தோனியின் சாதனையை முறியடித்து முதலிடத்துக்கு வந்த ரிஷப் பண்ட்டை பாராட்டி – பி.சி.சி.ஐ வெளியிட்ட பதிவு

pant
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியில் தோனியின் சாதனையை முறியடித்து ரிஷப் பண்ட் டெஸ்ட் கிரிக்கெட்டில் 24 வயதிலேயே மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளார். அதன்படி இந்த தென்னாபிரிக்க அணிக்கெதிரான டெஸ்ட் போட்டி ஆரம்பிப்பதற்கு முன்னர் 25 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியிருந்த ரிஷப் பண்ட் 97 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்தார். மேலும் அதிவேகமாக 100 விக்கெட் எடுத்த கீப்பராக மாற அவருக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே தேவைப்பட்டது.

இவருக்கு முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக 100 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்த விக்கெட் கீப்பராக தோனி இருந்தார். அவர் தனது 36 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 100 விக்கெட்டுகள் விழு காரணமாக இருந்துள்ளார். இந்நிலையில் அவரது இந்த சாதனையை இந்த முதலாவது இன்னிங்சில் ரிஷப் பண்ட் முறியடித்துள்ளார்.

- Advertisement -

இந்த முதலாவது இன்னிங்சில் மூன்று கேட்ச்களை பிடித்த ரிஷப் பண்ட் விரைவாக 100 விக்கெட்டுகளை கைப்பற்றிய இந்திய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்தார். அவரோடு சேர்த்து தோனி, கிரண் மோரே, மோங்கியா, சையத் கிர்மானி, சகா ஆகிய 6 விக்கெட் கீப்பர்கள் டெஸ்ட் போட்டியில் 100 விக்கெட் வீழ்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் ரிஷப் பண்ட்டின் இந்த சாதனையை பாராட்டி பி.சி.சி.ஐ-யும் தங்களது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது. அதில் 100 விக்கெட்டுகள் விழ காரணமாக இருந்த டெஸ்ட் விக்கெட் கீப்பர் ரிஷப் பண்ட். இந்திய விக்கெட் கீப்பர்களில் வேகமாக இந்த சாதனையை புரிந்தார் இவர்தான் என அவரது புகைப்படத்தோடு ஒரு பதிவினை வெளியிட்டு உள்ளது.

- Advertisement -

இதையும் படிங்க : இது ஸ்பெஷலான நம்பர். முகமது ஷமிக்கு தனது ஸ்டைலில் வாழ்த்துக்களை சொன்ன ரோஹித் சர்மா – விவரம் இதோ

இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. மேலும் நிச்சயம் டெஸ்ட் கிரிக்கெட்டில் ரிஷப் பண்ட் இன்னும் பல்வேறு சாதனைகளை புரிவார் என்றும் ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement