அடப்பாவமே கடைசி வாய்ப்பு போச்சா? தொடரும் விராட் கோலியின் சோகம் – மிகப்பெரிய சறுக்கல்

Kohli
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சதங்கள் விளாசுதை வாடிக்கையாக வைத்திருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி கடந்த 2019ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டிக்கு பிறகு இதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக சதம் அடிக்காமல் விளையாடி வருகிறார். விரைவில் சச்சின் டெண்டுல்கரின் 100-வது சதத்தை நோக்கி வேகமாக முன்னேறி அவரது சாதனையை முறியடிப்பார் என்று பலரும் கூறி வந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக அவர் ஒரு சதம் கூட அடிக்காமல் இருப்பது அவரது ரசிகர்களிடையே பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில் தற்போது துவங்கி நடைபெற்று வரும் தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் போட்டியில் சதம் அடித்து மீண்டும் தனது பழைய ஆதிக்கத்தை தொடர்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதிலும் தற்போது ஏமாற்றமே மிஞ்சியது. முதல் இன்னிங்சில் 4 பவுண்டரியுடன் அட்டகாசமாக ஆட்டத்தை துவங்கிய கோலி 35 ரன்கள் எடுத்திருந்த போது தேவையில்லாத ஷாட் விளையாடி ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதன் காரணமாக முதல் இன்னிங்சில் அந்த வாய்ப்பு பறிபோனது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டில் அவருக்கு கடைசியாக கிடைத்த வாய்ப்பாக இந்த இரண்டாவது இன்னிங்ஸ் பார்க்கப்பட்டது. ஆனால் இந்த இன்னிங்சிலும் 4 பவுண்டரிகள் விளாசிய அவர் 18 ரன்கள் எடுத்திருந்த போது மீண்டும் தேவையில்லாத பந்தை அடித்து ஆட்டமிழந்து வெளியேறினார்.

ngidi

இதன் காரணமாக இந்த ஆண்டு கோலிக்கு கடைசியாக கிடைத்த வாய்ப்பும் பறிபோனது. இனி அடுத்த இரண்டாவது போட்டியில் அதாவது 2022-ஆம் ஆண்டிலாவது சதம் அடித்து மீண்டும் தனது ஆதிக்கத்தை துவங்குவாரா? என்பதே ரசிகர்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இதையும் படிங்க : இஷாந்த் சர்மாவை உட்கார வைத்து முகமது சிராஜ் இந்த முதல் போட்டியில் விளையாட – காரணம் இதுதான்

தற்போது நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்சில் 327 ரன்களை குவிக்க அடுத்ததாக விளையாடிய தென்ஆப்பிரிக்கா அணி 197 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக 130 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணியானது 2-வது இன்னிங்சில் 174 ரன்கள் குவிக்க தற்போது தென் ஆப்பிரிக்க அணிக்கு 305 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement