LSG vs RCB : காலம் கடந்த பின் வந்த ராகுல், சவாலான பிட்ச்சில் லக்னோவை குறைவான இலக்கை வைத்தே ஆர்சிபி மடக்கிய எப்படி

LSG vs RCB
- Advertisement -

ஐபிஎல் 2023 டி20 கிரிக்கெட் தொடரில் மே 1ஆம் தேதி இரவு 7.30 மணிக்கு லக்னோவில் நடைபெற்ற 43வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்ததை தொடர்ந்து களமிறங்கிய அந்த அணிக்கு 9 ஓவர்கள் வரை நிலைத்து நின்று 62 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தாலும் தடுமாற்றமாகவே செயல்பட்ட விராட் கோலி 3 பவுண்டரியுடன் 31 (30) ரன்களில் ஆட்டமிழந்தார். மறுபுறம் கேப்டன் டு பிளேஸிஸ் நங்கூரமாக நின்ற போதிலும் மறுபுறம் அனுஜ் ராவத் 9 (11), கிளன் மேக்ஸ்வெல் 4 (5), பிரபுதேசாய் 6 (7) என முக்கிய பேட்ஸ்மேன்கள் சீரான இடைவெளிகளில் ஒற்றை இலக்க ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

பொதுவாகவே லக்னோ மைதானம் இந்த சீசனில் ஆரம்பம் முதலே பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்து வரும் நிலையில் 10 ஓவருக்கு பின் இப்போட்டியில் லேசாக மழை குறுக்கிட்டு சென்றது பிட்ச்சை மேலும் பேட்டிங்க்கு சவாலாக மாற்றியது. அதனால் மறுபுறம் அதிரடியாக விளையாட முயற்சித்த டு பிளேஸிஸ் 1 பவுண்டரி 1 சிக்சருடன் 44 (40) ரன்கள் ஆட்டமிழக்க கடைசி நேரத்தில் தினேஷ் கார்த்திக் 16 (11) மஹிபால் லோம்ரர் 3 (4) என லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் சொற்ப ரன்களில் அவுட்டாகி பின்னடைவை கொடுத்தனர்.

- Advertisement -

அதனால் 10 ஓவரில் 62/0 ரன்கள் எடுத்த பெங்களூரு 20 ஓவரில் 126/9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் லக்னோ சார்பில் அதிகபட்சமாக நவீன்-உல்-ஹக் 3 விக்கெட்கள் சாய்த்தார். அதைத்தொடர்ந்து 127 என்ற சுலபமான இலக்கை துரத்திய லக்னோவுக்கு முகமது சிராஜ் வீசிய முதல் ஓவரிலேயே கெய்ல் மேயர்ஸ் டக் அவுட்டான நிலையில் அடுத்து வந்த க்ருனால் பாண்டியா 14 (11) ரன்களில் நடையை கட்டினார்.

அதை விட காயமடைந்த ராகுலுக்கு பதிலாக இம்பேக்ட் வீரராக களமிறங்கிய ஆயுஸ் படோனி 4 (11) ரன்களில் அவுட்டாகி தாக்கத்தை ஏற்படுத்தாமல் சென்ற நிலையில் தீபக் ஹூடா 1 (2) நிக்கோலஸ் பூரான் 9 (7) மார்கஸ் ஸ்டோனிஸ் 13 (19) என அடுத்து வந்த முக்கிய பேட்ஸ்மேன்களும் சவாலான பிட்ச்சில் பெங்களூருவின் நேர்த்தியமான பந்து வீச்சில் அதிரடி காட்ட முடியாமல் சீரான இடைவெளியில் சொற்ப ரன்களில் அவுட்டாகி பெரிய பின்னடைவை கொடுத்தனர். போதாக்குறைக்கு மறுபுறம் 1 பவுண்டர் 2 சிக்சரை பறக்க விட்டு நம்பிக்கை கொடுத்த கிருஷ்ணப்பா கௌதம் அவசரப்பட்டு 23 (13) ரன்களில் ரன் அவுட்டானார்.

- Advertisement -

அதனால் 77/8 என சரிந்த லக்னோவின் வெற்றி கேள்விக்குறியான போது அமித் மிஸ்ராவுடன் ஜோடி சேர்ந்த நவீன்-உல்-ஹக் நிதானமாக விளையாடி 9வது விக்கெட்டுக்கு 26 ரன்கள் பார்ட்னர்சிப் அமைத்து 2 பவுண்டரியுடன் 13 (13) ரன்கள் குவித்து கடைசி நேரத்தில் ஆட்டமிழந்தார். அதனால் லக்னோவின் வெற்றி பறிபோன நிலைமையில் கடைசி 8 பந்துகளில் 24 ரன்கள் தேவைப்பட்ட போது காயத்திற்கு தேவையான முதலுதவிகளை எடுத்துக்கொண்டு கேப்டனாக கேஎல் ராகுல் களமிறங்கியது ரசிகர்களின் பாராட்டுகளை பெற்றது.

இருப்பினும் 3 பந்துகளை எதிர்கொண்டு ரன் எதுவும் எடுக்காத அவருடன் விளையாடிய அமித் மிஸ்ரா 19 (30) ரன்களில் அவுட்டானதால் 19.5 ஓவரில் 108 ரன்களுக்கு லக்னாவை சுருட்டி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு சார்பில் அதிகபட்சமாக கரண் சர்மா மற்றும் ஜோஸ் ஹேசல்வுட் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

- Advertisement -

முன்னதாக பேட்டிங்க்கு மிகவும் சவாலான லக்னோ பிட்ச்சில் அதிர்ஷ்டவசமாக டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பேட்டிங் செய்யும் சரியான முடிவை எடுத்து வெற்றிக்கு போராடும் அளவுக்கு 126 ரன்களையும் எடுத்தது. மேலும் 10 ஓவருக்கு மேல் மழை வந்ததால் பிட்ச் பேட்டிங்கு அதிக சவாலாக மாறியதை பயன்படுத்தி நேர்த்தியாக பந்து வீசிய பெங்களூருவுக்கு பதில் சொல்ல முடியாமல் லக்னோ சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்து பரிதாபமாக தோற்றது.

இதையும் படிங்க: MI vs RR : நான் செஞ்சுரி அடிக்கும்போது அந்த விஷயமே தெரியல. ஆட்டநாயகன் யாஷஸ்வி ஜெய்ஸ்வால் – அளித்த பேட்டி இதோ

இது போன்ற பிட்ச்களில் அல்வா சாப்பிடுவது போல் தடவலாக பேட்டிங் செய்து வெற்றியை பெற்றுக் கொடுக்கக்கூடிய ராகுல் ஆரம்பத்திலேயே காயத்தால் களமிறங்காதது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. ஒருவேளை காலம் கடந்த பின் வராமல் சற்று முன்கூட்டியே அவர் களமிறங்கியிருந்தால் வெற்றி கிடைத்திருக்கலாம்.

Advertisement