IPL 2023 : நம்ம ஆர்.சி.பி டீமா இது? 16 ஆண்டுகளுக்கு பிறகு நிகழ்த்தப்பட்ட அசத்தல் சாதனை – விவரம் இதோ

RCB-1
- Advertisement -

இந்தியாவில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 43-வது லீக் போட்டியானது நேற்று லக்னோ நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டூப்ளிசிஸ் தலைமையிலான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், கே.எல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும் மோதின. அதன்படி நேற்றைய போட்டியில் டாசில் வெற்றி பெற்ற பெங்களூரு அணியானது முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

RCB

- Advertisement -

அதன்படி இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணியானது நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் ஒன்பது விக்கெட்டுகளை இழந்து 126 ரன்கள் மட்டுமே குவித்தது. பெங்களூரு அணி சார்பாக விராட் கோலி 31 ரன்களையும், டூபிளெஸ்ஸிஸ் 44 ரன்களையும் அடித்தனர்.

அவர்களை தவிர்த்து எந்த ஒரு பேட்ஸ்மேனும் பெரிய அளவில் ரன்களை குவிக்காததால் பெங்களூரு அணி 126 ரன்களில் சுருண்டு அதிர்ச்சி அளித்தது. பின்னர் 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடி லக்னோ அணியானது இந்த எளிய இலக்கினை விரட்டி அசத்தலான வெற்றியை பெரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

Maxwell

அவ்வேளையில் துவக்கம் முதலே தடுமாறிய லக்னோ அணியானது 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே குவித்தது. இதன் காரணமாக பெங்களூரு அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது மட்டுமின்றி 16 ஆண்டுகள் கழித்து மாபெரும் சாதனை ஒன்றினையும் நிகழ்த்தியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் பெங்களூரு அணி குறைந்த ரன்களில் எதிரணியை சுருட்டிய ஒரு சாதனையாகவும் சமன்செய்துள்ளது. ஏற்கனவே பெங்களூரு அணியானது கடந்த 2008 ஆம் ஆண்டு சென்னை மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை அணிக்கு எதிராக 127 ரன்களை மட்டுமே டார்கெட்டாக வைத்து சென்னை அணியை வீழ்த்தியது.

இதையும் படிங்க : வீடியோ : விராட் கோலியுடன் சண்டை, ராகுல் சமாதானத்தை தாண்டி கை கொடுக்க மறுத்த ஆப்கானிஸ்தான் வீரர் – காரணம் இதோ

அதேபோன்று தற்போது 16 ஆண்டுகள் கழித்து லக்னோ அணிக்கு எதிராக அவர்களது மைதானத்திலேயே 127 ரன்களை மட்டும் டார்கெட்டாக வைத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தற்போது வீழ்த்தியுள்ளது. இப்படி 127 ரன்கள் என்கிற குறைந்த ரன்களை டார்கெட்டாக வைத்திருந்தாலும் அதை வைத்தே அவர்கள் லக்னோ அணியை சுருட்டியது அனைவரது மத்தியிலும் பாராட்டினை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement