RCB vs RR : கடைசி ஓவரில் ராஜஸ்தான் எடுத்த தவறான இம்பேக்ட் முடிவால் அஸ்வின் – ஜுரேல் போராட்டம் வீண், ஆர்சிபி திரில் வெற்றி

RR vs RCB
- Advertisement -

இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான 2023 டி20 கிரிக்கெட் தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் நடைபெற்ற 32வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. ஸ்பெஷலான பச்சை நிற ஜெர்ஸியில் விளையாடிய பெங்களூரு அணியை விராட் கோலி தலைமை தாங்கி நிலையில் டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதைத்தொடர்ந்து களமிறங்கிய பெங்களூருவுக்கு முதல் ஓவரின் முதல் பந்திலேயே விராட் கோலியை கோல்டன் டக் அவுட்டாக்கி மிரட்டிய ட்ரெண்ட் போல்ட் அடுத்து வந்த சபாஷ் அகமதையும் 2 (4) ரன்களில் காலி செய்தார்.

அதனால் 12/2 என ஆரம்பத்திலேயே தடுமாறிய அந்த அணியை அடுத்த களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் உடன் இணைந்து மற்றொரு தொடக்க வீரர் டு பிளேஸிஸ் அதிரடியாக விளையாடி சரிவை சரி செய்தார். 13.2 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 127 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்து பெங்களூருவை முழுமையாக மீட்டெடுத்த இந்த ஜோடியில் டு பிளேஸிஸ் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 (39) ரன்களில் ரன் அவுட்டாக அடுத்த சில ஓவர்களில் கிளன் மேக்ஸ்வெல் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 77 (4 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

இருப்பினும் அதை பயன்படுத்திய ராஜஸ்தான் அடுத்து வந்த மஹிபால் லோம்ரர் 8 (6), தினேஷ் கார்த்திக் 16 (13), பிரவுதேசாய் 0 (2) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கி கம்பேக் கொடுத்தது. அதனால் 200 ரன்களை அடிக்கும் வாய்ப்பை நழுவ விட்ட பெங்களூரு 20 ஓவர்களில் 189/9 ரன்கள் எடுக்க ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக சந்திப் சர்மா, ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். அதைத்தொடர்ந்து 190 ரன்களை துரத்திய ராஜஸ்தானுக்கு முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே ஜோஸ் பட்லர் டக் அவுட்டாகி ஏமாற்றத்தை கொடுத்தார்.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய தேவதூத் படிக்கல் மற்றொரு தொடக்க வீரர் யஎஸ்எஸ்வி ஜெய்ஸ்வாலுடன் இணைந்து அதிரடியாக 2வது விக்கெட்டுக்கு 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து சரிவை சரி செய்த போது 7 பவுண்டரி 1 சிக்சருடன் 52 (34) ரன்கள் ஆட்டமிழந்தார். அடுத்த சில ஓவர்களிலேயே 5 பவுண்டரி 2 சிக்சருடன் ஜெய்ஸ்வால் 47 (37) ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து வந்த கேப்டன் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாட முயற்சித்து 22 (15) ரன்களில் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் கடைசி 4 ஓவரில் ராஜஸ்தானின் வெற்றிக்கு 61 ரன்கள் தேவைப்பட்ட போது பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நம்பிக்கை நட்சத்திரம் சிம்ரோன் ஹெட்மையர் 3 (9) ரன்னில் ரன் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தார். இருப்பினும் இளம் வீரர் துருவ் ஜுரேல் அதிரடியான பவுண்டரிகளை பறக்க விட்டதால் வெற்றியை நெருங்கிய ராஜஸ்தானுக்கு கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவைப்பட்டது. ஹர்ஷல் படேல் வீசிய அந்த ஓவரின் முதல் பந்தில் பவுண்டரியை பறக்க விட்ட அஸ்வின் 2வது பந்தில் 2 ரன்கள் எடுத்து 3வது பந்திலும் அதிரடியான பவுண்டரியை தெறிக்க விட்டு 4வது பந்தில் 12 (6) ரன்களில் அவுட்டானார்.

அதனால் கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்ட போது ஜேசன் ஹோல்டர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இம்பேக்ட் வீரராக களமிறங்கிய பசிஸ்த் சிங்கிள் எடுத்தார். கடைசி பந்தில் சிங்கிள் மட்டுமே எடுத்த துருவ் ஜுரேல் 34* (16) ரன்கள் எடுத்தும் வெற்றிகரமாக பினிஷிங் செய்ய முடியவில்லை.

- Advertisement -

அதனால் 20 ஓவர்களில் ராஜஸ்தானை 182/6 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெறும் 7 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் படேல் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். இந்த போட்டியில் விராட் கோலி டக் அவுட்டாகியும் டு பிளேஸிஸ் – மேக்ஸ்வெல் ஆகியோர் அதிரடிக்கு பின் கடைசி நேரத்தில் தடுமாறிய பெங்களூரு வெற்றிக்கு 20 ரன்கள் குறைவாகவே எடுத்தது. ஆனால் அதை ஆரம்பத்திலேயே பட்லரை டக் அவுட்டாக்கி சரி செய்த பெங்களூரு ஹெட்மயரை ரன் அவுட் செய்த தருணம் போட்டியில் திருப்ப முனையை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: RCB vs RR : ஏப்ரல் 23இல் தயவு செஞ்சு ஆர்சிபி மேட்ச் வைக்காதீங்க – விராட் கோலியின் மோசமான சாதனையை கலாய்க்கும் ரசிகர்கள்

அதனால் துருவ் ஜுரேல் போராடியதை போல தம்மால் முடிந்தளவுக்கு போராடிய அஸ்வின் இடத்தில் அவர் இருந்திருந்தால் நிச்சயம் வெற்றியில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருப்பார். அதை விட 2 பந்தில் 9 ரன்கள் தேவைப்பட்ட போது வெஸ்ட் இண்டீஸ் அதிரடி வீரர் ஜேசன் ஹோல்டரை விட்டுவிட்டு அறிமுக வீரரான பசிஷத்தை இம்பேக்ட் வீரராக ராஜஸ்தான் களமிறக்கியது அந்த அணியின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

Advertisement