ஆர்.சி.பி அணியின் கேப்டனாக நியமிக்கப்படவுள்ள வீரர். நல்ல சாய்ஸ் தான் – கோலி பேச்சை கேட்டு நடந்துப்பாரு

RCB
- Advertisement -

ஐபிஎல் தொடரின் ஆரம்ப காலகட்டத்தில் இருந்தே மிகப்பெரிய அணியாக பார்க்கப்பட்டு வரும் பெங்களூர் அணியானது ஒவ்வொரு முறையும் சீசன் ஆரம்பிக்கும் போதும் அம்முறை கோப்பையை கைப்பற்றும் என்ற எதிர்பார்ப்புக்கு மத்தியில் பெரிய வீரர்களுடன் தான் களமிறங்கும் ஆனாலும் நடைபெற்று முடிந்த 14 சீசன்களிலும் ஒரு முறை கூட அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை. அதுமட்டுமின்றி விராட் கோலி கடந்த பல ஆண்டுகளாகவே அந்த அணிக்காக கேப்டனாக செயல்பட்டு வந்தாலும் அவரது தலைமையின் கீழும் அவர்களால் கோப்பையை கைப்பற்ற முடியவில்லை.

RCB

- Advertisement -

ஒவ்வொரு முறையும் மிகப் பெரிய வீரர்கள் அந்த அணியில் இடம் பெற்றிருந்தாலும் அவர்கள் கோப்பையை தவறவிட்டு வறுத்து ரசிகர்களிடையே வருத்தத்தை அளித்துள்ளது. ஆனாலும் பெங்களூரு ரசிகர்கள் தொடர்ந்து அந்த அணிக்கு தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இந்த 15வது ஐபிஎல் தொடருக்கான அணியின் கேப்டன் பதவியிலிருந்து விராட் கோலி விலகியுள்ளார்.

இதனால் இந்த ஆண்டு புதிய கேப்டனுடன் தான் ஆர்சிபி இந்த சீசனை சந்திக்க உள்ளது. தற்போது அணிகள் தக்க வைக்கப்பட்ட வீரர்களாக மேக்ஸ்வெல், கோலி, சிராஜ் ஆகியோர் இருந்தாலும் புதிய வீரர் ஒருவர் தான் ஆர்சிபி அணியின் கேப்டனாக நியமிக்கப்படுவார் என்று தெரிகிறது. அந்த வகையில் இம்முறை ஆர்சிபி அணிக்காக புதிய கேப்டனாக உள்ளூர் வீரர் மணிஷ் பாண்டே நியமிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஏனெனில் ஏற்கனவே பெங்களூர் அணிக்காக ஆரம்ப காலகட்டத்தில் ஐபிஎல் தொடர்களில் விளையாடியுள்ள பாண்டே நல்ல அனுபவம் உடையவர். கடந்த 2008ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டிகளில் விளையாடி வரும் மனிஷ் பாண்டே கிட்டத்தட்ட 3600 ரன்களை அடித்துள்ளார். அதுமட்டுமின்றி 154 ஐபிஎல் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். இதன் காரணமாக அவருக்கு கேப்டன்சி வாய்ப்பு அளிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : அடப்பாவமே கடைசி வாய்ப்பு போச்சா? தொடரும் விராட் கோலியின் சோகம் – மிகப்பெரிய சறுக்கல்

அது மட்டுமின்றி விராட் கோலியின் பேச்சைக் கேட்டு அவர் நடந்து கொள்வார் என்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநில அணிக்காக டொமஸ்டிக் போட்டிகளில் விளையாடும் மணிஷ் பாண்டே இந்திய வீரராக ஐபிஎல் தொடரில் முதல் சதம் அடித்தவர் என்ற சாதனையைப் படைத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement