இஷாந்த் சர்மாவை உட்கார வைத்து முகமது சிராஜ் இந்த முதல் போட்டியில் விளையாட – காரணம் இதுதான்

Siraj
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி கடந்த 26-ஆம் தேதி செஞ்சூரியன் மைதானத்தில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டிக்கான இந்திய அணியில் நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு சுழற்பந்து வீச்சாளர் ஆகியோர் இடம்பிடித்துள்ளனர். ஏற்கனவே மைதானம் முழுக்க முழுக்க வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் என்பதன் காரணமாக நான்கு வேகப்பந்து வீச்சாளர்களை தேர்வு செய்ய வேண்டியது அவசியமாக இருந்தது.

pujara 1

- Advertisement -

அதன்படி போட்டிக்கு முன் பும்ரா, ஷமி, இஷாந்த் ஷர்மா, ஷர்துல் தாகூர் ஆகியோர் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் டாஸிற்கு பிறகு இந்த அணியில் இஷாந்த் சர்மா கழட்டி விடப்பட்டு இளம் வீரரான சிராஜ் சேர்க்கப்பட்டார். இந்திய அணியின் அனுபவ வீரர்களான இஷாந்த் சர்மா 105 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 311 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

அதே வேளையில் தற்போது 10 போட்டிகளில் விளையாடி 33 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ள சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் இஷாந்த் ஷர்மாவை தாண்டி சிராஜ்க்கு வாய்ப்பு வழங்கப்பட்டது ஏன்? என்பது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி என்னதான் இஷாந்த் சர்மா அனுபவம் வீரராக இருந்தாலும் அவரது வேகம் மற்றும் ரிதம் ஆகியவை தற்போது சீரான நிலையில் இல்லை. அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரன்களை கட்டுப்படுத்துகிறாரே தவிர விக்கெட் எடுக்கும் திறன் குறைந்து விட்டதாக தோன்றுகிறது.

siraj

அதே வேளையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான சிராஜ் தொடர்ச்சியாக 140 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக வீசுகிறார். அதுமட்டுமின்றி இரண்டு புறமும் அவரால் ஸ்விங் செய்யவும் தற்போது முடிகிறது. இதன் காரணமாக அவருக்கு விக்கெட் டேக்கிங் எபிலிட்டி இருப்பதை உணர்ந்த இந்திய நிர்வாகம் தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று நினைத்து இளம் வீரரான அவருக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது.

- Advertisement -

இதையும் படிங்க : பும்ராவை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகம் செய்யும் போது நடந்தது என்ன? – மனம்திறந்த ரவி சாஸ்திரி

மேலும் கடைசியாக மும்பை மைதானத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான அந்த ஆடுகளத்தில் கூட டாப் 3 வீரர்களை தனது அட்டகாசமான பந்துத்வவீச்சினால் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதன் காரணமாகவும் இவருக்கு இந்த டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement