக்க ராஜ் பாவா டக் அவுட்டானதால் பஞ்சாப் அணியின் வெற்றி கேள்விக்குறியானது. அந்த நிலையில் களமிறங்கிய தமிழக வீரர் சாருக்கான் 24* (20) ரன்கள் எடுக்க அவருடன் ஜோடியாக விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஓடென் ஸ்மித் யாருமே எதிர்பாராத வண்ணம் வெறும் 8 பந்துகளில் 1 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்கள் உட்பட 25* ரன்கள் எடுத்து வெறித்தனமான பினிஷிங் செய்த காரணத்தால் பஞ்சாப் அதிரடி வெற்றி பெற்றது.

- Advertisement -

ராசியில்லாத 205 ரன்கள்:
இந்த போட்டியில் 205 ரன்களை குவித்த போதிலும் மோசமாக பந்து வீசியதன் காரணமாக பெங்களூர் அணி தோல்வி அடைந்ததால் அந்த அணி ரசிகர்கள் கடும் ஏமாற்றத்திற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் 205 என்ற ரன்கள் ஐபிஎல் போட்டிகளில் பெங்களூர் அணிக்கு மிகவும் ராசியில்லாத ஒரு நம்பராக இருப்பது தெரியவருகிறது. அதாவது ஐபிஎல் வரலாற்றில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 5 போட்டிகளில் இதேபோல் மிகச்சரியான 205 ரன்களை எடுத்துள்ளது.

RCB vs PBKS Extras

ஆனால் அந்தப் போட்டிகளில் 4 முறை படுதோல்வியடைந்த அந்த அணி வெறும் ஒரு முறை மட்டுமே வெற்றி பெற்றது. அந்த ஒரு வெற்றி என்பது கடந்த 2011-ஆம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் டேனியல் வெட்டோரி தலைமையிலான பெங்களூர் அணி பதிவு செய்த வெற்றியாகும். சொல்லப்போனால் அந்த போட்டியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் 49 பந்துகளில் சதமடித்து 107 ரன்கள் எடுத்த காரணத்தால் அந்த அபார வெற்றியை அந்த அணி பதிவு செய்தது.

- Advertisement -

அதன்பின் நேற்றுடன் கடந்த 10 வருடங்களில் அந்த அணி முதலில் பேட்டிங் செய்து 205 ரன்களை எடுத்த 4 போட்டிகளிலும் பரிதாப தோல்வி அடைந்துள்ளது என்ற விவரம் ரசிகர்களை வியப்படைய வைக்கிறது. ஐபிஎல் வரலாற்றில் பெங்களூர் அணி முதலில் பேட்டிங் செய்து 205 ரன்கள் எடுத்த போட்டிகளின் முடிவுகள் இதோ:
1. 205/6 – பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி, 2011.
2. 205/8 – சென்னை அணிக்கு எதிராக தோல்வி, 2012.
3. 205/8 – சென்னை அணிக்கு எதிராக தோல்வி, 2018.
4. 205/3 – கொல்கத்தாவுக்கு எதிராக தோல்வி, 2019.
5. 205/2 – பஞ்சாப் அணிக்கு எதிராக தோல்வி, 2022*.

கெஞ்சும் ரசிகர்கள்:
ஏற்கனவே ஐபிஎல் வரலாற்றில் ஒரு போட்டியில் அதிகபட்ச ஸ்கோர் பதிவு செய்த அணியாக மாஸ் சாதனை படைத்துள்ள அதே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தான் ஐபிஎல் வரலாற்றில் 49 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி குறைந்தபட்ச ஸ்கோரை பதிவு செய்த அணியாகவும் பரிதாப சாதனை படைத்துள்ளது.

- Advertisement -

அதனால் சமீப காலங்களில் ஏதாவது ஒரு போட்டியில் அந்த அணி ஆரம்பத்திலேயே கொத்தாக விக்கெட்டுகளை இழந்து தடுமாறும் போது எப்படியாவது 49 ரன்களை தாண்டி விட வேண்டும் என பெங்களூரு ரசிகர்கள் பிரார்த்திப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

இதையும் படிங்க : பும்ரா-கிம்ரானு பேசாதிங்க ! 2014இல் பும்ராவை நிராகரித்த விராட் கோலி, பின்னணியை பகிர்ந்த முன்னாள் வீரர்

அந்த வரிசையில் தற்போது ஒரு போட்டியில் பெங்களூரு 205 ரன்களை எடுத்து விடக்கூடாது அப்படி எடுத்தால் கிட்டத்தட்ட தோல்வி உறுதி என அந்த அணியின் ரசிகர்கள் புலம்புவதற்கு புதிதாக ஒரு பரிதாப நிலை ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக இனிமேல் அந்த ராசியில்லாத 205 ரன்களை மட்டுமே எடுக்க வேண்டாம் என தங்கள் அணியிடம் பெங்களூரு ரசிகர்கள் கெஞ்சி கேட்டு வருகிறார்கள்.

Advertisement