RCB vs RR : ஏப்ரல் 23இல் தயவு செஞ்சு ஆர்சிபி மேட்ச் வைக்காதீங்க – விராட் கோலியின் மோசமான சாதனையை கலாய்க்கும் ரசிகர்கள்

Virat Kohli Trent Boult
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 தொடரில் ஏப்ரல் 23ஆம் தேதி மதியம் 3.30 மணிக்கு பெங்களூருவில் இருக்கும் புகழ் பெற்ற சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 32வது லீக் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு புள்ளி பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. அந்த போட்டியில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ஸ்பெஷலான பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கிய பெங்களூருவை மீண்டும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி கேப்டனாக தலைமை தாங்கினார். குறிப்பாக 2019க்குப்பின் சின்னசாமி மைதானத்தில் விராட் கோலி பெங்களூருவை வழி நடத்தியது அந்த அணி ரசிகர்களை கொண்டாட வைத்தது.

அந்த நிலையில் டாஸ் வீசுவதற்கு முன்பாக விராட் கோலி – சஞ்சு சாம்சன் ஆகியோர் மரக்கன்றை பரிசாக கொடுத்துக் கொண்டனர். அதை தொடர்ந்து டாஸ் வென்ற ராஜஸ்தான் முதலில் பந்து வீசுவதாக அறிவித்ததை களமிறங்கிய பெங்களூருவுக்கு முதல் ஓவரில் அதிரடியான வேகத்தில் ஸ்விங் செய்து ட்ரெண்ட் போல்ட் வீசிய முதல் பந்துக்கு பதில் சொல்ல முடியாத விராட் கோலி எல்பிடபிள்யு முறையில் கோல்டன் டக் அவுட்டானார். குறிப்பாக 2019 உலகக்கோப்பை அரையிறுதியில் அவுட்டானது போலவே அவரை எல்பிடபிள்யூ முறையில் ட்ரெண்ட் போல்ட் அவுட்டாக்கியது இந்திய ரசிகர்களுக்கு பழைய நினைவை கொடுத்தது.

- Advertisement -

மேட்ச் வைக்காதிங்க:
அதன் வாயிலாக ஐபிஎல் தொடரில் தன்னுடைய 10வது டக் அவுட்டை விராட் கோலி பதிவு செய்தார். அந்த 10இல் 7 முதல் பந்திலேயே அவுட்டான கோல்டன் டக் அவுட்டாகும். அதன் வாயிலாக ஐபிஎல் வரலாற்றில் அதிக முறை கோல்டன் டக் அவுட்டான 4வது வீரர் என்ற பரிதாப சாதனையும் படைத்தார். அந்த பட்டியல்:
1. ரசித் கான் : 10
2. சுனில் நரேன் : 9
3. ஹர்பஜன் சிங் : 8
4. விராட் கோலி/கம்பீர்/அமித் மிஸ்ரா/ராயுடு/மந்தீப் சிங் : தலா 7

மேலும் கடந்த 2022 சீசனில் இதே போல பச்சை நிற ஜெர்சியுடன் விளையாடிய போதும் விராட் கோலி கோல்டன் டக் அவுட்டாகியிருந்தார். அதை விட கடைசியாக ஏப்ரல் 23ஆம் தேதி அவர் விளையாடிய 3 ஐபிஎல் போட்டிகளிலும் தொடர்ந்து கோல்டன் டக் அவுட்டாகியுள்ளார். அது மட்டுமல்லாமல் ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை ஏப்ரல் 23ஆம் தேதி அவர் விளையாடிய 5இல் எந்த போட்டியிலும் 20 ரன்களை கூட தாண்டியதில்லை. அந்த பட்டியல்:
1. 16 (16) ரன்கள் : ராஜஸ்தானுக்கு எதிராக, 2012
2. 11 (9) ரன்கள் : புனேவுக்கு எதிராக, 2013
3. 0 (1) : கொல்கத்தாவுக்கு எதிராக, 2017
4. 0 (1) : ஹைதெராபாத்துக்கு எதிராக, 2022
5. 0 (1) : ராஜஸ்தானுக்கு எதிராக, 2023*

- Advertisement -

அப்படி தொடர்ந்து ஏப்ரல் 23ஆம் தேதி அவர் சுமாராக செயல்பட்டு வருவதால் அந்த தேதியில் குறிப்பாக பச்சை ஜெர்சியுடன் பெங்களூரு விளையாடுவதை தவிர்க்க வேண்டுமென ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கலப்பலப்பை வெளிப்படுத்துகிறார்கள். அதைத்தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் அடுத்து வந்த சபாஷ் அஹமத் 2 (4) ரன்களில் அவுட்டாகி சென்றதால் 12/2 என ஆரம்பத்திலேயே தடுமாறியது.

இருப்பினும் அடுத்த களமிறங்கிய கிளன் மேக்ஸ்வெல் மற்றொரு தொடக்க வீரர் பஃப் டு பிளேஸிஸ் உடன் இணைந்து பவர் பிளே ஓவர்களில் அதிரடியாக செயல்பட்டு நேரம் செல்ல செல்ல நகரமாக நின்று ராஜஸ்தான் பவுலர்களை சிறப்பாக எதிர்கொண்டு 13.2 வரை நிலைத்து நின்று 127 ரன்கள் மெகா பார்ட்னர்ஷிப் அமைத்தனர். அதில் டு பிளேஸிஸ் 8 பவுண்டரி 2 சிக்ஸருடன் 62 (39) ரன்களில் ரன் அவுட்டாக அடுத்த சில ஓவர்களிலேயே கிளன் மேக்ஸ்வெல் 6 பவுண்டரி 4 சிக்சருடன் 77 (44) ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதையும் படிங்கவீடியோ : அண்ணன் என்ன தம்பி என்ன, நேரலையில் ஸ்லெட்ஜிங் செய்து கொண்ட பாண்டியா பிரதர்ஸ் – கடைசியில் பொங்கிய பாசம்

ஆனால் அடுத்து வந்த தினேஷ் கார்த்திக் 16 (13), மஹிபால் லோம்ரர் 8 (6), பிரபுதேசாய் 0 (2) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களை சொற்ப ரன்களில் அவுட்டாக்கிய ராஜஸ்தான் சிறப்பான கம்பேக் கொடுத்தது. அதனால் 20 ஓவர்களில் பெங்களூரு 189/9 ரன்கள் எடுத்த நிலையில் ராஜஸ்தான் சார்பில் அதிகபட்சமாக ட்ரெண்ட் போல்ட், சந்தீப் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

Advertisement