பும்ரா-கிம்ரானு பேசாதிங்க ! 2014இல் பும்ராவை நிராகரித்த விராட் கோலி, பின்னணியை பகிர்ந்த முன்னாள் வீரர்

Bumrah
- Advertisement -

அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் மார்ச் 26-ஆம் தேதியன்று கோலாகலமாக விறுவிறுப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. வரும் மே 29-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த தொடரில் லக்னோ, குஜராத் ஆகிய புதிய அணிகளையும் சேர்த்து 10 அணிகள் 74 போட்டிகளில் இந்த வருடம் சாம்பியன் கோப்பைக்காக பலப்பரீட்சை நடத்துகின்றன.

Bumrah

- Advertisement -

தரமான பும்ரா:
இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இந்தியாவின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஒரு துணை கேப்டனை போல செயல்பட்டு வருகிறார். கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாட ஒப்பந்தமான அவர் அதன்பின் தனது அபார திறமையால் அந்த அணிக்கு தனி ஒருவனாக பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளார். சொல்லப்போனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் அவர் காலடி வைத்த 2013-க்கு பின்புதான் ரோகித் சர்மா தலைமையில் அடுத்தடுத்த 8 வருடங்களில் 5 கோப்பைகளை வென்று இன்று வரலாற்றிலேயே வெற்றிகரமான அணியாக மும்பை சாதனை படைத்துள்ளது.

அதன் காரணமாக இந்திய அணியில் விளையாடும் வாய்ப்பை பெற்ற ஜஸ்பிரித் பும்ரா முதல் முறையாக கடந்த 2016-ஆம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையில் இந்திய கிரிக்கெட்டில் காலடி வைத்தார். அதன்பின் கேப்டனாக பொறுப்பேற்ற விராட் கோலி தலைமையில் வளரத் தொடங்கிய அவர் கடந்த 2018-க்கு முதல் இந்திய அணியின் 3 வகையான கிரிக்கெட்டிலும் படிப்படியாக விளையாடத் தொடங்கி இன்று இந்தியாவின் நம்பர் ஒன் வேகப்பந்து வீச்சாளராக உருவெடுத்துள்ளார்.

bumrah

பும்ராவை நிராகரித்த விராட் கோலி:
ஆரம்ப கால கட்டங்களில் ரஞ்சி கோப்பையில் குஜராத் அணிக்காக விளையாடிய அவர் அந்தத் தொடரில் தனது கடின உழைப்பாலும் அபார செயல்பாடுகளாலும் ஐபிஎல் தொடரில் விளையாடும் வாய்ப்பை பெற்றார். குறிப்பாக கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் முறையாக மும்பை அணிக்காக வாங்கப்பட்ட அவர் அந்த தொடரில் பெரிய அளவில் ஜொலிக்காத காரணத்தால் அந்தத் தொடரின் இறுதியில் கழற்றிவிடப்பட்டார். இருப்பினும் 2014-ஆம் ஆண்டு நடந்த ஏலத்தில் மீண்டும் அவரை நம்பி வாங்கிய மும்பை அணிக்காக அதன்பின் அதிரடியாக செயல்பட்டு பல வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தார். அதன் காரணமாக அதன்பின் அவரை வெளியே விடாமல் தொடர்ந்து தக்க வைத்து வரும் மும்பை அணி நிர்வாகம் இந்த வருடமும் 12 கோடிக்கு விளையாட ஒப்பந்தம் செய்துள்ளது.

- Advertisement -

இந்நிலையில் 2014-ஆம் ஆண்டு ஏலத்தின்போது ஜஸ்பிரித் பும்ராவை வாங்குவதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி மறுப்பு தெரிவித்ததாக முன்னாள் இந்திய வீரர் பார்த்தீவ் பட்டேல் தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் பேசியது பின்வருமாறு. “2014-ஆம் ஆண்டு பெங்களூர் அணியில் இருந்த போது அதன் கேப்டனாக இருந்த விராட் கோலியிடம் பும்ரா என்ற பெயரில் ஒரு நல்ல பவுலர் இருக்கிறார் என கூறினேன். ஆனால் அதற்கு “விடுங்கள். பும்ரா – உம்ரா போன்ற வீரர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்” என விராட் கோலி பதிலளித்தார்” என்று கூறினார்.

Parthiv

அதாவது இந்தியாவுக்காக விளையாடிய முன்னாள் வீரர் பார்த்தீவ் பட்டேல் ரஞ்சி கோப்பையில் தனது சொந்த மாநிலமான குஜராத் அணிக்கு விளையாடினார். அப்போது அதே அணியில் இளம் வீரராக வலம் வந்த ஜஸ்பிரித் பும்ராவின் திறமையை அறிந்து 2014 ஐபிஎல் ஏலத்தின் போது அவரவை வாங்கலாம் என்று நோக்கத்தில் தாம் இடம் வகித்த பெங்களூர் அணியின் கேப்டன் விராட் கோலியிடம் பார்த்தீவ் பட்டேல் ஆலோசனை வழங்கியுள்ளார். ஆனால் அதை பொருட்படுத்தாத விராட் கோலி “பும்ரா – உம்ரா போன்ற பெயர் தெரியாத பவுலர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள்” என துச்சமாக எண்ணியதால் வாங்கவில்லை என்ற பின்னணியை பார்த்திவ் படேல் இத்தனை நாட்கள் கழித்து பகிர்ந்துள்ளார்.

தவற விட்டுட்டீங்களே கோலி:
“தனது முதல் 2 – 3 வருடங்களில் ஜஸ்பிரித் பும்ரா ரஞ்சி கோப்பையில் விளையாடினார். அதன்பின் 2013இல் ஐபிஎல் தொடரில் அறிமுகமான அவர் 2014 வரை பெரிய அளவில் சோபிக்கவில்லை. அதிலும் 2015-ஆம் ஆண்டு மோசமாக செயல்பட்ட அவரை பாதியிலேயே வீட்டுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்ற பேச்சுக்கள் வந்தது. இருப்பினும் அதன் பின் வளரத் தொடங்கிய அவருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியும் நல்ல ஆதரவு கொடுத்தது. அதன்பின் தனது கடின முயற்சியால் இன்று மிகப்பெரிய உயரத்தை எட்டியுள்ளார்” என இது பற்றி மேலும் தெரிவித்த பார்த்தீவ் பட்டேல் ஆரம்ப காலங்களில் தடுமாறினாலும் அதற்காக அசராத ஜஸ்பிரித் பும்ரா தொடர்ந்து கடின உழைப்பால் முன்னேறி இன்று இமயத்தின் உச்சத்தை எட்டியுள்ளதாக பாராட்டியுள்ளார்.

viratout

இதில் ஆச்சரியம் என்னவெனில் இன்று ஐபிஎல் தொடரில் நட்சத்திர பவுலராக வலம் வரும் ஜஸ்பிரித் பும்ராவின் முதல் மற்றும் 100-வது ஐபிஎல் கிரிக்கெட் விராட் கோலி என்பது மிகப்பெரிய வியப்பாகும். அப்படிப்பட்ட திறமை வாய்ந்த அவரை பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தபோது விராட் கோலி நிச்சயமாக தவற விட்டு விட்டார் என்றே கூற வேண்டும்.

Advertisement