பும்ராவை டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு அறிமுகம் செய்யும் போது நடந்தது என்ன? – மனம்திறந்த ரவி சாஸ்திரி

Shastri
Advertisement

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டு வந்த ரவிசாஸ்திரி அண்மையில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பின்னர் தனது பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகினார். அதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியில் தான் செய்த பணி குறித்தும், அணியுடன் இணைந்து இருந்த அனுபவம் குறித்தும் பல விடயங்களை அவர் தற்போது பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் இந்திய அணியில் பும்ரா எவ்வாறு அறிமுகமானார் என்பது குறித்து ரவிசாஸ்திரி தனது கருத்தினை வெளிப்படுத்தியுள்ளார்.

Bumrah

இதுகுறித்து அவர் கூறுகையில் : ஜஸ்பிரித் பும்ராவை தென்னாப்பிரிக்காவில் தான் அறிமுகம் செய்ய வேண்டும் என்ற நான் முடிவில் இருந்தேன். மேலும் என்னுடைய இந்த முடிவினை நான் கேப்டன் விராட் கோலி இடமும் சரி, அணித் தேர்வுக்குழு விடமும் சரி முன்கூட்டியே தெரிவித்துவிட்டேன். இந்தியாவில் இருக்கும் டெஸ்ட் போட்டிகளில் பும்ராவை அறிமுகம் செய்ய வேண்டாம் என்றும், 15 பேர் கொண்ட அணியில் கூட அவரை எடுக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டேன்.

- Advertisement -

அவருடைய அறிமுக போட்டி தென் ஆப்பிரிக்காவில் இருக்க வேண்டும் என்று தெரிவித்தேன். அதுமட்டுமின்றி பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருணுக்கு போன் செய்து தென்னாப்பிரிக்க தொடருக்கு பும்ராவை ரெடியாக சொல்லுங்கள், அவர் அங்கு விளையாட வேண்டியது அவசியம் என்று கூறினேன். அதன் பிறகு அவரும் பும்ராவிடம் இந்த விடயத்தை தெரிவித்து விட்டார். அதன்படியே அவர் நேரடியாக தென்னாப்பிரிக்காவில் அறிமுகம் செய்யப்பட்டார் என்று ரவி சாஸ்திரி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கூறியுள்ளார்.

bharat arun

தென்னாப்பிரிக்க மண்ணில் அறிமுகமான பும்ரா முதல் இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை விழித்திருந்தாலும் தான் விளையாடிய மூன்றாவது டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட் வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். அதோடு 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர் தற்போது வரை 103 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இதில் 6 முறை ஐந்து விக்கெட்டுகள் கைப்பற்றி அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : தோனியின் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு வந்த ரிஷப் பண்ட்டை பாராட்டி – பி.சி.சி.ஐ வெளியிட்ட பதிவு

மேலும் ஜஸ்பிரித் பும்ரா எடுத்த விக்கெட்டுகள் பெரும்பாலானவை வெளிநாட்டு மண்ணில் வந்தவை இந்திய மண்ணில் ஒருசில விக்கெட்டுகள் மட்டுமே அவர் கைப்பற்றி உள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த அளவிற்கு தற்போது முன்னணி வேகப்பந்து வீச்சாளராக பும்ரா சர்வதேச கிரிக்கெட்டில் வளர்ந்து நிற்கிறார்.

Advertisement